கோடைக் காலங்களில் உடலில் குளிர்ச்சியாக வைப்பதற்கான வழிகள்..!

  • by
how to keep your body cool during summer season

இன்னும் சில வாரங்களில் நாம் கோடை வெயிலை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். இந்த வெயிலை நாம் எப்படி எல்லாம் எதிர்கொண்டு, நமது உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கான வழிகளைக் காணலாம்.

தண்ணீர் அருந்த வேண்டும்

கோடைக் காலங்களில் நாம் கலைப்பு ஏற்பட்டவுடன் முதலில் அருந்துவது தண்ணீராகத்தான் இருக்க வேண்டும். இது உடனடியாக உங்களின் உடல் உஷ்ணத்தைக் குறைத்து உங்களை அமைதிப்படுத்துகிறது. முடிந்தவரை சாதாரண தண்ணீர் குடிப்பது சிறந்தது.

மேலும் படிக்க – பாசிப்பருப்பு என்கிற பச்சை பருப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

இளநீர் அருந்தலாம்

தண்ணீருக்கு அடுத்தபடியாக உங்கள் உடலை உடனடியாக குளிர்ச்சி அடையச் செய்ய உதவும் இயற்கை பானம் தான் இளநீர். கோடைக்காலங்களில் இதன் உற்பத்தி அதிகமாக இருப்பதினால் எல்லா இடங்களிலும் மலிவான விலையில் கிடைக்கும் இளநீரை வாங்கி பயன்பெறலாம்.

இயற்கை தேநீர்

கோடைக் காலங்களில் நாம் சாதாரண தேனீரை குடிப்பதை தவிர்த்து புதினா, துளசி போன்ற மூலிகைகளால் செய்யப்பட்ட தேநீரை அருந்தலாம். இதனுடன் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் உடல் உஷ்ணம் உடனே வெளியேறும். நீங்கள் பால் குடிப்பவர்களாக இருந்தால் அதில் தேன் கலந்து குடிப்பது சிறந்தது.

காய்கள் மற்றும் பழங்கள்

கோடை காலத்திற்கு ஏற்றவாறு நம் உணவு முறையை நாம் பயன்படுத்த வேண்டும். அதிக காரமான உணவை தவிர்த்து குறைந்த மசாலாக்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை உண்பது சிறந்தது. அதேபோல் பாவக்காய், வெள்ளரிக்காய், கேரட், முள்ளங்கி போன்ற காய்களை பயன்படுத்தி சாப்பிடலாம். அதேபோல் பழங்களில் தர்பூசணி, கிரினி பழம், ஆரஞ்சு, திராட்சை, மாதுளம் போன்றவைகளை அதிகமாக உட்கொள்ளலாம்.

சந்தனத்தை பயன்படுத்துங்கள்

சந்தனம் இயற்கையாகவே நமக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. உடல் உஷ்ணம் அதிகரித்தால் சந்தன பொடியை தண்ணீரில் கரைத்து உங்கள் உடலில் தேய்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் குளிக்கும்போது சந்தன சோப்புகளை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – தினமும் உணவில் மீன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

எண்ணெய்களை பயன்படுத்துங்கள்

உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கு நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை உங்கள் தலையில் தேய்த்து விட்டு செல்லலாம். அதே போல் உங்கள் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கு விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

கோடைக்காலம் வந்தாலே முடிந்தவரை நாம் உறங்கும் இடத்தை எப்போதும் காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதுவே உங்கள் உடலின் உஷ்ணத்தை அதிகரிப்பை தூண்டிவிடும். எனவே கோடை காலங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனையும் தீர்ப்பதற்கு மேலே குறிப்பிட்ட வழிகளை பின்தொடருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன