இயற்கையாக நம் உடல் எடையை குறைக்கும் வழிகள்

how to reduce weight naturally and stay fit with this tips

நம் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் நம்முடைய சோம்பேறித்தனம் தான் இவைகள் இரண்டையும் அழித்தால் நிச்சயம் நம்மால் உடல் எடையை அதிகமாக குறைக்க முடியும்.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது இக்காலத்தில் மிக முக்கியமான ஒன்று இதை பின்பற்றாதவர்கள் நிச்சயமாக குண்டாக அல்லது தொப்பையுமாக இருப்பார்கள் ஒரு நாளைக்கு நாம் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் அப்படி இல்லை எனில் நம் உடம்பில் கலோரிகள் அதிகரித்து கொழுப்புக்களை உண்டாக்கி உடல் பருமன் அடைந்து விடுவோம் 

உடற்பயிற்சி என்றவுடன் பயப்பட வேண்டாம் நாம் கடுமையான பொருட்களை தூக்கியோ அல்லது நம் உடலை வாட்டி வதக்கி செய்யப்படும் உடற் பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் இதற்கு பதிலாக தினமும் காலை மற்றும் காலை 30 நிமிடங்கள் நீங்கள் நடந்தாலே போதும் அப்படி இல்லை எனில் தினமும் 15 நிமிடம் வேகமாக ஓடுங்கள் இதைத் தவிர்த்து உங்களுக்கு தெரிந்த மிக எளிமையான வளைவு நெளிவு உடற்பயிற்சிகளை செய்யுங்கள் இது எதுவும் உங்களால் செய்ய முடியாது என்றால் வீட்டில் இருக்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள் உங்கள் உடலுக்கு தேவையான சக்திகள் இதன் மூலம் கிடைத்துவிடும் முடிந்தவரை ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காமல் அவ்வப்போது ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் நகறுங்கள்.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

உணவுகள்

உணவு என்ற உடனே உங்களுக்கு தெரிந்திருக்கும் நாம் எந்த உணவை அடியோடு அழிக்க வேண்டுமென்றால் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் உதாரணத்திற்கு மேற்கத்திய நாடுகளிலிருந்து நம் கலாச்சாரத்திற்கு வந்திருக்கும் பீட்சா, பர்கர் மற்றும் பதப்படுத்திய உணவுகள் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும் இதற்கு பதிலாக இயற்கை காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை நாம் சாப்பிட்டால் நிச்சயம் உடல் எடையை நம்மால் குறைக்க முடியும் உணவில் எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்றவற்றை முடிந்த அளவு குறைவாகப் பயன்படுத்துங்கள்  இதை பின்தொடர்ந்தாள் நிச்சயம் நீங்கள் மிக விரைவில் ஒல்லியாக மாறிவிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன