கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் பிணத்தை எப்படி கையாள்வது..!

  • by
how to handle dead bodies of corona affected people

சீனாவிலுள்ள ஊபேய் மாநிலத்தில் உள்ள வூகான் நகரத்தில் உருவானதுதான் இந்த கொரோனா வைரஸ். அதைத் தொடர்ந்து இந்த நகரத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு சென்றவர்கள் மூலமாக இந்த தொற்று உலகம் முழுக்க பல நாடுகளில் பரவியது. கிட்டத்தட்ட 203 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 42 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த வைரஸின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் இறந்த பிறகும் இந்த வைரஸ் இவர்கள் உடலில் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும், ஒரு நிலையை எட்டியவுடன் தான் இது முழுமையாக அழியும்.

இறந்தவர்களின் உடல்

சீனாவில் இறந்தவர்களின் உடல்களை கண்டெய்னர் லாரிகள் மூலமாக கொண்டு சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் எரித்துள்ளார்கள். இப்படி எரிக்கப்பட்ட ஒவ்வொருவரின் சாம்பலை அவர்கள் குடும்பத்தாருடன் ஒப்படைத்துள்ளார். உயிரிழந்தவர்களை கூட பார்க்க முடியாத சூழ்நிலை சீனாவில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இறந்தவர்களின் மூலமாக தங்கள் குடும்பத்தாருக்கு இந்த வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சத்தில் சீன அரசாங்கமே இந்த செயலை முழுமையாக செய்து முடித்தது.

மேலும் படிக்க – உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

பாதுகாப்பான வழிகள்

கொரோனா வைரஸின் மூலமாக உயிரிழந்தவர்களை சீன அரசு மிகப் பாதுகாப்பான முறையில் பாலித்தின் உரைகள் மூலமாக முழுமையாக அவர்களை அடைத்து மிகப் பாதுகாப்பாக அவர்களை எரித்துள்ளார்கள். இந்த வழிகளை பின்தொடர்ந்து மற்ற நாடுகளும் கொரோனா வைரஸின் மூலமாக உயிரிழந்தவர்களை முழுமையாக அவர்களை பாலித்தீன் கவர்கள் மூலமாக அடைத்து இருக்கிறார்கள். இந்த வழியின் மூலமாக கொரோனா வைரஸ் மற்றவர்களை பாதிக்காது.

இறந்தவர்கள் வைரஸ்

இறந்தவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் எப்படி நம்மை தாக்குகிறது. ஒருவர் இறந்து விட்டால் அவர் தும்புவது மற்றும் இரும்புவது போன்ற செயல்கள் ஏதும் நடக்காது. இருந்தாலும் அவர்களின் உடல் மேல் ஏதேனும் வைரஸ் தொற்று இருந்தால் அதை நாம் தொடுவதன் மூலமாக நமக்கு பரவும். இருந்தாலும் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் உடல்கள் முழுமையாக சுத்தப்படுத்தி தருவார்கள். ஆனால் இறந்தவர்கள் உடலில் இருந்து நீர் அல்லது ஏதேனும் கழிவுகள் வெளியேறினால் அதன் மூலமாக நமக்கு இந்த வைரஸ் தொற்றிக் கொள்ளும். இதைக் கருத்தில் கொண்டு நாம் இதுபோன்ற சூழல் நமக்கு ஏற்பட்டால், மிகப் பாதுகாப்பான முறையில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும். இது போன்ற வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை நாம் புதைப்பதை விட எரிப்பதே சிறந்தது.

மேலும் படிக்க – கொரானாவுக்கு மருந்து குறித்து ஆயுவுகள் !

மற்ற நாடுகளின் பிரச்சனை

உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இது போன்ற உயிர் இறந்தவர்களை எரிப்பதில் ஏராளமான சிரமங்கள் ஏற்படுகிறது. எண்ணிலடங்காத எண்ணிக்கையில் உயிர்கள் இறப்பதினால் அவர்கள் ஒவ்வொருவராக எரிப்பது சிரமமாக இருக்கிறது. எனவே ஒரு சில நாடுகள் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை உரேடியாக எரித்து விடுகிறார்கள். இது பல பேரின் மனதை புண்படுத்தினாளும் இந்த வைரஸ் தொற்று நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு இந்த செயலை செய்து தான் ஆக வேண்டும்.

நம்முடைய எதிர்காலத்தை காப்பதற்காகவும் மற்றும் நம்முடைய நாட்டின் நலனுக்காகவும் உலகில் வாழும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும். அதில் மிக முக்கியமான தியாகமே நம்முடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டாள் அதை எதிர்த்து கேள்விகள் கேட்காமல் விதியை சார்ந்து வாழ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன