வீட்டு நிர்வாக பட்ஜெட் பட்டியல் அவசியமானது

  • by

விட்டை நிர்வகிப்பது  என்பது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சற்று கடினமான காரியமாகத்தான் இருக்கும்.  வீட்டிலுள்ள நபர்கள் மற்றும் அவர்களின் தேவைகள் விருப்பங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு அனைத்தையும் செய்ய வேண்டும். 

ஆடம்பர வாழ்க்கையைவிட அத்தியாவசியம்:

குடும்பத்தை நிர்வகிக்க ஆடம்பர தேவையைவிட அத்தியாவசியத்தை முழுமை அடையச் செய்வதன் மூலம் நமக்கு வேண்டியதை நாம் செய்து கொள்ள வேண்டும்.  அவசர தேவை எது மற்ற தேவை என தெரிந்து நாம் செலவு செய்ய வேண்டும்.

குடும்பத்தினரின் முக்கியம் எது எனப் பார்த்து செலவு  செய்தல் அவசியம் ஆகும். குடும்பத்தில் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் கோச்சிங் கட்டணங்கள் குறித்து அறிந்து செயல்பட வேண்டும். 

மேலும் படிக்க: மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

இல்லறத்தில் மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கான பள்ளி, கல்லூரி கட்டணங்கள் மற்றும் பெரியோர்களுக்கான மருத்துவ செலவுகள் செய்தபின் தான் அந்த  மாதத்தில் செய்யப் போகும் பயணங்கள், சினிமா இதர செலவுகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். 

மேலும் படிக்க: பாக்கெட் நிறையுமா நம்ம பட்ஜெட்டினால்..!

இது போன்ற செலவுகள் குறித்து முன்பே பட்டியலிட்டு வரவுகேற்ற செலவை செய்யும் பொழுது வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுகாது நினைத்தது போல் செலவினை செய்ய முடியும். பிள்ளைகளுக்கு கட்டணச் செலவா  அல்லது அவர்களுக்கான பார்டி செலவுகளா எது முக்கியமானது என ஆராய்ந்து செலவினை கணக்கிடும் பொழுது நம்மால் எளிதாக அனைத்தையும் செய்ய முடியும். 

முக்கியச் செலவுகளின் பட்டியல்:

வீட்டிலுள்ள பெரியோர்களுக்கான மருத்துவ செலவுகள் என்பது மிகவும் அவசியமானது அவர்களுக்கு செய்வதை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் வருமான வட்டத்தில் செலவுக்கு கொடுக்கப்படும் இடம் போல்  சேமிப்புக்கும் இடம் கொடுக்க வேண்டும் சிறுக சிறுக சேமித்தால் பணம் பெருகும். சேமிப்பை நாம் முக்கியமாய் கருதி வேண்டுமென்று எடுத்து வைத்தால்தான் செலவு செய்ய முடியும். 

வீட்டலுள்ளோர்  நபர்கள் வருமானத்தை ஒன்று சேர்த்து கணக்குப் போடும் பொழுது சேமிப்பு மிஞ்சும். செலவு குறையும் அதே போல் வீட்டிலுள்ளோர் அனைவரும் சம்பாதிப்பது அவசியம் ஆகும். ஆணோ பெண்ணோ நிதி சுதந்திரம் அவசியமானது. 

பொருளாதாரத்தில் கொஞ்சம் கராராக  இருக்கும் பொழுது காசு சேர்க்க முடியும் இல்லை என்றால் பற்றாக்குறை பட்ஜெட்தான் போட வேண்டும். கடன் வாங்குவதை முடிந்தவரை நிறுத்திவிடுங்கள் இல்லையேல்  உழைக்கும் காசு அனைத்தும் வட்டிக்காரன் பாக்கெட்டில் துங்கும். 

மேலும் படிக்க: நாள் முழுவது சுறுசுறுப்பாக தேனீ போல் இயங்க இதை செய்யுங்க பாஸ்.!

சேமிப்பு:

சேமிப்பு அதிகமாகும் பொழுது வீட்டிலுள்ளோர் திருமணங்கள், வீட்டில் உள்ள மற்ற முக்கிய நிகழ்வுகள் அதேபோல் இதர செலவுகளை மனமார செய்ய முடியும் இல்லையே ததிங்கநத்தோம்தான் நடக்கும்.

பிஎப் சேமிப்புகள், வரி தொடர்பான பிடிப்புகள் மருத்துவ பாலிசி ஆகியவற்றை எல்லாம் கணக்கில் வையுங்கள். ஆர்டிக்களில் சேமிப்பது அவசியம் ஆகும. அவசர செலவை எல்லாம் அது சமாளிக்க உதவும்.

செலவை குறைக்க வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் சிறு சிறு காய்கறிகள் வைக்கலாம். இதன் மூலம் அந்த காய்கறிகள் வாங்கும் செலவை குறைக்கலாம். மின்சார செலவு அதிகமாகும் பொழுது சோலார் மின்சாரம் பாதி பயன்படுத்தி செலவை குறைக்கப் பார்க்கலாம.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன