உங்கள் கணவரை கவர்வது எப்படி?

How to Impress Your Husband

அக்கால முறையில் திருமணம் என்பது ஒன்று நடந்தால் அவர்களுக்கும் பிரிதல் என்பது எப்போதும் இருக்காது. ஆனால் சமீபகாலமாக திருமண பந்தம் என்பது மிக எளிதில் பிரித்து கொள்ளலாம் என்ற முடிவிலேயே பல பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது குறுகிய கால சந்தோஷத்தை அளித்தாலும் நிரந்தரமான சந்தோஷத்தையும், நமது உறவுகளினால் ஏற்படும் பெருமைகளையும் நம்மால் உணர முடியாமல் போகிறது.

உறவின் ஆழம் அற்புதமானது

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு அற்புதமானது. ஒருவரை ஒருவர் திருமண பந்தத்தின் மூலமாக இணைத்துக்கொண்டு ஒன்றாக இருக்கும் அற்புதமான உறவு தான் கணவன்-மனைவி. இவர்கள் வெவ்வேறு இடத்தில் பிறந்தாலும், வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்த இருந்தாலும், இறுதியில் ஒன்றாக இணைந்து சகித்துக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வேறு ஒரு நபருடன் கழிபதுதான் திருமண பந்தத்தின் மாயாஜாலம்.

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

கணவனை கவர்வது எப்படி

ஒரு பெண்ணுக்கு தன் கணவனை கவர்வது என்பது மிக எளிமையான காரியம். ஆனால் இந்தக் காரியத்தை செய்வதற்கு முன்பு நாம் ஏன் இவரை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இவர்களை தடுக்கிறது. எனவே அவர்களுக்குள் இருக்கும் ஈகோவை அகற்றி தன் கணவனுக்கு பிடித்தவை என்னவென்று முதலில் ஆராயுங்கள்.

ஒரு சில பெண்கள் கணவருடன் சேர்ந்து வேலைக்கு செல்வார்கள், அதுபோன்ற சமயங்களில் அவர்களிடம் நானும் வேலைக்கு செல்கிறேன் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அதேபோல் நான் எல்லாவற்றையும் விட்டு உங்களுக்காக வந்துள்ளேன் என்பதையும் சொல்வதை தவிர்க்க வேண்டும். இது ஆரம்பத்தில் ஒரு சுகமான ஒரு சொல்லாக இருந்தாலும் காலப்போக்கில் நீங்கள் வேறு ஒரு நபர் தான் அவருடன் இணைந்து வாழ்கிறீர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்கும் உண்டாக்கும்.

மேலும் படிக்க – காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

ஒருவருக்கொருவர் உதவி செய்வது உத்தமம்

கணவன் ஏதேனும் அலுவலக வேலைகளை வீட்டில் செய்வதாக இருந்தாலும் அவரின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும். அந்த வேலையை முடிக்கும் வரை அவருக்கான இடத்தையும், நேரத்தையும் கொடுத்து வேறு எந்த தடங்களும் அவர்களை தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அச்சமயங்களில் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீங்களே செய்வதோ அல்லது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை நீங்களே செய்தால் அவர்களுக்கு உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏதாவது தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். அதை பெரும்பாலும் அவர்களே செய்து கொள்ளும் நிலையிலும் இருப்பார்கள். ஆனால் அந்த தேவைகளை வேறு ஒருவர் பூர்த்தி செய்தால் அதைவிட அற்புதமான செயல் வேறெதுவும் இல்லை. ஒருவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை குறிப்பது நாம் நம் தேவைகளை பூர்த்தி செய்யும் போது நம்மை பெருமையாக உணர வைத்து நமக்கு உதவியர்கள் மேல் அன்பு அதிகரிக்கும்.

ஒரு சில பெண்கள் தங்கள் தேவைகளுக்காக பணத்தை சேமித்து வைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவார்கள். சில சமயங்களில் இந்த செயல்கள் உங்களை எரிச்சலூட்டும் ஏனென்றால் தேவையற்ற பொருட்களை வாங்கி வீட்டில் அடைத்து வைப்பதைத் தவிர்த்து, தேவையான பொருட்களை வாங்குவது தான் சிறந்தது என்று அவர்கள் நினைப்பார்கள்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

உறவுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்

எந்த உறவாக இருந்தாலும் உங்களின் அண்ணன், தம்பி, அப்பா, அம்மா யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக கணவன் உறவுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உங்கள் சகோதரருக்கு ஒருவிதமான மரியாதையையும், கணவனுக்கு ஒரு விதமான மரியாதையையும் அளிப்பதன் மூலமாக உங்கள் கணவனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். என எதுவாக இருந்தாலும் கணவனை விட்டுக் கொடுக்காமல் மற்ற உறவுகளையும் தக்க வைப்பது தான் ஒரு சிறந்த மனைவியாக இருக்க முடியும்.

எல்லாவற்றையும் அவர்களின் பார்வையிலிருந்து பார்ப்பது பார்ப்பதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் கோபங்கள் தணியும். ஒரு ஆண் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் அதைக் கேட்டு அறிந்து கொள்வது நல்லது, இல்லையெனில் உங்கள் உறவுக்குள் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும்.

இதுபோல் எல்லா செயல்களையும் நன்கு அறிந்து அவர்களுக்கு பிடித்தவற்றை செய்வதன் மூலமாக உங்களை தன் தாய்க்கும் மேலாக நினைக்கும் எண்ணம் அவர்களுக்குள் தோன்றும். ஒருமுறை இதுபோன்ற எண்ணம் அவனுக்குள் தோன்றி விட்டது என்றால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கான மரியாதையும், உங்கள் தேவைகளையும், நீங்கள் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே அவர்கள் பூர்த்தி செய்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன