ஒழுங்காக அமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது எப்படி..!

  • by
how to live a organised life

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டாகி கொண்டே இருக்கும். அதே போல்தான் வீட்டில் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுக்கும்போது தேவையற்ற பொருட்கள் மறைந்துவிடும், ஆனால் எப்போது அந்த தேவையற்ற பொருட்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது அதை தேடி எடுப்பதற்குள் நம்முடைய தேவைகள் குறைந்துவிடுகிறது. எனவே நம் வீட்டில் மற்றும் நமது அலுவலகத்தை ஒழுங்காக அமைப்பதன் மூலமாக நமது வாழ்க்கை இனிமையாக அமையும்.

செய்ய வேண்டியவையை எழுதுங்கள்

உங்கள் பொழுது விடிந்தவுடன் அன்றைய தினம் நீங்கள் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை முதலில் எழுதிக் கொள்ளுங்கள். எழுதிய ஒவ்வொன்றும் அதன் வரிசையில் முடித்தீர்கலா என்பதை சரி பார்த்து உங்கள் அன்றைய நாளை இனிமையாக முடித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – வாழ்ந்து பாருங்கள் வானம் உங்கள் வசம் வரும்

பணம் செலுத்தும் நாளை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்

எல்லாக் குடும்பத்திலும் மாத தொடக்கத்தில் அல்லது இறுதியில் நாம் ஏதாவது ஒரு தொகையை நாம் பயன்படுத்திய சேவைகளுக்காக செலுத்த வேண்டும். மின் சேவை, தொலைக்காட்சி சேவை, இணைய தளம், தொலைபேசி பில், மற்றும் நாம் செலுத்த வேண்டிய வீட்டு வாடகை என எல்லாவற்றையும் சரியாக எழுதி எந்தெந்த தேதியில் யாராருக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்பதை தெளிவாக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள்

நீங்கள் செய்ய நினைக்கும் வேலையை உடனே செய்து விடுங்கள். அதற்கான நேரம் இது இல்லை என்று அந்த வேலையை தள்ளிப்போடுவது உங்கள் வாழ்க்கையை கடினமாகிவிடும். எல்லா வேலைகளையும் அந்தந்த நேரத்தில் செய்து முடித்து உங்களுக்கான நேரத்தை செலவழியுங்கள்.

வீட்டை பராமரியுங்கள்

உங்கள் அலுவலகத்தை பராமரிப்பதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எப்படி ஒரே இடத்தில் சரியாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல்தான் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தவுடன் உங்கள் பொருட்களை அந்த இடத்திற்கு ஏற்றவாறு அழகாக அலங்கரியுங்கள். இதனால் உங்களுக்கு தேவையான பொருட்களை மற்ற இடத்தில் தேடாமல் நீங்கள் வைத்த இடத்தில் இருந்து எடுக்கலாம். நாளடைவில் இது உங்களின் பழக்கமாக மாறி விடும். இதைத் தொடர்ந்து உங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதை பின்தொடர்வார்கள்.

வாரம் ஒரு நாள் ஒதுக்குங்கள்

உங்கள் வீடு, அலுவலகம் மற்றும் உங்களின் கார்களை பராமரிப்பதற்காக வாரம் ஒருநாள் ஒதுக்குங்கள். எல்லாவற்றையும் சுத்தபடுத்தி எல்லாப் பொருட்களையும் அழகாக அடுக்குகள். இதன் மூலமாக உங்களின் கலை மற்றும் ரசனையை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

தேவையானதை வைத்துக் கொள்ளுங்கள்

எப்பொழுதும் உங்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பொருட்களை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு அந்த பணத்தை உங்கள் வாழ்க்கையை அழகுப்படுத்த பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை புதுப்பித்துக் கொள்வது நல்லது. நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கையை ஒழுங்காக நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் புதிதாகவும், சரியானதாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – எதிர் காலத்திற்குக்காக பணத்தை சேமிப்பது எப்படி..!

கணக்கு வழக்குகளை மேற்கொள்ளுங்கள்

நீங்கள் செய்யும் அனைத்து செலவுகளையும் மறவாமல் எழுதிக் கொள்ளுங்கள். அதே போல் உங்கள் எதிர்காலத் தேவைக்கு ஏற்றாற்போல் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்படாது.

சரியான திட்டமிடுதல், தரமான வாழ்க்கைக்கு உதவும். எனவே உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சரியான திட்டங்களைத் தீட்டிக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் திட்டங்களை மற்றவர்கள் பின் தொடர வலியிருத்தாதீர்கள். இதனால் உங்கள் மனநிலை பாதிக்கும். எனவே எப்போதும் உங்கள் வேலைகளை உங்களுக்கு பிடித்த்தை போல் ஒழுக்கமாகவும், சரியாகவும் செய்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன