காதல் இப்படி சொல்லும் பொழுது இன்பம் பொங்கும்..!

காதல்

உலகில் நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு காரணங்களை கொண்டுள்ளது, அதில் மிக அழகான காரணமாக கருதப்படுவது காதல். மற்ற வெளிபாடினால் நல்லதும் நடக்கலாம் கெட்டதும் நடக்கலாம் ஆனால் ஒருவர் மற்றொருவரிடம் காதலை வெளிப்படுத்தும் போது அது இருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் புரியாத ஓர் அழகான உணர்வை ஏற்படுத்தும்.

நாம் அதிகமாக காதலித்து வருபவர்களிடம் காதலை வெளிப்படுத்துவது என்பது சவாலான காரியமாகும்.

காதலை காணுங்கள்

நீங்கள் ஒருவருக்கு உங்கள் காதலை வெளிப்படுத்த விரும்பினீர்கள் என்றால் அவர் உங்களை காதலிக்கிறார.? இல்லையா.? என்பதை முதலில் கண்டறிவது மிக அவசியம். உங்களை அவர் காதலிக்கிறாரா என்பதை அவர்களின் நண்பர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு எந்த அளவிற்கு உங்களை காதலிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இதைப் பொறுத்து தான் உங்கள் காதலை நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

மேலும் படிக்க – தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

உங்களைப் போலவே அவர்களும் உங்களை முழுமையாக நேசிக்கிறார் என்றால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அதனால் உங்களை அவர் காதலிக்கவே இல்லை, ஆனால் உங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உங்கள் காதலில் என்னவெல்லாம் நடக்கலாம் என்ற எண்ணத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். ஒருவேளை அது தோல்வி அடைந்தால் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு புன்னகையுடன் எதிர் கொள்பவர்களே பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும்.

காதலை வெளிப்படுத்தும் வழிகள்

நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை காதலிக்கிறார் என்றால் அவர்களிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை பரிசாக வாங்கிச் செல்வது நல்லது. அதேபோல் காதலை வெளிப்படுத்துவதற்கு இருவரும் கடைசிவரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அழகான ஒரு இடத்திற்கு அழைத்து சென்று உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.

நீங்கள் காதலை வெளிப்படுத்த போகிறீர்கள் என்ற எண்ணத்தை அவருக்குள் உருவாக்க வேண்டும். உங்கள் காதலி அல்லது காதலனை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு சிறிய துருப்புகளை வழங்கிய கொள்வது நல்லது. இதன் மூலமாக நீங்கள் காதலை வெளிப்படுத்தும் பொழுது அவர் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை சிந்தித்து வைத்துக் கொள்வார்.

உங்கள் மனம் கவர்ந்த நபர் உங்களிடம் காதலை சொல்கிறார்கள் என்றால் நீங்கள் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் மற்றவர்களிடம் காதலை வெளிப்படுத்துங்கள். 

மேலும் படிக்க – உடலுறவுக்குப் பின் தம்பதியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!

உங்கள் காதலியின் கண்களைப் பார்த்து அழகான புன்னகையுடன் முகம் மலர உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இச்சமயங்களில் பெண்களின் கைகளை தவிர வேறு எங்கேயும் தொடக்கூடாது, அப்படியே அவர் உங்கள் காதலை ஏற்றுக் கொண்டால் உடனே அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன் என்று எந்த உரிமையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுதான் உங்கள் காதல் உறவை வலுவாக்க உதவும்.

காதலில் ஏற்படும் பக்கவிளைவு

உங்கள் காதலன் அல்லது காதலி உங்களை முழுமையாக காதலிக்கிறான் என்று தவறாக எண்ணி அவரிடம் உங்கள் காதலை சொன்னீர்கள் என்றால் அது நிராகரிக்கப்படும். இதனால் உங்கள் காதல் முயற்சி தோல்வி அடையும். அதை முழு தோல்வியாக எண்ணிக்கொண்டு உங்கள் காதலன் அல்லது காதலியை துன்புறுத்துவது, அவரை வெறுப்பது போன்ற செயல்கள் உங்கள் காதல் அர்த்தமற்றதாக உணர்த்திவிடும். எனவே இதுபோன்ற செயல்களை செய்யாமல் காதல் தோல்வியுற்றால் பரவாயில்லை எனது காதல் உறுதியானது நிச்சயம் இந்த காதல் வெற்றி பெறும் என்ற மன உறுதி இருந்தால் மட்டுமே உங்கள் காதல் வெற்றி அடையும்.

காதலும் பரிசுகளும்

என் காதல் பொருட்கள் சம்பந்தப்பட்ட காதல் அல்ல, பணத்தைப் பொருத்து என் காதல் மதிப்பிடாது என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் அதை அப்படியே தூக்கி குப்பையில் போடுங்கள். ஏனென்றால் காதலில் இதுபோன்ற எண்ணங்கள் இருக்காது ஆனால் உங்கள் காதலிக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் காதல் வலுவடையும். நீங்கள் நினைப்பதைப் போல் எந்த பொருளும் காதலை உணர்த்த தேவையில்லை என்று எடுத்துக்கொண்டால் அப்படி எந்த வகையில் உங்கள் காதலை வெளிக்காட்டுவீர்கள்.? உடனே முத்தங்கள், தழுவல்கள் போன்ற வகைகளில் உங்கள் காதலை வெளிக்காட்ட லாம் என்று நினைப்பீர்கள். ஆனால் இது அனைத்தும் இலவசமாக கிடைக்கக்கூடிய பொருள். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

உங்கள் காதலை வெளி காட்டுவதற்காக கிடைக்காத அரிய பொருட்களை அவர்களுக்கு பரிசாக அளிப்பதே சிறந்ததாகும். அதை தவிர்த்து உங்களால் செய்ய முடிந்த கைவினைப் பொருட்களை செய்து கொடுப்பதன் மூலமாக நீங்கள் அவர் மேல் எந்த அளவிற்கு காதல் வைத்துள்ளீர்கள் என்பதை உணர்த்தும். அதேபோல் உங்களுக்கு தெரியாத ஒன்றை அவர்களுக்காக கற்றுக்கொண்டு அதை அவர்களுக்கு செய்து காட்டும் போது உங்கள் காதல் வலுவடையும்.

மேலும் படிக்க – ஆணாதிக்கம் கொண்ட ஆண்களை அறிவதற்கான வழிகள்.!

நிலையான காதல்

காதலிக்கும் முன்புவரை நமக்குள் ஒரு அற்புதமான உணர்வு இருக்கும். அதுவே காதலை சொல்லி சில மாதங்கள் வரை அந்த உணர்வு நீடிக்கும். ஆனால் காலங்கள் செல்லச் செல்ல உங்கள் காதல் உணர்வுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். இதனால் நீங்கள் முதல்முறையாக அந்தப் பெண்ணை எப்படி நேசித்தீர்களே அது அப்படியே தலைகீழாக மாறும். இதுபோன்ற சமயங்களில் உங்கள் எண்ணங்களில் சேர்த்து உங்கள் காதலியை முன்பை போலவே பார்க்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், உங்கள் காதல் குறைந்துள்ளது என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு வந்தால் உங்கள் உறவுக்குள் சண்டைகள் ஏற்படும். இதுவே காதல் பிரிவதற்கான வழிகளை அமைத்துத்தரும். எனவே காதலன் மற்றும் காதலியை கடைசி வரை ஒரே நிலையாக காதலியுங்கள். அப்படி முடியவில்லை என்றால் அது காதலாக இருக்க முடியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன