ஆபிசில் நட்புடன் இருக்க இதை கவனியுங்கள்

  • by

அலுவலகத்தில்  அன்றாடம் இருக்க வேண்டியது என்னவெனில் பரஸ்பர பரிமாற்றம் மற்றும் அலுவலகப் பணிக்கான ஒருங்கிணைப்பு அவசியம் ஆகும்.  ஒரு ஆற்றல் வாய்ந்த செயலை செய்யும் அனைவருக்கும் அங்கிகரிக்கும் பொழுது அழகான தேடல் கிடைக்கப் பெறலாம். 

அலுவலகத்தில் அன்பு ஒற்றுமை:

உங்கள் ஆபிசில் ஒற்றுமை, பரஸ்பரம்  சக மனிதப் பண்புகள் பரவி இருக்க வேண்டும் அது எந்தளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்கு  பணியானது சுமுகமாக இருக்கும். உங்கள் அலுவலகத்தில் கடுமையான உழைக்கும் உழைப்பாளியை எப்பவும் கரெக்ட்டா பயன்படுத்துங்க, நீங்கள் அவர்கள் வேலையை அங்கிகரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை அநாவசியமாக கெடுக்காதீர்கள். 

அலுவலகம்

நட்பு பாராட்டுங்கள்: 

நட்பு பாராட்டுங்கள் உங்களது சக ஊழியருடன் நட்பு பாராட்டுவது அவசியம் ஆகும். நட்பு பாராட்டுங்கள்  அதுதான் அலுவலகத்தின் பணிக்கு அவசியமானது ஆகும். நீங்கள் செய்யும் பணியில் சரியாக இருக்கும் பொழுது  எதற்காகவும் நாம் ஒருவர் மற்றொருவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும் படிக்க: மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

பெரியவர்  சிறியவர்: 

பெரியவர் சிறியவர் என பாகுபாடுகள் தேவையில்லை. நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் பண்புடன் செயல்படுங்கள் அது நன்மை பயக்கும். உங்களது  பணி சிறக்கும். ஆபிசில் இருக்கும் அரசியல் என்பது பணியாளர்க்கு அவசியம் இல்லை. வேலையில் வழிகாட்ட வேண்டியது மட்டுமே போதுமானது ஆகும். ஆனால் அதைவிட்டு  சுற்றத்தாரிடம் நான் யார், நான் தான் அனைத்தும் தெரிந்தவர் என்று இடக்கு முடக்கு செய்வது சரியா சிந்தியுங்கள். இன்று ஒருவரை நீங்கள் ஆட்டிப் படைத்தால் நாளை வேறு ஒருவர் உங்களை ஆட்டிப்  படைப்பார் என்பதை அறிந்து செயல்படுங்கள். எதை இன்று ஒருவருக்கும் விதைக்கின்றோமோ அதனை நாம் நாளை மற்றொருவருக்கு அறுவடை செய்ய வேண்டியது வரும். ஆகையால் சிந்துத்து செயலாற்றவும். 

அலுவலகம்

 காது கொடுத்து கேளுங்கள்: 

காது கொடுத்து  கேளுங்கள் அதனை நாம் செயல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். எந்தளவிற்கு நாம் சரியாக இயங்குகின்றோமோ அந்த அளவிற்கு நமது  பணியானது சிறக்கும். உங்கள் பணியை செய்யும் பொழுது உங்கள் சகமாக பணியாற்றுவோர்க்கும் தெரிந்த விசயங்கள் பேச வையுங்கள் அது நன்மை பயக்கும்.  அவருக்கு தெரிந்த பணி குறித்த அம்சங்கள் நீங்கள் கற்கலாம். நாம் அலுவலகத்தில் கோலோச்சி இருக்க வேண்டும் என்ற உங்களுடைய எண்னம் எத்தனை நாட்களுக்கு வரும் என்று யோசியுங்கள் அதன்படி செயல்படுங்கள். 

மேலும் படிக்க: உங்கள் தினசரி வாழ்க்கையை இப்படி வாழுங்கள்..!

அலுவலக அரசியல்: 

அலுவலகத்தில்  சீனியர் ஜூனியர்  என்ற பாகுபாடுகள் காட்டுவது  பண்பானது வேலை செய்யும் இடத்தில் பணியை சிறப்பாக செய்வது நலம் பயக்கும். ஆனால் அதற்காகவே  நான் சொல்வதுதான் சட்டம் என்பது எவ்வளவு சரி என்பதை யோசிக்க வேண்டும். சீனியர் சொல்லும்   அறிவுரைகள் பணிக்கு எந்தளவிற்கு உபயோகரமாக இருக்கும் என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள். நலம் பயக்கும் எனில் சீனியருக்குரிய அந்த  மதிப்பை கொடுத்து ஏற்கவும். அதே போன்றே ஏற்க முடியாத கருத்தானால் அதனை பொறுமையாக தெரிவிக்கவும். 

அலுவலகம்

ஆபிஸ் அரசியல் எல்லா இடங்களிலும் ஒத்துப் போகாது என்பது அறிந்திருத்தல் அவசியம் ஆகும். ஒருவருக்கொருவர் போட்டு கொடுத்து லாபம் எதுவும் இராது. நட்பு பாராட்டி செய்யும்   பணியானது ஆபிசை உயர்த்தி நம்மையும் உயர்த்தும். 

மேலும் படிக்க: மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன