லாக்டவுன் சமயத்தில் உங்களை அழகாக வைத்துக் கொள்வது எப்படி..!

  • by
how to maintain your beauty during corona virus lockdown

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் முடக்கத்தில் உள்ளது. இச்சமயத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய சிகை மற்றும் முக அலங்காரங்கள் ஏதும் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். இதற்கு காரணம் அழகு நிலையங்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தப்படும் சலூன் போன்றவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து ஆண்கள் தங்களை தானே அழகுபடுத்தி கொள்வார்கள், இல்லை எனில் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பெண்கள் ஒரு சில நாட்களில் தங்கள் முகங்களை பராமரிக்கவில்லை என்றால் அவர்கள் முகத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் சிறிய முடிகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது, இதை வீட்டில் இருந்தபடி எப்படி தடுக்கலாம் என்பதை காணலாம்.

முகத்தை அலசும் நீர்

அதிகாலை எழுந்தவுடன் உங்கள் முகத்தை சுத்தமான நீரில் அலசும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அந்த நீரைத் தவிர்த்து எலுமிச்சைச்சாறு, வெள்ளரிக்காய் மற்றும் புதினா மூலமாக செய்யப்படும் நீரில் முகத்தை கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தையும் அகற்றவும். நீங்கள் இரண்டு லிட்டர் தண்ணீருடன் நறுக்கிய வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த நீரில் தினமும் உங்கள் முகத்தை கழுவலாம்.

மேலும் படிக்க – சந்தன பயன்பாடு அழகு பொழிவை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்

உங்கள் வீட்டில் போதுமான அளவு தேங்காய் எண்ணெய் இருந்தால் அந்த தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடாக்கி கொள்ளுங்கள். பின்பு அதை உங்கள் விரல் நுனிகள் தொட்டு முகம் முழுக்கத் பொட்டு போல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் விரல்கள் மூலமாக மெதுவாக முகம் முழுக்கத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் முகத்தில் உள்ள ரத்த ஓட்டம் சீராகி முகத்தை எப்போதும் பொலிவாகவு, புத்துணர்ச்சியாகும் வைத்துக் கொள்ளும்.

எலுமிச்சை மற்றும் ஆலுவேரா

வீட்டில் எலுமிச்சை பழம் இருந்தால் அதை பாதியாக துண்டித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வெளியாகும் சாரை நம் முகம் மற்றும் சருமத்தில் எல்லா பகுதிகளிலும் நன்கு தேய்த்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் கழித்து அதை வெதுவெதுப்பான நீரில் சுத்தப்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்திற்கும், உடலுக்குப் பொலிவைத் தரும். அதேபோல் ஆலுவேரா ஜெல்லை உங்கள் சருமம் முழுக்க தேய்க்க வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு.

மஞ்சள் பேஸ்ட்

மஞ்சள் தூளுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ள வேண்டும், இதை நன்கு கெட்டியாகும் வரை குழைத்துக்கொண்டு உங்கள் முகம் முழுக்க தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும், பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை செய்வதன் மூலமாக உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளும் அழிந்து மீண்டும் உருவாகாமல் தடுக்கும் மற்றும் முகப்பரு, கரும்புள்ளி போன்ற அனைத்தையும் குணப்படுத்தும்.

தேன் மற்றும் உருளைக்கிழங்கு

வீட்டில் தேன் இருந்தால் அதை எடுத்து உங்கள் முகம் முழுக்க மசாஜ் செய்யும் வகையில் விரல் நுனியை பயன்படுத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவை தந்து உங்கள் முகத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும். அதேபோல் உருளைக்கிழங்கை பாதியாக துண்டித்து அதிலிருந்து வெளியாகும் சாறினை உங்கள் முகம் முழுக்கத் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.

மேலும் படிக்க – ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..!

ஓட்ஸ் மற்றும் தக்காளி

ஓட்ஸடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும். அதை நன்கு கெட்டியாகும் வரை குழைத்துக் கொண்டு முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதேபோல் தக்காளியில் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும். அதையும் முகம் முழுக்க ஃபேஸ் மாஸ்க் போல் போட்டுக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் மூலமாக உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உங்கள் அழகு அதிகரிக்கும்.

இதைத் தவிர்த்து ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ்வாட்டர் போன்றவைகள் மூலமாகவும் உங்கள் முகத்தை பொலிவாக்கலாம். இதைத் தவிர்த்து தினமும் நீங்கள் க்ரீன் டீ குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி உங்கள் சருமத்தை அழகாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன