கொரோனா பாதிப்பைத் தடுக்க நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பது எப்படி..!

  • by
lungs

கொரோனா வைரஸ் ஒரு மனிதருக்குள் நுழைந்தால் முதல் முதலில் அவரின் நுரையீரலை தான் தாக்குகிறது. இதன் பிறகுதான் அவர் சுவாசிக்க சிரமப்பட்டு காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே நுரையீரலை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதன் மூலமாக இந்த நோய்த்தொற்று உங்களை பாதிகமாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு ஒரு சில வழிகளை பின் தொடர்ந்து உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மூச்சுப் பயிற்சி

நாம் என்னதான் ஆரோக்கியமாக உணவுகளை உண்டாலும் நமது சுவாசத்தை வலுவாக வைப்பதற்கு நாம் மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் யோகா செய்வதை போல் சாஷ்டாங்கமாக தரையில் அமர்ந்து கொண்டு, உங்கள் மூச்சை இரண்டு வினாடிகளுக்கு நன்கு இழுத்துக் கொள்ளுங்கள். பின்பு இரண்டு வினாடியில் இடைவெளி விட்டு அதை முழுமையாக மூக்கின் வழியே வெளியிடுங்கள். உங்கள் ஒரு கையை மார்பின் மேலும் மறுகையை வயிற்றில் மேலும் வைத்து இதை தொடர்ந்து செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் மூச்சி விடும் செயல் அதிகரித்து நுரையீரல் வலுவாகும்.

மேலும் படிக்க – சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

நுரையிரல் பாதுகாப்பு

மூச்சு பயிற்சியின் இரண்டாம் நிலை தான் இந்த நுரையீரல் பாதுகாப்பு முறை. அதாவது, முன்பு நம் மூச்சு எப்படி மூக்கின் வழியே இழித்தோமோ அதை போல் மூச்சை மூக்கின் வழியும் பிறகு வாயின் வழியும் நன்றாக இழுத்துக் கொள்ள வேண்டும். அதை இரண்டு வினாடிகள் இடைவெளிவிட்டு மூச்சை வெளிவிட வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் நுரையீரலில் உள்ள அனைத்து அடைப்புகளும் விலகி உங்கள் சுவாசத்தை அதிகரிக்கும். இந்தப் பயிற்சியை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் செய்வதன் மூலமாக காற்றில் இருக்கும் நச்சுதன்மை அனைத்தும் குறைந்து மிக அதிகமான காற்றை நம்மால் சுவாசிக்க முடியும்.

பாதிக்கும் பழக்கங்கள்

உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். புகை பிடிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் உங்கள் நுரையீரலை முழுமையாக சிதைத்துவிடும். இதனால் எந்த ஒரு வைரஸ் தொற்று உங்கள் நுரையீரலில் பாதித்தாலும் அதை குணப்படுத்துவதில் ஏராளமான சிரமங்கள் ஏற்படும். அதேபோல் மாசு அதிகமாக இருக்கும் சுற்றுச்சூழல்களில் வாழ்வதும் உங்கள் நுரையீரலை பாதிக்கும். எனவே நீங்கள் உங்களைச் சுற்றி உள்ள காற்றை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் உணவுகள்

வைட்டமின் சி உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பழங்கள், காய்கறிகள் மற்றும் மாமிசங்கள் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. அதை சரியாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது உங்கள் நுரையீரலை மிக விரைவாக சுத்தப்படுத்தி அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். அதைப்போல் ஜீரணம் ஆவதில் சிரமம் உள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

மேலும் படிக்க – லாக்டவுனில் பெருகி வரும் குடிநோயாளிகளின் அறிகுறிகளும், தீர்வுகளும்…….!

உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் நுரையீரல் பலமடங்கு ஆரோக்கியமாகும். உடற்பயிற்சியின் மூலமாக நம்முடைய மூச்சின் சக்தி அதிகரிக்கும். இதன் மூலமாக நமது சுவாசப் பாதையில் உள்ள அனைத்து அடைப்புகளும் விலகி உங்கள் நுரையீரலை பாதுகாக்கும். நாம் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமாக இருக்கும் ஒரு உடல் உறுப்பு தான் நுரையீரல் எனவே அதை நாம் எவ்வளவு ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறோமோ அவ்வளவு நன்மை நமக்கு கிடைக்கும்.

இதுவரை உங்கள் நுரையீரலை நீங்கள் சரிவர பராமரிக்காமல் இருந்தால் அதைப்பற்றி கவலை உங்களுக்குத் தேவையில்லை ஏனென்றால் நுரையீரல்  தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது. எனவே இன்று முதல் உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன