குளிர்சாத்னப் பெட்டியினை குளிரும்படி யூஸ் பண்ணூங்க.!

how to maintain the refrigerator in your house

குளிர்சாதன பெட்டியின் பயன் மற்றும் பராமரிக்கும் முறைகள்.

குளிர்சாதன பெட்டி நம் வீட்டில் ஒரு நபர் போல எப்போதும் நமது வீட்டிற்குள் நின்று கொண்டே இருக்கும், இதன் தேவையும் அதிகம். வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒருமுறையாவது நம் வீட்டில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்ப்பார்கள். இதனால், இதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் இது மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் அதேபோல் நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து இதனுள் வைக்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மேல் கிருமிகளை பரப்பிவிடும். இதை எப்படி நாம் சரியாக பராமரிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

நம் வீட்டில் இருக்கும் குளிர்சாதனைப் பெட்டியை நாம் அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்க வேண்டும். அதனுள் இருக்கும் குளிர்ச்சித்தன்மை வெளியேறி மீண்டும் குளிர்விக்க முயற்சி செய்வதினால் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் உங்கள் மின் கட்டணமுன் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!

குளிர்சாதனைப் பெட்டியை சுவர் அணைத்தவாறு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் இதன் பின்புறங்களில் படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்தவாறு இருக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யும்போது ஈரத்துணியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை உலர்ந்த துணியை பயன்படுத்துங்கள். உள்ளே சுத்தம் செய்வதற்கு முன் மின்சாரத்தை துண்டித்து முழுமையாக துடைத்து பின் கதவை சில மணி நேரம் திறந்து வைப்பது நல்லது.

ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வதற்கு நாம் சோப்பு நீரை பயன்படுத்தக் கூடாது. மேலும் பயன்படுத்தினால் சோப்புகள் உள்ளே பரவி பிளாஸ்டிக்கை பலவீனமாக்கும். இதற்க்கு நாம் சோடா பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.

ஒருசிலரின் பிரிட்ஜில் துர்நாற்றம் வீசும் இதை தவிர்ப்பதற்கு நாம் உள்ளே புதினா இலைகள் அல்லது அடுப்புக்கரி மற்றும் எலுமிச்சை துண்டுகளை வைக்கலாம்.

தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கான எளிய வழியை பார்ப்போம். தயிரை நன்கு கடைந்து பின்பு அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடவேண்டும். சில மணி நேரம் கழித்து பார்த்தால் தயிரின் மேல் வெண்ணை பிரிந்து வந்திருக்கும்.

அதிகமான சப்பாத்தி மாவை பிசைந்து விட்டால் கவலை வேண்டாம். அதன்மேல் ரீபைண்ட் ஆயிலை தடவி பிரிட்ஜில் வைத்தால் குறைந்தது நான்கு நாட்கள் வரை அது பிரஷ்ஷாக இருக்கும். அதேபோல் வெங்காயத்தை பிளாஸ்டிக் பைகளில் போட்டு பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து விட்டு பின்பு எடுத்து நறுக்கினால் உங்கள் கண்களில் கண்ணீர் வருவதை தடுக்கும்.

பிரிட்ஜில் இருக்கும் காய்கறிகளை பயன்படுத்துவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு எடுத்து வெளியே வைத்து விடவேண்டும் அப்போதுதான் அதன் சுவை மற்றும் ஆரோக்கியம் நமக்கு கிடைக்கும். அதேபோல் பாதி நறுக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை அப்படியே வைக்காமல் காற்று நுழையாதபடி இருக்கும் ஏதாவது டப்பா அல்லது பாலிதீன் கவர்களில் போட்டு உள்ளே வைக்க வேண்டும். இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க – வெயிலை தணிக்க வெளிநாட்டு பானங்களா? வேண்டவே வேண்டாம்!!!

பால் பொருட்கள் அனைத்தையும் ஃப்ரீசரில்தான் வைக்க வேண்டும். கத்திரிக்காயை காகித பையில் போட்டு வைப்பது சிறந்த முறையாகும்.

வெண்டைக்காய், அவரைக்காய், பட்டாணி போன்றவற்றின் தன்மை மாறாமல் இருக்க வேண்டுமென்றால் பழுப்பு நிற அட்டையில் போட்டு பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

எனவே பிரிட்ஜை நம் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அதன் பயன் நமக்குக் கிடைக்காமல் விஷத்தன்மையை பரப்பி விடும். ஒருசிலர் பிரிட்ஜை ஒரு குப்பைத் தொட்டியை போன்றே பயன்படுத்துகிறார்கள். நாம் தூக்கி எறியும் அனைத்து பொருட்களையும் உள்ளே அடுக்கி வைக்கிறார்கள். இதை தவிர்த்து தேவையான பொருட்களை மட்டும் உள்ளே வைக்க வேண்டும். பிரிட்ஜை நாம் அதிகமாக பயன்படுத்துவதால் பிரிட்ஜ் பழுதாகிவிடும். இது போன்ற சமயங்களில் ஏதேனும் சத்தங்கள் எழுந்தாள் உடனே பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து சரி பார்ப்பது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை அதன் ஆரோக்கிய தன்மை இருக்கும்போதே பயன்படுத்துவது நல்லது, அதை பிரிட்ஜில் வைத்து நாட்கள் கழிந்த பிறகு பயன்படுத்துவதால் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன