இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

  • by
how to make face mask with fruits

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு உணவு இயற்கையினால் கிடைக்கக்கூடிய காய் மற்றும் பழங்கள் தான். இதில் பழங்களை நாம் தினமும் சாப்பிடுவதனால் நமது உடல் பலமடங்கு வலுவடையும். இதைத் தவிர்த்து நமது சருமம் பொலிவுடன், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி பழங்களை நாம் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாயினும், அதை முகத்தில் நேரடியாக ஃபேஸ் மாஸ்க் போட்டால் எவ்வளவு நன்மை நமக்கு கிடைக்கும்.

பழங்களில் ஏகப்பட்ட வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன. நம் சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும் போது அதில் இருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து நமது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்கிறது. எனவே இதுபோன்ற பழங்களை கொண்டு நம் முகத்தில் எப்படி ஃபேஸ் மாஸ்க் போடுவது என்பதை காணலாம்.

மேலும் படிக்க – இந்திய ஃபேசன் மார்க்கெட்டில் ஹிட் அடித்த டிரெண்டுகள்..!

தேன் மற்றும் பப்பாளி ஃபேஸ் மாஸ்க்

வருடம் முழுக்க கிடைக்கக்கூடிய ஓர் அற்புதமான பழமே பப்பாளி பழம். இதை தேவையான அளவு எடுத்துக்கொண்டு, அதை நன்கு தேன் ஊற்றி குழைத்து  கொள்ள வேண்டும். பிறகு அதை நம் முகம் முழுக்க தேய்த்து பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு நீரால் கழுவி உங்கள் சருமத்தின் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

பப்பாளி ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை பொலிவாக மாற்றலாம், இதனால் சூரிய ஒளியின் தாக்கம் நேரடியாக படுவதை தவிர்க்கலாம், நமது சருமத்தை மினுமினுப்பாக காண்பிக்கும் மற்றும் இது எல்லா பாக்டீரியாக்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. இதில் வைட்டமின் இ இருப்பதினால் உங்கள் சிகப்பு அழகையும் அதிகரிக்கும்.

வாழைப்பழம் ஃபேஸ் மாஸ்க்

எல்லோர் வீட்டிலும் எளிமையாக கிடைக்கும் வாழைப்பழத்தைக் கொண்டு நாம் பேஸ் மாஸ்க் போட முடியும். இதை சாதாரணமாக சாப்பிடுவதன் மூலம் நமக்கு தேவையான ஜீரண சக்தியை தருகிறது, எனவே இதை நம் சருமத்தின் தேய்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத பல மாற்றத்தை நம் சருமத்திற்கு தருகிறது.

வாழைப்பழத்தில், தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நமது சருமத்தின் மீது படும்படி தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி உங்கள் முகம் மாற்றத்தை காணுங்கள்.

இதில் வைட்டமின் பி6 மற்றும் சி இருப்பதினால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது. அதைத் தவிர்த்து இதை எல்லாம் சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

தக்காளி ஃபேஸ் மாஸ்க்

இது ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும், தக்காளியை நாம் காய்கள் வகையில் பயன்படுத்துவோம். ஆனால் இதை பழவகையிலும் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளியில் போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

தக்காளியை நன்கு குழைத்துக்கொண்டு அதில் யார்க்கர்ட் மற்றும் ஓட்ஸ் கலந்து கொள்ள வேண்டும். பிறகு முகம் மற்றும் கழுத்து என முழுவதுமாக இதை தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். பிறகு அதை நீரில் கழுவி உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை உணருங்கள். உங்களிடம் யாக்கர்ட் இல்லை என்றால் அதற்கு பதிலாக பால் அல்லது தேனை கலந்து கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை பொலிவாகவும் மற்றும் சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் தாக்கங்களுக்கு எதிராகவும் செயல்படும்.

ஆரஞ்சு தோல் ஃபேஸ் மாஸ்க்

ஆரோக்கிய குணம் அதிகமாக இருக்கும் ஆரஞ்சு தோல்களை கொண்டு நாம் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம்.

மூன்று ஆரஞ்சு பழத்தில் இருக்கும் தோல்களை உரித்து அதை சிறிது சிறிதாக நறுக்கி மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து விடவேண்டும். பிறகு அதை எடுத்து பொடியாக்கி நமது சருமத்திற்கு தேவையான அளவில் யாக்கர்ட் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவி உங்கள் முக மாற்றத்தை கானுங்கள்.

இது உங்கள் சருமத்தில் இருக்கும் வலிகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும், அதை தவிர்த்து முகப் பருக்கள் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபேஸ் பேக் ஆகும்.

மேலும் படிக்க – அழகை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்..!

வெள்ளரிக்காய் மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்

வெள்ளரிக்காய் உங்கள் கண்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் அதை கொண்டு உங்கள் சரும ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.

வெள்ளரிக்காயின் தோலை உரித்து அதை நன்கு குழைத்து கொண்டு அதில் பால் தேன் மற்றும் கருப்பு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நம் முகம் முழுக்க தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் மிக தெளிவாகவும், அழகாகவும் இருக்கும்.

எண்ணெய் சருமம் மற்றும் வறண்ட சருமம் போன்ற அனைத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக் இதுவாகும். அதைத் தவிர்த்து இது உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை தருகிறது. எனவே இது போல் மிக எளிமையாக கிடைக்கும் பழங்களை கொண்டு உங்கள் முக அழகை அதிகரிக்கலாம்.

இதை தவிர்த்து உங்கள் சரும அழகை அதிகரிப்பதற்காக அவகோடா, கிவி, திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆனால் இது அனைத்தின் விலையும் சற்று அதிகமாக இருப்பதினால் இதிலிருந்து கிடைக்கும் அதே சக்தி மற்றும் ஆற்றலை மேலே குறிப்பிட்டுள்ள பழங்களில் இருந்தும் நாம் பெற முடியும் எனவே வீட்டில் எளிமையான முறையில் பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன