வாழ்ந்து பாருங்கள் வானம் உங்கள் வசம் வரும்

  • by

மன அழுத்தம் என்பது  மனிதர்களகளாகப் பிறந்த அனைவருக்கும் உண்டு அதனை நாம்  கடந்து வந்துதான் ஆக வேண்டும். நீங்கள் என்ன வேலை செய்தாலும், வேலையே செய்யாமல் விட்டாலும் உங்களுக்கு சும்மா இருப்பதால் ஒரு அழுத்தம் என்பது உருவாகும். நாட்டில் 80 சதவீகிதத்திற்கு மேற்பட்டோர் இது போன்ற சிக்கலில் ஈடுபடுகின்றனர்.  

 மன அழுத்த வகைகள்: 

மன அழுத்தமானது வயதிற்கு சார்ந்த  துறைக்கு ஏற்ப மாறுபடும். சார்ந்த சூழலில் இருக்கும் இலக்குகள் ஒவ்வொன்றும் வேறுபட்டிருக்கும் அதனை நாம் இனம் கண்டுபிடித்து செயல்பட வேண்டும். 

பள்ளி  மாணவர்களுக்கு படிக்க வேண்டும். அதிகபட்சமான பாடங்கள், மதிபெண்கள்  பள்ளி, டியூசன், போட்டி வெற்றி, முதலிடம் போன்ற இலக்குகள் அவர்களை ஓய்வில்லாமல் ஓட வைக்கும். 

மனித மனதானது மகத்தானது, அதனை மென்மையாக நாம் கையாள வேண்டியது அவசியம்  ஆகும். ஓய்வில்லாமல் நீங்கள் ஓடும் ஓட்டதிற்கு இயற்கையே உங்களை ஓட்டத்தில் இருந்து நிறுத்திவிடும்.  

மேலும் படிக்க: வாழ்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வழிகள்

பெண்களுக்கு பிறந்தது முதல் அவர்களுக்கு மட்டும் ஆயிரத்து கட்டுப்பாடுகள்  மற்றும் முறைகள் என கட்டுபிடிகள் அதிகமாக இருக்கும். பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி, நல்ல வேலை, நல்ல கணவன், பிள்ளைகள் வளர்ப்பு, குடும்ப பராமரிப்புகள், சுற்றத்தாருடன் கலந்து செயல்படுதல் ஆகியவை அனைத்தும் நாம் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டியது   இருக்கும். 

ஆண்களுக்கு ஆண் என்பதால் அந்தளவிற்கு  கெடுபிடிகள் எல்லாம் இருக்காது. அதிக படியான வீட்டில் ஆண்களுக்கு கட்டுப்பிடிகள் என்பது இருக்காது.  இப்பொழுதுதான் ஆண்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கும்.   வீட்டில் தலைவராக வழி நடத்த வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் ஆண்களின் தலையின் விழுகின்றது. ஆண்கள் வலிமை வீரம் பொருந்தியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதிகமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

மகிழ்ச்சி

 நாம் தரும் வாய்ப்பு: 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பல்வேறு விதமான அழுத்தங்கள் நாட்டில் உலாவுகின்றன இந்தியா போன்ற நாட்டில் இதெல்லாம் இப்பொழுதுதான் வந்துள்ளது. மன வலிமை கொண்டவர்கள் என்றால் அது இந்தியர்கள்தான் என்ற நிலை இருந்தது. நமது  உணவு, பழக்க வழக்கம், குடும்பம், சமுதாயம் ஆகிய அனைத்தும் நம்மை அவ்வாறு நம்மை உருவாக்கியிருந்தது. இன்று அனைத்திலும் மாற்றம் பெற்றுள்ளோம். இது அனைவரும் உணர வேண்டும். 

மேலும் படிக்க: ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை..!

கொண்டாடுங்கள: 

துக்கமோ, சோகமோ, அழுகையோ அல்லது வேதனையோ, வெறுப்போ அதனை வெளிக்காட்டிக் கொண்டால் நமக்குள் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் வெளியேறும்.  உலகில் உங்களை தவிர வேறு யாரும் கொண்டாட முடியாது ஆகவே, உங்களை நீங்களே கொண்டாடுங்கள். உள்ளூக்குள் ஆருடம் என்பது அவசியமானது ஆகும். உங்களுள் நீங்களே ஊக்கமாக இருக்க வேண்டும்.  எதுவந்தாலும் தட்டிக் கொடுங்கள், என்னால் முடியும் என நினையுங்கள் எல்லாம் உங்கள் வசம் வரும். உள்ளிருந்து உங்களை வெளியே எடுங்க்ள் 

மகிழ்ச்சி

 மகிழ்ச்சி: 

தலைவர் சினிமாவில் சொல்வது போல் அனைத்தும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள் எந்தளவிற்கு மகிழ்ச்சியோடு அனைத்தையும் ஏற்கின்றிகளோ அந்த அளவிற்கு நீங்கள்  வாழ்வில் அனைத்தையும் கடந்து போவீர்கள். வாழ்வில் எப்பொழுதுய் பரந்த மனமுடன் இருங்கள், அனைவரிடமும் அன்பு பாரட்டுங்கள், அன்பு, பங்கீடு, புன்னகை ஆகியவை  போதும் வாழ்வை அது சுபிட்சம் ஆகும். வாழ்க்கையில் உங்களுடன் வாழ்பவர்கள் யாரானாலும் அதனை போவர்கள் யாரானாலும் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். வலியை முழுமையாக ஏற்கும் உங்களால்தான்  வாழ்கையை அனுபவிக்க முடியும். 

மேலும் படிக்க: உங்கள் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன