கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிகள்..!

  • by
how to increase immunity during summer season

கோடைக்காலம் வந்தாலே உங்கள் உடலில் உள்ள ஆற்றல் மற்றும் வசதிகள் மிகக்குறைவாக இருக்கும். ஏனென்றால், இக்காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் இருக்கும் அனைத்து சக்திகளையும் உறிஞ்சி உங்களை சோர்வாக மாற்றி விடும். எனவே இதைத் தடுத்து ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு நம் கோடை காலங்களில் ஒரு சில உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

காய்கறிகள் சூப்

நாம் எந்த அளவிற்கு காய்கறிகளை உன் கிறோமோ அந்த அளவிற்கு நாம் கோடைகாலத்திற்கு எதிராக நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு நீங்கள் பீட்ரூட், கத்தரிக்காய், கேரட், குடைமிளகாய், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இல்லையெனில் சிறிது சிறிதாக நறுக்கி அதை கொதிக்க விட்டு சூடாக சூப்பாக அருந்தலாம். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

மேலும் படிக்க – மூலிகை செடிகள் வளர்ப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

தயிர் சாதம்

தயிர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதில் பாலிலிருந்து வருவதினால் அதன் ருசியும் அதிகமாக இருக்கும். எனவே கோடைக்காலங்களில் தயிரை பயன்படுத்தி சாதம் தயாரித்து சாப்பிடலாம். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் உடலிலுள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் அழித்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும்.

பழம் வகைகள்

கோடைக்காலங்களில் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும் மற்றொரு உணவுப் பொருள் தான் பழங்கள். ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, மாதுளை பழம் போன்றவைகளை நீங்கள் கோடை காலங்களில்  எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின்கள் உங்களை உறுதியாகவும், சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்ளும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் உண்டாகும் நோய்களை தடுக்கும்.

நட்ஸ் உணவுகள்

நல்ல கொழுப்புகளை அதிகமாக கொண்டுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம். பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட், உலர் திராட்சை, பேரிச்சம்பழம் போன்றவைகளை கோடைகாலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – பழந்தமிழர்களின் வியக்கதக்க பாரம்பரிய விருந்தோம்பல்

மீன் மற்றும் முட்டை

கோடைக்காலங்களில் மற்ற அசைவ உணவுகளை தவிர்த்து மீன், முட்டை போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உங்களை ஆரோக்கியமாகவும் எந்த ஒரு நோயும் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளும். இதை தவிர்த்து உங்கள் உடல் உஷ்ணம் ஆகாமல் எப்போதும் சமநிலையில் வைத்துக்கொள்ள மீன் போன்ற உணவுகள் பயன்படும்.

இதை தவிர்த்து பூண்டு, மஞ்சள் மற்றும் சிறுதானியங்களை உங்கள் உணவில் சேர்த்துச் சமைப்பதன் மூலமாக கோடை காலங்களில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் வியாதிகளில் இருந்து உங்களை பாதுகாக்கலாம். எனவே உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான உணவு களை அறிந்து கோடைகாலத்தை அழகாக கழியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன