மோசமான கடந்த காலத்தில் இருந்து வெளிவருவது எப்படி..?

  • by
how to get rid of your worst past life

இளம் வயதில் நாம் போதுமான அளவு முதிர்ச்சி அடையாமல் இருந்ததினால் நம்மை அறியாமல் பல தவறுகளை செய்து இருப்போம். நாளடைவில் அந்த தவறுகள் நினைவுகளாக மாறி நம்மை ஒவ்வொருநாளும் கொன்று கொண்டே இருக்கும். இதுபோல் பல பேர் வாழ்க்கையில் பல விதமான தவறுகள் மற்றும் மோசமான கடந்த காலங்களால் இன்றும் பலரின் வாழ்க்கை பாதிக்கிறது. இதுபோன்ற மோசமான கடந்த காலங்களில் இருந்து நாம் வெளி வருவதற்கான சில வழிகளைக் காணலாம்.

காதல் தோல்வி

மோசமான கடந்த காலம் என்று சொன்னவுடன் எல்லோர் மனதிலும் தோன்றிய வலி தான் காதல் தோல்வி. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் காதல் இருந்திருக்கும். ஒரு சிலருக்கு அந்த காதல் தொடங்குவதற்கு முன்பாகவே முடிந்திருக்கும், பல பேருக்கு அந்த காதல் தோல்வியை அடைந்திருக்கும். எனவே இதுபோல் காதல் தோல்வி அடைந்தவர்கள் தங்கள் துணையை இன்றும் மறக்க முடியாமல் அவர்களை நினைத்து வருத்தப்படுவார்கள். அப்படியே அவர்கள் மறந்தாலும் அவர்களுடன் சென்ற இடத்திற்கு செல்லும் போதெல்லாம் அவர்களுடன் வாழ்ந்த காலங்கள் மீண்டும் நம் நினைவுக்கு வரும். இதை தடுப்பதற்கு நாம் அதைவிட அதிகளவில் மற்றவர்களை காதலிக்க வேண்டும். நாம் வாழும் இந்த வாழ்க்கை தான் சிறந்தது என்று உறுதியாக இருங்கள். ஒருவேளை நீங்கள் காதலித்த அந்த பெண்ணையே அல்லது ஆணையோ திருமணம் செய்து இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கும். ஆனால் அதில் மகிழ்ச்சி இருக்குமா என்பதுதான் கேள்வி, எனவே தற்போது நீங்கள் வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது என்றால் உங்களின் நிகழ்காலம் தான் சிறந்தது. எனவே தோல்வியான காதலை பற்றி எண்ணாமல் நிகழ்காலத்தை அழகாக வாழுங்கள்.

மேலும் படிக்க – ஹெல்மெட்டில் இருக்கும் வகைகள்..!

இழந்ததை மதியுங்கள்

எல்லோரின் வாழ்க்கையும் எல்லா சூழ்நிலையிலும் அழகாக இருப்பதில்லை. பல பேர் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையில் நமக்கு மிகப் பிடித்தவர்களை இழந்திருப்பார்கள். அந்த கணம் வலிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால் நாம் அதிலிருந்து கடந்து வருவது என்பது நம்மால் முடிந்த காரியம். எனவே நீங்கள் இழுந்து நபர் என்னவெல்லாம் செய்வாரோ அதை உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது செய்து பாருங்கள். அவர்களுடன் இருந்த அழகான நேரத்தை நினையுங்கள். அதேபோல் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்லுங்கள். இதனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் உங்கள் முகத்தில் புன்னகை பூக்கும். அதைத் தவிர்த்து வருத்தத்தை மறந்து விடுங்கள். உங்களை விட்டுப் பிரிந்த உறவுகள் நிச்சயம் உங்களுக்கு துணையாக எப்போதும் உங்கள் அருகில் இருக்கும். எனவே அவர்களால் ஏற்பட்ட மோசமான கடந்த காலத்தை மறந்து அவர்களுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான நிகழ்காலத்தை உருவாக்குங்கள்.

நாம் செய்த தவறுகள்

சிறுவயதில் நம்மை அறியாமல் நாம் பல தவறுகளை செய்து இருப்போம். அதில் திருடுவது, பொய் சொல்வது, மற்றவர்களை காயப்படுத்துவது. இது அனைத்திற்கும் மேலாக ஏதாவது துரோகத்தை செய்வது. நீங்கள் சிறுவயதில் செய்தது நீங்கள் அறியாமல் செய்த ஒன்று, எனவே அதை மறந்து தற்போது உங்கள் முதிர்ச்சியை பரிசோதியுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உங்கள் சிறுவயதில் உங்களால் பாதிக்கப்பட்டவரிடம் சென்று மன்னிப்புக் கேளுங்கள், அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். பெரும்பாலான இந்த சூழ்நிலையில் அவர்கள் அனைத்தையும் ஏற்கனவே மறந்திருப்பார்கள். நீங்கள் சொல்லும்போது கூட அவர்களுக்கு ஞாபகம் இருக்காது, எனவே இதை நினைத்து உங்கள் நிகழ்காலத்தை நன்றாக வாழுங்கள். நீங்கள் ஏதாவது விலையுயர்ந்த பொருட்களை திருடி இருந்தால் அந்தப் பொருளை அவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுங்கள். இதனால் உங்கள் மனம் நிறைவடையும்.

மேலும் படிக்க – நம் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன..!

கடந்து வரும் பாதை

உங்கள் மோசமான கடந்த காலத்திலிருந்து கடந்து வருவதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒருசில செயல்கள். அது என்னவென்றால் நண்பர்களுடன் சுற்றுலா செல்லுங்கள், உங்கள் கடந்த கால நினைவுகளை எல்லாம் மறக்கும் அளவிற்கு புதிய கொண்டாட்டங்களை மேற்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை புதுப்பிக்கும் வகையில் அதே நபர் அல்லது அதே இடத்தில் புதுமையான நல்ல செயல்களை செய்யுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு அதில் இருந்து உங்களுக்கு கிடைத்த நன்மைகளை அனுபவிங்கள்.

உங்கள் வாழ்க்கை அழகானது, அதை அறிந்து கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டு தவிக்காமல் நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையை அற்புதமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன