இயற்கை வழியில் வீட்டில் கை கழுவும் பொருளை தயாரிப்பது எப்படி..!

  • by
how to made hand wash at home in a natural way

நாம் சரியாக கை கழுவினால் கிட்டத்தட்ட 32 விதமான கிருமிகள் நம் கைகளில் நுழையாமல் நம்மை பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். ஆனால் ஒரு சில கிருமிகள் நாம் சாதாரணமாக கை கழுவினால் நம் கைகளை விட்டு செல்வது இல்லை அதற்கு நாம் இதற்கென விற்கப்படும் கை கழுவும் பொருட்களை கொண்டு கைகளைக் கழுவ வேண்டும். ஆனால் இதன் விலை அதிகமாக இருப்பதினால் இதை வீட்டிலேயே எளிமையாக எப்படி தயாரிக்கலாம் என்பதை காணலாம்.

கை கழுவும் பொருளைத் தயாரிக்கும் முறை

நாம் கை கழுவும் பொருளை தயாரிப்பதற்கு நமக்கு ஆரோ வாட்டர் தேவைப்படுகிறது. பின்பு “எஸ் எல் இ எஸ்” சிறிதளவு தேவைப்படும். பிறகு ஆலுவேரா சாறு, வைட்டமின் ஈ எண்ணெய், நிறத்தை அதிகரிப்பதற்கு பச்சை நிறம், சிறிதளவு உப்பு மற்றும் நறுமணம் உள்ள எண்ணெய்கள்.

மேலும் படிக்க – கருவேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

செய்முறை

நாம் சுத்தமான நீரில் ஆலுவேரா சாரை கலக்க வேண்டும், பின்பு அதில் பச்சை நிறத்தை சிறிதளவு சேர்த்து வைட்டமின் ஈ எண்ணெயை சிறிதளவு விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அதில் உப்பை சேர்த்து நறுமணமிக்க எண்ணெயையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கடைசியாக எஸ் எல் இ எஸ் ஐ அதில் ஒன்றாக சேர்த்து நம் கை கழுவ உகந்த டப்பாவில் அதை ஊற்றி பயன்படுத்தலாம்.

கைகழுவதால் கிடைக்கும் நன்மைகள்

மனித உடலில் மிக எளிதில் நோய்த்தொற்றுகள் சென்று அடையும் பாதை நம்முடைய மூக்கு, வாய் மற்றும் கண் பகுதிகள். ஆனால் இது போன்ற பகுதிகளில் நாம் அதிக அளவில் நம் கைகளை பயன்படுத்துகிறோம். இதனால் நோய் தொற்றுகள் மிக எளிதில் உங்கள் உடலுக்குள் சென்றடையும். எனவே எங்கு சென்று வந்தாலும் அல்லது சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்ட பிறகு கை கழுவுவது மிக அவசியம். இதன் மூலமாக பாக்டீரியா, பூஞ்சை மற்றும் அழுக்குகளில் இருந்து உங்களை பாதுகாக்கலாம்.

கைகழுவாமல் இருப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்

நான் சரியாக கைகழுவாமல் இருப்பதினால் நம்மை பலவிதமான வியாதிகள் நம்மை பாதிக்கும். எனவே இதைத்தவிர்த்து நம் நகங்களில் ஒளிந்திருக்கும் சிறிய கிருமிகள் கூட உங்களை பாதிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, உடல் பிரச்சனை மற்றும் மிகப் பெரிய வியாதிகள் கூட வரவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

உங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்வதற்காக தினமும் இந்த சிறிய செயலை செய்யுங்கள். ரசாயனங்கள் கலக்கப்பட்ட பொருட்களை வாங்காமல் வீட்டிலேயே இதுபோன்ற கை கழுவும் பொருளைத் தயாரித்து பயன் பெறுங்கள். அதன் மூலமாக உங்கள் குழந்தை மிக ஆரோக்கியமாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன