நேரத்தை திட்டமிடுவது எப்படி.?

  • by
how to manage your time in busy life

நாம் எந்நேரமும் ஏதாவது வேலைகளை செய்து கொண்டே இருப்போம். இதனால் நமக்கான ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய்விடும். நம்முடைய குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும். எனவே நாம் செய்யும் எல்லா வேலைகளையும் அந்தந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு வேலைகளை செய்வதன் மூலமாக நமக்கு ஏராளமான நேரங்கள் மிச்சமாகும். அதை எப்படி கடைப்பிடிப்பது என்பதை காணலாம்.

அதிகாலையில் எழுந்திருங்கள்

ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான நேரம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எழுந்திருக்கும் நேரத்தை மாற்றுங்கள். பொதுவாக நீங்கள் எட்டு மணிக்கு எழுந்திருப்பவராக இருந்தால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக காலை 6 மணிக்கு எழுந்திருங்கள். உங்களுக்கு கூடுதலாக 2 மணி நேரம் கிடைக்கும். இந்த இரண்டு மணி நேரத்தில் உங்களுக்குப் பிடித்த வேலைகளை ஏதாவது செய்யுங்கள். இல்லையெனில் மாலையில் செய்யும் வேலையை காலையில் செய்து மாலையில் ஓய்வெடுங்கள்.

மேலும் படிக்க – ஒழுங்காக அமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது எப்படி..!

திட்டமிடுதல்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அதற்கான நேரம் மற்றும் காலத்தை முன்பு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வேலையையும் அவர் கேட்ட நேரத்தில் முடித்துவிடுங்கள். நீங்கள் வேலையை தாமதமாக முடிப்பதாக இருந்தால் உங்கள் ஓய்வு பாதிப்படையும். இதனால் எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொள்ளுங்கள்.

வேலையில் தெளிவு அவசியம்

நீங்கள் செய்யும் வேலையில் தெளிவானதாக இருக்க வேண்டும். உங்கள் செயல்களில் குழப்பங்கள் அதிகமாக இருந்தால் அது உங்கள் நேரத்தை அதிகரிக்கும். எனவே செய்யப்போகும் எல்லாம் செயல்களுக்கான முன் திட்டங்களை வகுத்து அதை சரியாக செய்யுங்கள். உங்களுக்கு தெளிவு அதிகமாக இருக்கும்பொழுது வேலையும் சுலபமாகும் இதனால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

நிதானமாக இருங்கள்

எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை நிதானமாக செய்யுங்கள். அவசரமாக எது செய்தாலும் அதில் ஏதாவது ஒரு தவறு வந்துவிடும், எனவே அதை மீண்டும் செய்வதற்க்கான நிலை ஏற்படும். எனவே நிதானமாக இருக்கும் போது உங்கள் செயல் தெளிவாக இருக்கும்.

குறுக்குவழி பயன்படுத்துங்கள்

எப்போதும் தந்திரமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலைகளை எப்படி விரைவில் மற்றும் எளிதில் முடிக்கலாம் என்ற யோசனையை மேற்கொள்ளுங்கள். தினமும் ஒரே வேலையை தொடர்ந்து செய்யும் பொழுது அதற்கான குறுக்கு வழியை கண்டுபிடியுங்கள். இதனால் உங்கள் தினசரி வேலை சுலபமாகும், உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.

மேலும் படிக்க – கடினமான சூழ்நிலையை அமைதியாக எதிர்கொள்வது எப்படி?

பிடிக்காததை செய்யாதீர்கள்

உங்கள் வாழ்க்கையில் பல சமயங்களில் மற்றவர்களை சார்ந்து இருக்கும். எனவே உங்களுக்கு விருப்பம் இல்லாமல் யராவது எங்கேயாவது அழைத்தாள் உங்கள் நேரத்தை அவர்களுடன் வீணாக்காதீர்கள். ஒருவருடன் நேரத்தைக் கழிக்கும் போது அல்லது வெளியே செல்லும் பொழுது முதலில் வீணாவது உங்களின் நேரம் தான். அந்த நேரத்தில் நீங்கள் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விடலாம்.

நேரும் என்பது பொன் போன்றது நாம் ஒவ்வொரு நிமிடங்களும் ஏதாவது ஒரு செயலை செய்து வாழ்க்கையை மேம்படுத்தலாம். அதை தவிர்த்து உங்கள் நேரத்தை வீணடித்தாள் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன