பதின்பருவத்தில் இருப்பவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி..!

  • by
how to motivate youngsters for good future

இளம் பருவம் என்பது மிக ஆபத்தான பருவம், அப்பருவத்தில் பயங்கள் இல்லாமல் தாங்கள் செய்யும் எல்லா செயல்களும் சரியானது என்று கண்ணை மூடிக்கொண்டு செய்வார்கள். ஆனால், அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும். எனவே இதைத் தடுப்பதற்கு இளம் வயதினரை நாம் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

போதுமான சுதந்திரங்கள் அளியுங்கள்

சிறுவர்களாக இருந்து இளம்பருவம் வருபவர்களின் சில மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் அதேநேரம் தனிமையை விரும்புவார்கள், தங்களுக்கென தனி இடம், தனி அறை போன்றவைகளை எதிர்பார்ப்பார்கள். இதை உங்கள் கண்காணிப்பில் அவர்களுக்கு அமைத்து தாருங்கள்.

மேலும் படிக்க – இந்திய தேசத்தின் பாதுகாப்பு வாரம்..!

மனம் விட்டுப் பேசுங்கள்

உங்கள் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அவர்களை கண்டிப்பதை தவிர்த்து அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். எதனால் அவர்கள் இந்த செயலை செய்தார்கள், எதனால் இப்படி மாறியது என்பதை அறிந்து அதற்கான பதிலை தாருங்கள். அதை தவிர்த்து அவர்களை கண்டிப்பதனால் அவர்களைப் பற்றிய தெளிவு உங்களுக்கு கிடைக்காது.

எல்லோர் முன்னிலையிலும் பாராட்டுங்கள்

உங்கள் பிள்ளைகளின் செயலை கூர்ந்து கவனியுங்கள், அவர்கள் அதில் எதில் சிறந்தவர்களாக இருக்கிறார்களோ அதற்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். அதில் அவர்கள் சிறிய வெற்றி அடைந்தாலும் அவர்களை பாராட்டுங்கள், அதையும் எல்லோர் முன்னிலையிலும், மற்ற உறவினர்கள் முன்னிலையில் பாராட்டுவது சிறந்தது. அதே போல அவர்கள் ஏதேனும் தவறுகள் செய்தார்கள் என்றால் அதை மன்னித்து அதனால் பெற்ற அனுபவத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

கஷ்டப்பட வையுங்கள்

எதையும் எளிதில் அளித்து விடாதீர்கள். இளம் வயதினர்கள் சரியான அனுபவங்கள் பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு கஷ்டத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதற்காக போதுமான அளவு பணத்தை தாருங்கள், பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிய வையுங்கள். நம்மை சுற்றி உள்ளவர்கள் நிலைமையைப் பற்றி யோசிக்க கற்றுத் தாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரூபாயை சம்பாதிப்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், அதனால் யாரெல்லாம் பயன் அடைகிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

சேமிக்க கற்று தாருங்கள்

சேமிப்பின் அவசியத்தை உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். இதனால் அவர்கள் பெரும் ஆதாயம் மற்றும் அவர்களின் எதிர்கால சிக்கல்களை தீர்ப்பதற்கு சேமிப்பு எவ்வாறு உதவும், அதைத் தவிர்த்து இதன் மூலமாக இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்பதை உணர்த்துங்கள்.

மேலும் படிக்க – தோட்டங்களை பராமரிப்பதற்கான ஆலோசனைகள்..!

அவர்களை மதிக்க கற்றுத் தாருங்கள்

எல்லோரையும் சமமாக பார்த்து மதிக்கும் எண்ணங்களை உருவாக்கங்கள். யாரும் உயர்ந்தவர்களும் அல்ல, யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சொற்பொழிவை அவர்களுக்கு அளியுங்கள். ஏழை பணக்காரன் என்று இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதையைக் கொடுத்து மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுத் தாருங்கள்.

இது போல் உங்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து அவர்களுக்கான நல்ல வழியை உருவாக்குங்கள். எல்லாவற்றையும் அவர்களே செய்து சமாளிக்கும் வலிமையை அவர்களுக்கு தாருங்கள். உங்கள் வளர்ப்பு சிறந்தவையாக இருந்தால் உங்கள் பிள்ளைகள் சிறப்பான வர்களாக இருப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன