தற்போதைய பட்ஜெட்டி படி வீட்டு செலவை எவ்வாறு செய்யலாம்..!

  • by
How to Make Home Expenditure as per Current Budget

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் என்று நம்முடைய பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார் ஆனால் சொன்ன அடுத்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமையில் வந்துள்ளது இருந்தாலும் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் விடுமுறை நாட்களாக இருந்தாலும் பிப்ரவரி 1ஆம் தேதி சொன்னபடியே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக அமல்படுத்தினார்.

யாருக்கான நிதியாண்டு

நிதியாண்டு என்பது வரும் வருடம் நமது நாடு மக்கள் மேம்பாட்டிற்காகவும், நாட்டின் மேம்பாட்டிற்காகவும் எவ்வளவு தொகை எதன் வளர்ச்சிக்காக பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவான திட்டத்தின் மூலமாக அமல்படுத்தி செயல்படுத்துவதே நிதி ஆண்டு. இந்த வருடம் பல லட்சம் கோடிகளை நமது நாட்டின் மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் உண்மையில் இது நாட்டு மக்களுக்கு அதாவது ஏழை விவசாயிகளுக்கும் மற்றும் சிறு தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற ஆண்டாக அமையுமா என்றால், நிச்சயம் அமையாது என்றே கூறலாம்.

மேலும் படிக்க – பாக்கெட் நிறையுமா நம்ம பட்ஜெட்டினால்..!

நிதி அறிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகள்

பல வருடங்களாக அரசு நிறுவனமாக இருந்த எல்ஐசி நிறுவனத்தை ஒருசில சதவீதம் மற்றும் மற்ற நிறுவனத்திற்கு விற்க முடிவெடுத்து உள்ளார்கள். இப்படிதான் இந்தியன் ரயில்வே, இவை கடந்த ஆண்டு ஒரு சில சதவீதத்தை தனியாரிடம் விற்றார்கள். அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு பிஎஸ்என்எலையும் இதுபோல் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்‌. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மிகப் பெரிய நஷ்டங்களை சந்தித்து வருகின்றன இதனால் எல்ஐசியை விற்க முடிவு எடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து விவசாயிகளுக்கு கடன் தொகையை குறைத்து அவர்களின் தொழில் வளத்தை அதிகரிக்க அதிகத் தொகையை செலவு செய்ய முடிவெடுத்துள்ளார். ஒரு ஏழைக்கு உதவி வேண்டும் என்றால் அந்த ஏழையின் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும். ஒரு விமர்சகராகவும் அல்லது ரசிகராகவும் அந்த ஏழையின் வாழ்க்கையை ஆராய்ந்து அதற்கேற்ப உதவுவதன் மூலம் அவருக்கு எந்த பயனும் இல்லை. எனவே இந்த நிதி ஆண்டில் ஏழைகளின் கவலையைப் போக்கும் அளவிற்கு எந்த புதிய திட்டங்களும் அமல்படுத்தவில்லை.

வருமான வரி செலுத்துபவர்களுக்கான விளக்கு

இந்த ஆண்டு வருமான வரி ஒரு சில சதவீதம் விலக்கை அமல் படுத்தி உள்ளார்கள். அதாவது கடந்த ஆண்டை விட சில சதவீதம் குறைவாகவே நமது வருமானத்திலிருந்து வரியை எடுக்கிறார்கள். அதேபோல் நீங்கள் ஆண்டு வருமானத்தை 5 லட்சத்திற்கு கீழே உள்ளவர்களாக இருந்தால் உங்களுக்கான வரி எதுவும் செலுத்த தேவையில்லை. அப்படி உங்கள் சம்பளத்தில் இருந்து ஏதாவது வரியை எடுத்துக் கொண்டால் அதன் விளைவாக நீங்கள் மற்ற அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். என புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.


மேலும் படிக்க – இந்திய பாதுகாப்புத்துறையில் பட்டாசு கிளப்பும் பாரதப் பெண்கள்..!

கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் திட்டங்கள்

மற்ற எல்லாத் திட்டங்களையும் விட இந்த நிதி ஆண்டில் அதிக தொகையை கல்வி வளர்ச்சிக்காக செலவு செய்கிறார்கள். அதாவது மருத்துவ படிப்பு, பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற அனைத்திற்க்கும் உதவும் வகையில் இந்த நிதியாண்டு இருக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் அமைத்துத் தர முடிவு எடுத்துள்ளார்

வீட்டின் அன்றாட தேவைக்கு இந்த நிதியாண்டின் படி எப்படி செலவு செய்ய வேண்டும்

நீங்கள் வாங்கும் பொருட்களின் ரசீதை மறக்காமல் உங்களிடம் வைத்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் அதை நகல் எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு ஆண்டில் நீங்கள் செலவு செய்யும் மொத்த தொகையில் எவ்வளவு தொகையை வரியாகச் செலுத்தி உள்ளீர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப நாம் வரிவிலக்கை பெற முடியும்.

உங்கள் வீட்டை சரியாக நிர்வாகிக்கிறீர்கள் என்றான் இந்த ஆண்டு நீங்கள் தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். அதை தவிர்த்து தேவையற்ற பொருட்கள், சலுகைகள் கிடைக்கும் பொருட்கள் மற்றும் விளம்பரங்களை பார்த்து தவறான பொருட்களை வாங்குவதை அனைத்தையும் தவிர்த்து இந்த ஆண்டு சரியான திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

பொருளாதார வீழ்ச்சி அதிகரிக்கும்

கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. ஆனால் இந்த ஆண்டு நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 10 சதவீதம் அதிகரிக்கும் என்கிறார். ஆனால் சாதாரண சராசரி குடிமகன் கூட இந்தியாவின் பொருளாதாரம் 5 அல்லது 6 சதவீதம் தான் அதிகரிக்கும் என்பான் ஆனால் இவர் அதிக அளவிலான தன்னம்பிக்கையின் அடிப்படையில் இப்படி சொல்லியிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழும்பி வருகிறது.

வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் தான் வருமானம் அதிகரிக்கும், வருமானம் அதிகரித்தால்தான் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், வருமானவரி அதிகரிக்கும் பொழுது தான் நமது இந்தியாவின் பொருளாதாரம் அதிகரிக்கும். இதன் மூலமாக தான் நமது அரசாங்கத்திற்கு போதுமான தொகை இயல்பாக வந்தடையும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். புதிய தொழில்கள் அதிகமாக தொடங்கப்பட வேண்டும். இவைகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. எனவே இதற்கான சரியான திட்டங்கள் ஏதும் இல்லாததால் இந்த நிதியான்டை நாம் கடந்து செல்ல வேண்டுடம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன