இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..!

how to know god resembles

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். என பத்தில் ஒன்பது நபர்களின் ஏதேனும் ஒரு வேண்டுதலை முன்வைத்து இறைவனை பிரார்த்தனை செய்வார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளை இறைவனுடன் பகிர்ந்து அதற்கான தீர்வு கிடைக்கும்படி பிரார்த்தனை செய்வார்கள். இதனால் இறைவன் உதவி செய்தாரோ இல்லையோ ஆனால் பிரார்த்தனை மூலமாக அவர்கள் மன நிறைவு பெற்று தங்கள் வாழ்க்கையை மேலும் வலிமையுடன் எதிர்கொள்வார்கள்.

கடவுளின் உருவம்

இயற்கையால் நடக்கும் அதிசயங்கள் ஒவ்வொன்றும் கடவுளின் உருவங்களால்தான். பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு போன்ற அனைத்தும் கடவுளின் மறு உருவம். பஞ்சபூதம் என்பது இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது, அதே சமயத்தில் ஒரு சிலரின் வாழ்க்கையை பஞ்சபூதங்கள் தண்டிக்கிறது.

மேலும் படிக்க – விருப்பங்களை நிறைவேற்றும் பிரபஞ்சத்தின் 555

பஞ்சபூதங்கள்தான் கடவுளின் மறு உருவம். ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணிய கணக்குகளை பஞ்சபூதங்கள் மூலமாக அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. அந்த தண்டனை ஒவ்வொருவர் செய்யும் பாவத்திற்கு ஏற்றார்போல் பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும்.

உதவி புரியும் மனிதன்

கடவுளை நாம் உதவி செய்யும் மனிதர்களில் உள்ளத்தில் பார்க்க முடியும். ஒரு சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முழுவதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே வாழ்வார்கள். தங்களுக்கென சுயநல வாழ்க்கையை வாழும் சுயநலமற்று எல்லோருக்கும் உதவியாக இருப்பார்கள்.

நாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முன்பின் தெரியாதவர்களின் சந்தோஷத்திற்காக செய்யப்படும் உதவியின் மதிப்பு பல கடவுள்களின் ஆசீர்வாதம், ஒன்றாக கிடைத்தது போல் இருக்கும். எனவே நீங்கள் உங்களுக்குள் இருக்கும் கடவுளை பார்க்க வேண்டுமென்றால், மற்றவர்களுக்கான சிறுசிறு உதவிகளை செய்யுங்கள்.

மேலும் படிக்க – அருள் தரும் கணபதியின் ரூபங்கள், தரிசனங்கள்

கடவுள் நம்பிக்கை

கடவுள் என்பவர் ஒவ்வொருவரின் பார்வைக்கும் ஏற்றார்போல் மாறுகிறது ஒருசிலர் இந்து கடவுள்களை கடவுள் என்கிறார்கள். மற்றவர்கள் இஸ்லாமியம் தான் இறைவனின் வெளிப்பாடு என்கிறார்கள், ஆங்கிலேயர்களும் கிரிஸ்டியனிடி தான் முதலில் தோன்றியது என்று அவர்களின் கால குறியீட்டை மாற்றி உள்ளார்கள். அதேபோல் புத்திசம், ஜெய்னிசம் என பல மதங்களை பின்பற்றுபவர்கள் தங்கள் மதத்தில் போற்றப்படும் கடவுளை தான் உண்மையான கடவுள் என்கிறார்கள். இது அனைத்தும் இருந்து வேறுபட்டு ஒரு சிலரும் இயற்கை மற்றும் அதை சார்ந்த மனிதர்கள் அதனுள் இருக்கும் கடவுளை பார்க்கிறார்கள். எனவே கடவுள் என்பவர் நம் பார்வைக்கு ஏற்றார்போல் மாறுகிறது. நம்முடைய நம்பிக்கை எதன் மேல் அதிகமாக உள்ளதோ அதுதான் கடவுள், நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுவது எதுவோ அதுதான் கடவுள், எனவே கடவுளை உருவம், பெயர் கொண்டு பிரிக்காமல் எல்லோரின் உணர்வுகளையும் மதித்து, அவரவர் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்கு உதவும் கடவுளை போற்றுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன