நம்மைச் சுற்றி உள்ள காற்றை சுத்தப்படுத்தும் வழிகள்..!

  • by
how to purify the air in your surroundings

நம்முடைய வாழ்வுக்கு மிக அவசியமானது தான் சுவாசக் காற்று. இது எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும். இது போன்ற காற்று மாசடைந்து அதை நாம் சுவாசித்தால் நமது நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய் போன்ற பகுதிகளில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நம் வீட்டில் மற்றும் சுற்றுச்சூழலில் இருக்கும் காற்றை எப்படி சுத்தமாக வைக்கலாம் என்பதை காணலாம்.

காற்றோட்டமான சூழல் 

வீட்டில் இயற்கை காற்று சூழலும் வகையில் ஜன்னல்களை திறந்து இருக்க வேண்டும். ஒரு சிலர் வீட்டினுள் கொசுக்கள் வரக்கூடாது என்பதற்காகவும், வெளியில் இருக்கும் ஒரு சிலர் துர்நாற்றப் பிரச்சனை கைகளினாலும் வீட்டை முழுமையாக அடைத்து வைத்திருப்பார்கள். இதன் மூலமாக உங்கள் வீட்டினுள் கார்பன் டை ஆக்சைடின் உற்பத்தி அதிகரித்து உங்கள் சுவாசத்தை பெரிதாக பாதிக்கும். எனவே இது போன்ற பிரச்சினைகள் வர விடாமல் தடுப்பதற்கு போதுமான பாதுகாப்புகளுடன் வீட்டில் உள்ள காற்று வரும் இடங்களை திறந்த வெளியில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

மெழுகுவர்த்திகள்

நம் வீட்டில் சுவாசத்தின் அளவை அதிகரித்து அதிலிருக்கும் நச்சுத்தன்மையை குறைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டது தான் வேக் மெழுகுவர்த்திகள். இதை வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டின் சுவாச அளவை அதிகரிக்கும். எனவே ஆர்கானிக் பொருட்கள் விற்கப்படும் இடங்களிலும் கிடைக்கக்கூடிய இதுபோன்ற மெழுகுவர்த்தியை வாங்கி பயன்படுத்துங்கள்.

உப்பு விளக்கு

உப்புகளால் செய்யப்படும் விளக்குகளை பயன்படுத்தி உங்கள் வீட்டிலுள்ள காற்றை சுத்தப்படுத்தலாம். உப்பு விலக்கும் ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கும் இடங்களில் கிடைக்கும். இதை வாங்கி எரிய வைப்பதன் மூலமாக வீட்டில் உள்ள நச்சுத் தன்மைகள் விலகும். ஆனால் இதை எரிய வைத்த பிறகு மீண்டும் அணைப்பது அவசியம்.

நிலக்கரி

உயர்தரம் கொண்ட நிலக்கரிகலை வீட்டில் வைப்பதன் மூலமாக நம்முடைய சுற்றுச்சூழல் மற்றும் வீட்டினுள் இருக்கும் காற்றின் நச்சுத் தன்மையை குறைக்கும். எனவே இதுபோன்ற நிலைகரிகளை வாங்கி வீட்டை சுற்றி வைப்பதன் மூலமாக உங்கள் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் தூய்மையாக இருக்கும்.

சப்பாத்தி கள்ளி செடிகள்

சப்பாத்தி கள்ளி செடிகளில் எந்த ஒரு உபயோகமும் இல்லாமல் இருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய சுற்றுச் சூழலில் அமைந்துள்ள காற்றின் மாசு தன்மையை குறைக்க சப்பாத்தி கள்ளி செடி உதவுகிறது. சப்பாத்தி கள்ளி செடியை நம் வீட்டை அலங்கரிப்பதற்காக பயன்படுத்துகிறோம். இது போல் இருக்கும் செடிகளை நாம் காற்று குறைவாக உள்ள இடத்தில் வைத்துவிட்டால் காற்றை தூய்மைப்படுத்தும் வேலைகளை செய்து விடும். அதேபோல் பாலைவனம் மற்றும் வெளியிடத்தில் இருக்கும் சப்பாத்தி கள்ளிச்செடிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.

இயற்கை எண்ணெய்களை கொண்டு விளக்கேற்றலாம்

இயற்கை எண்ணெய் என்று கருதப்படும் கிராம்பு, பட்டை, ரோஸ்மேரி எண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தி விளக்கேற்றினால் உங்கள் காற்றின் தன்மையும் சுத்தமாகும்.

மேலும் படிக்க – சின்ன வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

செய்ய வேண்டியவை

காற்றை சுத்தப்படுத்துவதில் எவ்வளவு முக்கியமோ அதேபோல் காற்றை மாசு படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இதற்கு நாம் முடிந்தவரை வாகனங்களை தேவை இல்லாத சமயங்களில் அணைத்து வைக்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் காற்றின் மாசுக்களை உற்பத்தியாகும் செயல்களை செய்யாமல் இருந்தாலே நமது காற்று சுத்தமாக இருக்கும்.

காற்றில் எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் எந்தக் கெட்ட தொற்றுகளும் பரவாது. எனவே நம்முடைய ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக நாம் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன