கரோனா விடுமுறையில் குழந்தைகளை  எவ்வாறு வீட்டிற்குள்ளேயே வைத்து சமாளிப்பது???

  • by
how to handle you children during corona leave

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக அலுவலகப் பணிகளை செய்து வருகின்றனர்.

ஆனாலும் சில தாய்மார்களுக்கு குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்து கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை விளக்கும் பதிவு இது.

வீட்டு வேலைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பரீட்சைகள் இல்லை பள்ளிகளும் திறப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் இருக்கின்றன. இதனால் குழந்தைகள் அதிக நேரம் வீட்டில்தான் செலவழிக்க வேண்டியிருக்கும். அவர்கள் விளையாட பயன்படுத்தும் வீடியோ கேம், மொபைல்போன்கள் இவையெல்லாம் கொஞ்ச நேரத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் கண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம் குழந்தைகளுக்கு நாம் செய்யும் வேலையை எவ்வாறு செய்வது என்பதை கற்றுக் கொடுங்கள். இதனால் அவர்களுக்கு வீட்டு வேலையில் ஆர்வம் ஏற்படும் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க – கரோனாவிற்க்கு மருந்து….! மாற்றி யோசிக்கும் அமெரிக்கா!

எடுத்துக்காட்டாக காய்கறிகள் வெட்டும்போது அவர்களை காய்கறிகளை கழுவ கூட சொல்லலாம். சப்பாத்தி போடும் பொழுது அவர்கள் கையில் மாவை எடுத்து சப்பாத்தி போட சொல்லலாம். அவர்களது அறையை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்துங்கள்.

பெற்றோர்கள் வாங்கி வைக்க வேண்டிய பொருட்கள் 

ஊர் முழுவதும் கரோனா தொற்று  இருப்பதால் குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்காதீர்கள். முடிந்தவரை வீட்டிலேயே அவர்களுக்கு தேவையானவை அனைத்தையும் வாங்கி கொடுத்து விடுங்கள். கலரிங் புக்,

ஸ்கெட்ச், வாட்டர் பெயிண்ட் போன்ற ஆக்கபூர்வமான பொருட்களை வாங்கி உங்கள் குழந்தைகளின் கலை ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். நன்னெறி கதை புத்தகங்களை அதிகம் வாங்கி கொடுங்கள். இதனால் இவர்கள் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வதுடன் படிக்கும் கதைகளில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகள் அதிக நேரம் டிவி மொபைல் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 

வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்கு டிவியில் இருக்கும் கார்ட்டூன் மொபைல் கேம்ஸ் இவற்றை பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் இல்ல என்ற என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. வீட்டில் பயன்படுத்தாத பழைய அட்டைப் பெட்டிகள், அட்டைகள், காகிதங்கள் இவற்றை உங்கள் குழந்தைகள் கையில் கொடுத்து ஏதாவது ஆக்கப்பூர்வமாக தயாரிக்கச் சொல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைகிறது. அதுமட்டுமில்லாமல் கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.

குழந்தைகளிடம் அதிக நேரம் பேசுங்கள்

இன்றைய நவீன காலகட்டத்தில் தாய்-தந்தை இருவருமே வேலைக்கு செல்பவர்களாக தான் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது என்பது மிகக் குறைவாக தான் இருக்கிறது. இந்த விடுமுறையை நம் குழந்தைகளுக்காக செலவழியுங்கள். குழந்தைகளிடம் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொடுங்கள். அவர்களிடம் நண்பர்களை போல் பழகுங்கள். அப்போதுதான் அவர்களின் விருப்பு வெறுப்புகளை உங்களால் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு பிடித்ததை சமைத்து கொடுங்கள்

வேலைப்பளு காரணமாக நிறைய பெண்கள் வீட்டில் சமைப்பதை மறந்து விடுகின்றனர். ஹோட்டல் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் உடல் உபாதைகள் என்ன என்பதை அறிந்திருந்தாலும் அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. இப்பொழுது வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு

உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என கேட்டு சமைத்துக் கொடுங்கள். இப்படி விதவிதமாக சமைத்து கொடுப்பதால் அவர்களுக்கு சாப்பிடுவதில் ஆர்வம் ஏற்படும்.
 

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக்கூடிய உணவுகளை அதிகமாக சமைத்துக் கொடுங்கள் ஏனென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் தொற்று நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க அதுதான் அருமருந்து.

குழந்தைகளுக்கு சுய தூய்மையை கற்றுக்கொடுங்கள்

குழந்தைகள் வீட்டின் வெளியே விளையாடிவிட்டு வந்ததும் உடனடியாக கைகளை கால்களையும் கழுவுவதற்கு அறிவுறுத்துங்கள். சளி, இருமல் ,காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று இருப்பவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க கற்றுக்கொடுங்கள். வீட்டிலும் யாருக்காவது சளி ,இருமல் இருந்தால் அவர்களை  குழந்தைகளிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம். இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டைகளை பயன்படுத்த கற்றுக்கொடுங்கள்.

வெளியே செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும்போது கண்டிப்பாக முக உறை அணிய வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

மேலும் படிக்க – சன் பாத் எடுப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

குழந்தைகளுக்கு என்ன மாதிரியான படங்கள் போட்டு காட்டலாம்

பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறும் படங்களை உங்கள் குழந்தைக்கு போட்டுக்காட்டுங்கள். ஆக்டிவிட்டி அடிப்படையிலான திரைப்படங்கள் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும். வைரஸ் தொற்று பற்றி அவர்கள் தெளிவாக அறிந்து கொள்வதற்காக நியூஸ் சேனலை பார்ப்பதற்கு கற்றுக்கொடுங்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே நிச்சயம் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்த விடுமுறை தினத்தை பயனுள்ள முறையில் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு கண்டிப்பாக இருக்கிறது. அவர்கள் பிள்ளைகளையும் சரியான முறையில் வழிநடத்தினால் மட்டுமே இந்த தொற்று நோயிலிருந்து நம் சந்ததியினரை காப்பாற்ற முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன