உடல் வெப்ப நிலையில் சீராக இருக்க இதை கடைப்பிடியுங்கள்!

how to maintain your body temperature

குளிர்காலம் முடிந்து கோடை காலம் துவங்குவதினால் நமது உடல் உஷ்ணம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் குளிர் காலத்தில் நமது உடல் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சிறிதளவு சூட்டை உண்டாக்கி இருக்கும். அதுவே கோடை காலம் வரும்பொழுது அந்த சூட்டை உடனடியாக குளிர்ச்சி அடையாமல் வெப்பம் அதிகமாக இருக்கும். நாளடைவில் இந்த வெப்பமானது நம் உடம்பில் இருக்கவேண்டிய 98.6 டிகிரி வெப்பத்தை விட அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் நமது உடலில் பல பிரச்சனைகள் மற்றும் உபாதைகள் ஏற்படலாம். இதை தடுத்து நமது உடலை எப்படி குளிர்ச்சியாக வைப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

நமது உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நாம் அதிகமான நீர் ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும். நீராகாரம் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது குடிநீர்தான். ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அருந்துவதன் மூலம் நமது உடல் உஷ்ணம் அடையாமல் எப்போதும் சமநிலையில் இருக்கும். அதேபோல் ஒருசில உணவுப் பொருட்களின் மூலமாக நமது உடல் உஷ்ணத்தை குறைக்க முடியும் அது என்னவென்று பார்க்கலாம்.

மேலும் படிக்க – பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள்..!

தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடல் உஷ்ணத்தை தவிர்த்து உங்கள் உடலில் எந்த வரட்சியும் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவும். இதில் 90 சதவீதம் நீர் இருப்பதினால் கோடை காலத்திற்கு ஏற்ற பழமாகும்.

முலாம்பழத்தில் அதிக நீர் சத்து கொண்டுள்ளது. எனவே இதை நாம் கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதற்கு பயன்படுத்தலாம். அதேசமயம் இதை நாம் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் இதன் குளிர்ச்சியால் உங்களுக்கு ஜலதோஷம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வெள்ளரிக்காயை நமது கண்கள் குளிர்ச்சி அடைவதற்காக பயன்படுத்துகிறோம். அதேபோல் இதனால் உங்கள் உடல் குளிர்ச்சி அடையும், வறட்சியையும் போக்குகிறது. இயற்கை வைத்தியங்களில் உடல் வெப்பத்தை தணிப்பதற்க்காகவே புதினாவை பயன்படுத்துகிறார்கள். எனவே இந்த புதினாவை சிறிது அளவு உணவில் சேர்ப்பது மட்டுமல்லாமல் இதை பழச்சாறு அருந்தலாம் இதனால் உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் உஷ்ணம் தணியும்.

முள்ளங்கியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதுமட்டுமல்லாமல் இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உங்களின் உடல் வெப்பத்தை தணித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

எள்ளு, சீரகம், கசகசா, வெந்தயம் இவைகளும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருட்களாகும் எனவே இதை பொடியாக்கி சமையலில் பயன்படுத்தலாம். இல்லையெனில் அப்படியே கூட மோரில் கலந்து சாப்பிடலாம்.

கோடைகாலம் வந்துவிட்டாலே நாம் அதிகமாக பயன்படுத்தப்படுவது மாதுளை பழச்சாறு தான். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் வெப்பம் சீராகும்.

மேலும் படிக்க – வாழ்வை இனிமையாக்கும் வாழையிலை குளியல்!

கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என எல்லாக் காலங்களிலும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான பங்கை வகிப்பது இளநீர். இது இயற்கை பானமாக கருதப்படுகிறது. இதை நாம் குடிப்பதன் மூலம் நம் சருமம், கூந்தல் அழகு மற்றும் உடல் உஷ்ணம் போன்ற அனைத்திர்க்கும் தீர்வளிக்கும்.

எனவே உடல் வெப்பம் அடைவதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதை உடனடியாக குணப்படுத்துவதற்கு இதுபோன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் சாதாரண உடல் வெப்பம் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். உதாரணத்திற்கு, மஞ்சள்காமாலை, மூலம், டைபாய்ட் போன்ற வியாதிகளை உண்டாக்கும். எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன