இயற்கையாக நம் சருமத்தை பொலிவாக மாற்றுவது எப்படி?

tips to how to lighten your skin naturally and make you beautiful

இயற்கையாகவே நம் சருமம் எப்போதும் பொலிவுடன் தான் இருக்கும் ஆனால் வெயிலின் தாக்கத்தினால் மற்றும் அழுக்கு மாசு போன்றவற்றினால் நம் சருமம் பொலிவிழந்து கருமையாக மாறி இருக்கும் இப்படிப்பட்ட நம் சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக நாம் செய்ய வேண்டிய வேலையை இப்போது பார்ப்போம்.

வாழைப்பழம் 

வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி அதில் பாலை கலந்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் பிறகு அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.

மேலும் படிக்க – நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் தோலை அகற்றி விட்டு அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து இதமாக உங்கள் முகத்தில் தடவ வேண்டும் சற்று நேரம் கழித்து அதை அகற்றி விட்டுப் பார்த்தால் உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உங்களுக்கு தெரியும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உப்பு அல்லது சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும் பின்பு நம் முகத்தில் ஏதாவது பஞ்சு அல்லது துணியை வைத்து தேய்க்க வேண்டும் பின்பு நம் முகத்தை கழுவ வேண்டும் இதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி விடும் இதைத்தவிர்த்து அழுக்குகள் மற்றும் கருமைகள் குறைக்க இது உதவுகிறது.

மேலும் படிக்க – கிளின்சிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..!

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சைச் சாறுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து உங்கள் முகத்தில் மேல் தடவ வேண்டும் 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு உங்கள் முகத்தை கழுவ வேண்டும் இது உங்கள் முகத்தில் இருக்கும் கூடுதலான முடிகளை அகற்றி முகத்தை பொலிவாக்க உதவுகிறது.

முட்டை

முட்டையில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து நன்கு ஊறவைத்து பின்பு அதை உங்கள் முகத்தில் தடவ வேண்டும் பிறகு அது காய்ந்த பிறகு உங்கள் முகத்தில் சோப்பை கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமைகள் அனைத்தும் விலகி பொலிவுடன் இருப்பீர்கள்.

மேலும் படிக்க – பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா !

இதில் குறிப்பிட்டுள்ள எளிமையான வழிகளை கடைபிடித்து உங்கள் முகத்தை பொலிவுடன் மிக வென்மையாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன