முக கவசத்தை வீட்டில் செய்வது எப்படி..!

  • by
how to make mask at home

கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்காமல் இருப்பதற்கு எல்லோரும் தங்கள் முகத்தில் முக முடியை அணியவேண்டும், அதைத் தவிர்த்து 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தங்கள் கைகளைக் கழுவ வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஒருவரிடமிருந்து மற்றொருவர் சமூக இடைவெளியுடன் வாழவேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே உங்களை கொரோனாலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்தொடர்வது போன்றவைகள் மிக எளிதாகவே மனிதர்கள் செய்கிறார்கள். ஆனால் நம் முகத்திற்கு அணியப்படும் கவசங்களில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது.

முகக் கவசம்

சராசரியாக நாம் பயன்படுத்தக்கூடிய முக கவசத்திற்கு என ஆயுட்காலம் தனியாக இருக்கிறது. நீங்கள் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் கவசத்தை அணிந்தால் அது கிட்டத்தட்ட 3 மணி நேரம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அதன் பிறகு நமது சுவாசத்திலிருந்து வெளியாகும் ஈரப்பதமுள்ள காற்றினால் அந்தக் கவசம் செயலற்றதாக மாறும். எனவே சிகிச்சைகளுக்கு மற்றும் மருத்துவமனையில் பயன்படுத்தக்கூடிய முக கவசத்தை நீங்கள் மூன்று மணி நேரம் வரைதான் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – கீழாநெல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

என் 95 முகக்கவசம்

உலகளவில் எல்லாம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடிய முக கவசம் தான் இந்த என் 95. இது கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேல் உங்கள் காற்றை சுத்தப்படுத்தி உங்கள் சுவாசத்தை அதிகரிக்கும். இதைத்தவிர்த்து காற்றிலிருந்து பரவக்கூடிய கிருமிகளை அழித்து உங்கள் சுவாசத்தை தூய்மையாக்க உதவும். ஆனால் இது போன்ற முக கவசத்தின் விலை 300 லிருந்து 1000 ரூபாய் வரை இருக்கிறது, இதை ஏழ்மையானவர்கள் வாங்கிப் பயன்படுத்துவது என்பது அரிது.

மலிவான கவசம்

முகக் கவசத்தை மிக மலிவான விலையில் வாங்குவதை விட வீட்டில் இருக்கும் தேவையற்ற துணிகளைக் கொண்டு நீங்களே அதை செய்யலாம். சிறிதளவு காட்டன் துணியை எடுத்துக் கொண்டு அதை கட்ட வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அதை சுற்றி இருக்கும் பகுதிகளை அரை இன்ச் மடித்து வைத்து விட வேண்டும். பிறகு அதை முன்னும் பின்னுமாக முக அளவிற்கு ஏற்றார்போல் மடித்துக் கொண்டு இடது மற்றும் வலது புறத்தில் மீண்டுமொருமுறை தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் பாதுகாப்பு அதிகரிப்பதற்காக அந்த துணியின் அளவிற்கு ஏற்றார்போல் மற்றொரு துணியை வைத்து தைக்கலாம். பிறகு முக கவசத்தை கட்டுவதற்கான கயிறை தயாரித்து நான்கு புறமும் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதை எப்படி செய்வது என்பதற்கான ஏராளமான காணொளிகள் யூடிபில் இருக்கிறது.

மேலும் படிக்க – சர்க்கரையை விட தேன் சிறந்ததா..!

பாதுகாப்பு

உங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் பணத்தை செலவு செய்யாமல் மலிவான விலையில் இதுபோன்று கவசத்தை நீங்களே தயாரிக்கலாம். சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்தவரை இது போன்ற முக கவசங்களை தயாரித்து மக்களுக்கு இலவசமாக அளித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற கவசங்களை நீங்களும் தயாரித்து அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கலாம். அதே போல் உங்கள் பாதுகாப்பு அதிகரிப்பதற்கும் மற்றும் முகத்திற்கான செலவை குறைப்பதற்காகவும் இந்த வழியை பின் தொடர்ந்து வீட்டிலேயே முக கவசத்தை தயாரிக்கலாம்.

கொரோனா வைரஸ் என்பது மேலும் சில ஆண்டுகள் நாம் வசிக்கும் பகுதிகளிலும் உயிர்வாழும் என ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள், எனவே இது உங்களை தாக்காமல் இருப்பதற்காகவும் உங்கள் எதிர்காலம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அழகாக இருக்க வேண்டுமென்றால் இது போன்று பாதுகாப்பு வழிகளை பின்தொடர்ந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன