ஆல்கஹால் சானிடேஷனை வீட்டிலிருந்து செய்வது எப்படி..!

  • by
how to make corona sanitization at home

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதினால் நம்முடைய பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு பெரும்பாலான தமிழக மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறார்கள். குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை நிகழுகிறது. இச்சமயங்களில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் உயிரை பணையம் வைத்துதான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறார். அவர் பாதுகாப்பாக வீடு திரும்பியவுடன் முதலில் செய்யவேண்டியவை தங்கள் கைகளை சனிடேஷன் மூலமாக கழுவ வேண்டும். ஆனால் மளிகைப் பொருள்களை ஒப்பிடுகையில் இப்போது சனிடேஷனின் விலை அதிகரித்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் வாழ்பவர்கள் இந்த விலைவாசியை கட்டுப்படுத்த ஒரு எளிய வழியில் சனிடேஷனை வீட்டிலேயே தயாரிப்பது தான்.

வல்லுநர்களின் அறிவுரை

நாம் மருந்தகத்தில் வாங்கப்படும் சனிடேஷன் கிருமிகளை 50% மட்டுமே கொள்கிறது ஆனால் கொரோனா வைரஸ் போன்ற கிருமிகள் அழுவதற்கு இது போதுமானதாக இருந்தாலும் 100% பாதுகாப்பு தேவை என்றால் நம் வீட்டில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஆல்கஹாலை வைத்து செய்யப்படும் சனிடேஷனில்தான் கிடைக்கும். இது போன்ற பாதுகாப்பான முறையில் சனிடேஷன் எப்படி செய்வது என்பதை பல மருத்துவ வல்லுனர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். அதன் வழியில் இங்கே ஒரு சில சனிடேஷன் செய்து பயன்பெறலாம்.

மேலும் படிக்க – பழச்சாற்றின் சிறப்பு அதன் பயன்கள்

வீட்டில் சனிடேஷன்

சனிடேஷன் செய்வதற்கு நமக்கு தேவையான முதல் பொருள் ஆல்கஹால், இது மதுபானக் கடையில் கிடைக்கும் ஆல்கஹால் அல்ல. மருந்தகத்திற்கு சென்று சனிடேஷன் செய்வதற்காக விற்கப்படும் ஆல்கஹாலை வாங்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் வலிமை வாய்ந்தது எனவே இதை ருசிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அதை உடனே தவிர்த்து விடுங்கள். பின்பு ஆலுவேரா செடியிலிருந்து அந்த ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அத்தியாவசிய எண்ணெய்,  டீ ட்ரீ எண்ணெய், லாவண்டர் எண்ணெய் போன்றவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். இது எதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எலுமிச்சை சாறை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

சனிடேஷன் செய்முறை

உங்களுக்கு எந்த அளவு சனிடேஷன் தேவையோ அதில் மூன்றில் இரண்டு பங்கு நீங்கள் ஆல்கஹாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஆலுவேரா ஜெல் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அப்படி அத்தியாவசிய எண்ணெய் இல்லை என்றால் எலுமிச்சை சாரை போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நன்கு கலந்து அதை சனிடேஷன் பாட்டிலில் ஊற்றிக் கொண்டு தினசரி இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

இதில் தேவைப்பட்டால் நீங்கள் கிராம்பு எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது புதினா எண்ணெய்களை சேர்த்துக் கொள்ளலாம். இது கிருமிகளை அழிக்க கூடுதல் பலத்தை நீங்கள் தயாரித்த ஸ்டேஷனுக்கு அளிக்கும்.

மேலும் படிக்க – வேப்ப எண்ணெயின் பயன்கள் அறிவோம் வாங்க!

சாதாரணமாக நீங்கள் 100 எம்எல் சனிடேஷன்ய் வாங்க வேண்டும் என்றால் அதன் விலை 200 தொட்டுவிடும். கொரோனா வைரஸ் பாதிப்பு தொற்றுகள் அதிகமாக இருக்கும் நிலையில் நாம் சுமாராக ஒரு லிட்டர் வரை சனிடேஷனய் வாங்கி பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். இதனால் நீங்கள் 2,000 ரூபாய் வரை சனிடேஷனுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படும். எனவே இதைத் தவிர்த்து வெறும் 200 ரூபாயில் அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சனிடேஷனய் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். மருந்தகத்தில் நீங்கள் வாங்கப்படும் பொருட்களின் விலை அதிகமாக இருந்தால் உடனடியாக அரசாங்கத்திடம் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன