கரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக அலுவலகத்திற்கு செல்லும் வழிகள்..!

  • by
how to go safe to office tackling the spread of corona virus

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக மிகப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்தே வேலைகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரு சில வேளைகளை நம் வீட்டில் செய்ய முடியாது. எனவே இவர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக அலுவலகத்திற்கு சென்று வரும் வழிகளை காணலாம்.

பொதுவாகனத்தை தவிருங்கள்

அலுவலகத்திற்கு செல்வதாக இருந்தால் நீங்கள் பொது வாகனங்களை தவிருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வாகனத்தை பல முறை சுத்தம் செய்து அதை பயன்படுத்தி செல்லுங்கள். அலுவலகத்திற்கு சென்ற பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு வேலை முடிந்தவுடன் மீண்டும் வாகனத்தை நன்கு சுத்தப்படுத்தி வீட்டிற்கு வரவேண்டும். உங்கள் ஆடைகளை வீட்டிற்கு வெளியே தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு குளித்து விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள்.

மேலும் படிக்க – சரியான மனநிலை உங்களை உறுதியாக்கும்..!

பாதுகாப்பாக இருங்கள்

கை கவசம், கால் கவசம், முகமூடி போன்ற அனைத்தையும் அணிந்து செல்லுங்கள். நீங்கள் பயன்படுத்தும் கையுறை, முகமூடியை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். ஒருமுறை பயன்படுத்திய பின்பு அதை சுத்தப்படுத்துங்கள். ஒரு நாளைக்கு ஒரு முகமூடியை பயன்படுத்துங்கள். இடையே உங்கள் முகமூடி மற்றும் கையுறைகளை கழட்ட வேண்டாம், ஏனென்றால் இதன் மூலமாகவும் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படும்.

அலுவலக மேஜை

இங்கு பயன்படுத்தப்படும் கணினி மற்றும் அலுவலக மேஜையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். எனவே உங்கள் கைகளில் உள்ள தேவையற்ற பொருட்களை தவிர்த்து கணினியை மட்டும் பயன்படுத்துங்கள். அதை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

தூய்மை அவசியம்

கை கழிவும் பொருட்களை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பொருளையும் பயன்படுத்திய பிறகும் கையைக் கழுவிக் கொள்ளுங்கள். இதை 20 நிமிடத்திற்கு ஒரு முறை செய்வது சிறந்தது.

இடைவெளி விட்டு இருங்கள்

உங்கள் அலுவலகத்தில் இருக்கும் சக ஊழியர்களுடன் எப்போதும் இடைவெளி விட்டுப் பழகுங்கள். அவர்களுடன் கை குலுக்குவது மற்றும் ஒன்றாக இருப்பது போன்ற அனைத்தையும் தவிர்த்து இரண்டடி இடைவெளியில் பழக்கங்கள். இரும்பல், சளி மற்றும் காய்ச்சல் உள்ள ஊழியர்களுடன் பாதுகாப்பாக இருங்கள். முடிந்தவரை அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிருங்கள்.

மேலும் படிக்க – தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் ஏலக்காய் கசாயம்..!

கட்டுப்பாடுடன் இருங்கள்

உங்களுக்கான தனி தட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை கருதி இது போன்ற செயல்களை செய்து தொற்றுகளை பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு கரேனா தொற்றுகள் ஏற்பட்டாலும் அது உங்கள் குடும்பத்தை இதுபோன்ற செயல்கள் செய்வதன் மூலமாக பாதிக்காது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்து, கைகள் கழுவி மற்றும் அனைத்தையும் சுத்தப் படுத்தி கொள்ளுங்கள். போடும் ஆடைகளை மீண்டும் பயன்படுத்தாமல் அதை துவைத்து அணியுங்கள். குறைந்தது 20 முதல் 30 நாட்கள் வரை மற்ற நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாக இல்லாமல் தனிமையில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். இது உங்களையும் மற்றும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன