மோசமான நிலையில் இருக்கும் உங்கள் காதலை எப்படி காப்பாற்றுவது?

  • by
how to recover your love from bad condition

காதலுக்குள் சண்டைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஒரு சில சண்டைகள் நம் மன உளைச்சலினால் சிறிதாகக் துவங்கி மிகப்பெரிய புயலாக மாறிவிடும். ஆனால் ஒரு முறை உறவுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அதை சரிசெய்வது என்பது மிகக் கடினம். எனவே எப்போதும் உங்கள் உறவிக் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை முன்பே அறிந்து கொள்வது சிறந்ததாகும்.

காதலின் எதிர்பார்ப்பு

எல்லாம் ஒரு உறவுகளிலும் ஒருவித எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். அதுபோல் தான் காதலும். உங்கள் காதலன் அல்லது காதலி உங்களிடம் பெரிதாக எதிர்பார்ப்பது, உங்களின் நேரம் தான். நீங்கள் எவ்வளவு நேரம் அவர்களுக்காக செலவு செய்கிறீர்களோ, அவ்வளவு நெருக்கமாக உங்கள் காதல் இருக்கும். அதை தவிர்த்து ஒருவரை ஒருவர் சந்திக்காமல் பேச்சுவார்த்தை இல்லை என்றால் காதலர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்கு உங்கள் துணையுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்.

மேலும் படிக்க – ஈர்ப்பு விதியை தன் வசப்படுத்த நாம் செய்ய வேண்டிய செயல்கள்..!

காதலில் ஏற்படும் ஏமாற்றங்கள்

காதலில் முடிந்தவரை வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை தவிர்க்க வேண்டும். ஒரு முறை நீங்கள் ஏதாவது வாக்குறுதியை கொடுத்து அதை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அது இறுதிவரை உங்களை பின்தொடரும். எந்த ஒரு பிரச்சனை உங்களுக்குள் ஏற்பட்டாலும் அந்த வாக்குறுதிதான் முதலில் வாக்கு வாதத்திற்கு வரும். எனவே காதல் மோசமான நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு இது போன்ற வாக்குறுதிகளை குறையுங்கள்.

உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் உறவுகளுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை எப்படி சரி செய்வது எப்படி என்று பாருங்கள். அதை தவிர்த்து அந்த பிரச்சினைகளினால் ஒருவருக்கு ஒருவர் சண்டை இடுவது, காதல் உறவை முறித்து விடும். எனவே உங்கள் காதலுக்குள் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை ஒரு பிரச்சினையாக பார்த்து இருவரும் அதை எப்படி எதிர்கொண்டு சரி செய்வது என்பதை பாருங்கள். அதை தவிர்த்து அந்த பிரச்சினையினால் உங்களுக்குள் சண்டை இடாதீர்கள்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள்

உங்கள் துணையின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதிலிருந்து ஒதுங்கி இல்லாமல், அந்தப் பிரச்சினையை உங்கள் பிரச்சினையாக நினைத்து அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லை என்றாலும் அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். அதை தவிர்த்து அந்த பிரச்சினையை பொருட்படுத்தாமல் உங்கள் பிரச்சினையை அவர்களுக்கு முன் வைக்காதீர்கள்.

மேலும் படிக்க – காதலர் தினத்தை வேறு வழியில் கொண்டாடுவது எப்படி?

காதல் முறிவு

காதல் முடியும் வரை உங்கள் உறவில் சண்டை நீடித்தால் அதை தடுக்க முயற்சி செய்யுங்கள். ஒரு உறவு முடிவு வரை செல்கிறது என்றால் அந்த உறவு ஆரோக்கியமானதாக இருக்காது. அதை தவிர்த்து உங்கள் காதல் பொய்யாகி மற்றவர்களுக்கு வேடிக்கையாகிவிடும். எனவே உறவு முறிவு வரை சென்றால் அதற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள். அப்படி போதுமான காரணம் இல்லை என்றால் உங்கள் உள்ளத்தில் இருப்பது உண்மையான காதல் அல்ல. எனவே உண்மை காதல் எப்போதும் முடிவு வரை செல்லாது, அப்படியே சென்றாலும் அந்தக் காதல் மீண்டும் ஒன்றிணையும்.

எனவே காதல் எப்போதும் ஒவ்வொரு கட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக் கொண்டே இருக்கும். இதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப நாம் வாழ்வதே சிறந்தது. அதை தவிர்த்து தங்கள் காதலன் அல்லது காதலி மாறிவிட்டார்கள் என்று குறைகூறி காதல் முறிவை முன்வைக்கக் கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன