மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை போக்கும் வழிகள்.!

How to get rid of Menstrual Stomach Pain

மாதத்தில் 5 நாட்கள் பெண்களுக்கு ஏற்படும் இயற்கை ரத்த சுத்திகரிப்பு சுழற்சிமுறையே இந்த மாதவிடாய். இச்சமயங்களில் பெண்களுக்கு முதல் மூன்று நாட்களில் வலியில் அதிகமாக இருக்கும், அதை தவிர்த்து இவர்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் இதுபோன்ற நேரங்களில் அவர்கள் அதிகளவிலான அசௌகரியத்தை உணர்வார்கள்.

மனநிலை மாற்றங்கள்

எப்போதும் மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள்கூட மாதவிடாய் சமயங்களில் சோர்வாகவும், எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடு செலுத்தாமல் ஒரே இடத்தில் இருப்பார்கள். இதை தவிர்த்து மிக எளிதில் இவர்கள் கோபமும், எரிச்சலும் அடைவார்கள். எனவே இதுபோன்ற சமயங்களில் அவர்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதே ஆண்களின் கடமையாகும்.

ஒரு வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் வலி அவர்கள் முதுமை அடையும் வரை இருந்து கொண்டே இருக்கும். எனவே மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற உடல் பிரச்சனையால் அவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள் எனவே அதை அறிந்து அவர்களுக்கு ஏற்ற உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதற்கான வழிகளை குடும்பத்தினர் மற்றும் ஆண்கள் அமைத்து தரவேண்டும்.

மேலும் படிக்க – கொரிய நாட்டு பெண்களின் அழகு குறிப்புகள் உங்களுக்காக

மாதவிடாய் வலியை குறைக்கும் உணவுகள்

மாதவிடாய் சமயங்களில் பெண்களின் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும் இதை தவிர்த்து இவர்கள் எரியக்கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மேலும் இவர்களுக்கு வலியையும் ரத்தப் போக்கையும் அதிகரிக்கும். எனவே இதைத் தடுப்பதற்கு அவர்கள் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக கொழுப்புகள் உள்ள உணவு, பீட்சா, பர்கர், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என அனைத்தையும் தவிர்த்து பழங்கள் காய்கறிகள் என குளிர்ச்சித் தன்மையுடைய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் சமயங்களில் பெண்கள் அதிக அளவிலான நீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். உங்களால் குடிநீர் அதிகமாக பிடிக்கவில்லையென்றால் அதன் சக்திகளை கொண்ட பழங்களை சாப்பிடலாம் அல்லது பழச்சாறு குடிக்கலாம்.

மாதவிடாய் சமயங்களில் பெண்கள் பால் கலக்காத மூலிகை தேநீர் குடிக்க வேண்டும். இஞ்சி, புதினா, துளசி, மஞ்சள் இவைகளால் செய்யப்பட்ட தேனீர் உங்கள் உடலில் வலியை குறைத்து ரத்தப்போக்கை சீராக்கும்.

அதேபோல் மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலியைப் போக்குவதற்காக நாம் மீன் எண்ணெய் மாத்திரையை பயன்படுத்தலாம். அல்லது வைட்டமின் பி1 மாத்திரைகளை பயன்படுத்தலாம். இச்சமயங்களில் வேகவைத்த மீன்களும் உங்கள் உடல் வலிமையை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – ரிச் அண்ட் கியூட் லுக் வேணுமா பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க.!

வலிகளை குறைக்கும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்றவுடன் உடலை வாட்டி வதைக்கும் அளவிற்கு செய்யப்படும் பயிற்சிகள் என்று என்ன வேண்டாம் இது மிக எளிமையான முறையில் மனதை ஒரு நிலைப்படுத்தி கிட்டத்தட்ட யோகா செய்வதை போல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் கவனத்தை சிதற செய்யும் இந்த உடற்பயிற்சி கை, கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் வலி ஏற்படாமல் இருப்பதற்கு செய்ய வேண்டும்.

வீட்டில் அக்குபஞ்சர் மேட் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள் மாதவிடாய் சமயங்களில் அதன் மேல் உட்காரும்போது அல்லது படுக்கும் போது உங்கள் நரம்புகள் வலுவடைந்து உங்களுக்கு ஏற்படும் வலிகளை குறைத்துவிடும். அதேபோல் யோகா பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

மேலும் படிக்க – கண் மேக்கப்பில் நாம் கவனித்து செய்ய வேண்டியது!

வலிகளுக்கான மருத்துவ உதவி

ஒரு சிலருக்கு மாதவிடாய் சமயங்களில் வலி அதிகமாக இருக்கும். இதற்காக அவர்கள் பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வார்கள். ஆனால் நாளடைவில் இதனால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ப மாத்திரைகளை பயன்படுத்துவது நல்லது அதை தவிர்த்து முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகள் மூலமாக உங்கள் வலியை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் தங்கள் மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். அதை மறந்து தேவையற்ற உணவு, மது, புகைபழக்கம் போன்றவைகளை உருவாக்கிக் கொண்டால், இது போன்ற சமயங்களில் இவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் மற்றும் வழிகள் ஏற்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன