வீட்டில் இயற்கை முறையில் காஜலை செய்வது எப்படி.?

  • by
how to make kaajal at home

பெண்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாக மாறி உள்ள பொருள்தான் காஜல். இதை பெண்களை தவிர்த்து குழந்தைகள் மற்றும் ஒரு சில ஆண்களும் இதை பயன்படுத்துகிறார்கள். கண்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் இந்த காஜலை வீட்டில் எளிமையான முறையில் எப்படி தயாரிக்கலாம் என்பதை காணலாம்.

கண் மையின் பயன்கள்

கண்மை போடுவதினால் உங்கள் கண்கள் குளிர்ச்சி அடையும். அதைத் தவிர்த்து கண்களுக்குள் நுழையும் தூசுகளை அகற்றும். கண்களை ஈரப்பதமாக வைத்து எப்போதும் உங்கள் கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும். கண்மை போடுவதினால் உங்கள் கண்கள் மிக அழகாக தெரியும். அதேபோல் குழந்தைகளுக்காக நாம் வசம்புகளின் மூலமாக கண்மையை தயாரிப்போம். இதனால் குழந்தைகளின் புருவங்கள் மற்றும் கண்களில் முடி வளர்ச்சி அதிகரிக்கும், அதை தவிர்த்து அவர்களையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க – சூரியக் கதிர்வீச்சில் இருந்து நம்மை காக்கும் சன்ஸ்கிரீன் லோஷன்..!

காஜல் தயாரிக்கும் பொருட்கள்

காஜல் தயாரிப்பதற்கு நமக்கு தேவையான பொருட்கள் பொன்னாங்கண்ணிக் கீரை, தும்பைப் பூ, விளக்கெண்ணெய், அகல்விளக்கு, விளக்குத்திரி, தட்டு மற்றும் 3 செங்கல்.

கண்மை செய்முறை

நாம் பொன்னாங்கண்ணிக் கீரையை நன்கு அரைத்துக் கொண்டு அதன் சாரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அகல் விளக்கில் திரி வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் பொன்னாங்கண்ணிக்கீரை சாறு, 3 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அதனடியில் 5 தும்ப பூக்களை போட வேண்டும். பின்பு மூன்று செங்கலை அடுப்பை போல் வைத்து அதற்கு நடுவில் அகல் விளக்கை வைத்துவிட வேண்டும். பின்பு அதன் மேல் ஒரு தட்டை வைத்து மூடி விட்டு அந்த விளக்கு முழுவதும் எரிய காத்திருக்கவேண்டும்.

மேலும் படிக்க – சிறிய மேக்கப்பிற்க்கான அறிவுரைகள்..!

இயற்கை கண்மை

5 லிருந்து 6 மணி நேரம் வரை விளக்கு எரிந்த பிறகு அதன் மேல் உள்ள தட்டை எடுத்து பார்த்தாள் தட்டு முழுவதும் கருமையாக இருக்கும். பின்பு அதனுள் இருக்கும் கருமைகளை கரண்டியை கொண்டு சுரண்டி எடுக்கும்பொழுது கண்மை உருவாகும். பின்பு அதனுள் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொண்டு கண்மையாக பயன்படுத்தலாம்.

இதுபோன்ற வீட்டில் செய்யப்படும் கண் மையை நாம் கிட்டத்தட்ட ஒரு வருடம் கூட வைத்து பயன்படுத்தலாம். உங்களுக்கு அதிகமான அளவு கண்மை தேவை என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகளை இதேபோல் வைத்து கண்மாயை தயார் செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன