வாயுத் தொல்லையிலிருந்து விடுதலையாவதற்கான வழிகள்..!

How to get rid of gas trouble naturally

வெவ்வேறு விதமான சூழல்களில் நம்மை சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை தான் வாய்வுத்தொல்லை. சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 14 முறை வாயுவை வெளியேற்றுகிறார். இதில் கெடுதல்கள் இருந்தாலும் நன்மைகளும் இருக்கின்றது. எப்போது வாயு சத்தத்துடன் அதிகளவு துர்நாற்றத்துடன் வெளியேறுகிறதோ அப்போதுதான் இது உங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. எனவே ஒரு சில உணவுகள் மூலமாக உங்கள் வாயுவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இந்த பதிவில் அறிவோம்.

வாயு வெளி வருவதற்கான காரணம்

நாம் சாப்பிடும் உணவுகள் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இரண்டிற்கும் சரிசமமாக செல்கிறது. இந்த இரண்டுக்கும் இடையே மிச்சமிருக்கும் உணவுகளில் பாதிப்புகளை உண்டாக்காத பாக்டீரியாக்கள் சேருகிறது. இதனால் அந்த உணவுகளின் புளிப்புத்தன்மை மற்றும் துர்நாற்றம் அதிகரிக்கிறது. இதுதான் வாயுவாக வெளியேறி நம்மை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. நம்முடைய வாயு உற்பத்தி ஆவதற்கு நமது உணவுகள் தான் காரணம். இதை தவிர்த்து மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தாமதப்படுத்தி மலம்  கழிப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இது போன்ற செயலை செய்யாமல் உங்களின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

மேலும் படிக்க – இரும்பு தேகம் பெற கரும்புச்சாறு சாப்பிடுங்க

வாயுவின் வகைகள்

வாயுக்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. அதன் அதிகப்படியான வாயுக்களை வெளியேற்ற செய்யும் உணவுகள் பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, சோளம், உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், வெங்காயம், கோதுமை மற்றும் ஓட்ஸ்.

மிதமான வாயுவை வெளியேற்ற செய்யும் உணவுகள் ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், பிரெட், மற்றும் செரல்.

குறைந்த அளவிலான வாயுவை உற்பத்தி செய்து வெளியேற்றும் உணவுகள் எண்ணெய், அரிசி, முட்டை, மீன், ஆட்டிறைச்சி போன்ற உணவுகள்.

மேலும் படிக்க – பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க

நாம் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது இடையிடையே பச்சை காய்கறிகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே சமயத்தில் பச்சைக் காய்கறி உணவுகளை சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இது உங்கள் உணவுடன் சேர்ந்து செரிமானமாகும் ஆனால் அதன் சக்திகள் தனியாக பிரிந்து உணவில் புளிப்பு தன்மை ஏற்படுகிறது. இதனால் வாயு வெளியேற்றம் அதிகரிக்கிறது அதே சமயத்தில் வாயுவுக்கும் இது காரணமாகிறது.

ஒரு சிலர் உணவுகளை அவசர அவசரமாக உட்கொள்வார்கள். இதனால் அவர்கள் உணவுடன் சேர்ந்து காற்றும் வேகமாக உள் நுழைகிறது. இதனாலும் வாயுக்கள் அதிகரிக்கிறது.

வேகவைக்கும் உணவுகளை நாம் சரியாக வேக வைக்க வேண்டும். அது முழுவதுமாக வ்

வேந்துள்ளதா என்பதை அறிந்து அந்த உணவுகளை பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில் அது செரிமான பிரச்சனையை உண்டாக்கி உங்களின் வாயு பிரச்சினையையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – குங்குமாதி தைலத்தின் பயன்பாடுகள்..!

வாயு பிரச்சினைக்கான தீர்வு

வாயு பிரச்சினைக்கு எதிராக போராடும் குணம் கொண்ட உணவுகள் பூண்டு, ஓமம், இஞ்சி, சோம்பு போன்றவைகள். இவைகளைக் கொண்டு உணவுகளை சமைக்கும் போது உங்களுக்கு ஏற்படும் வாயு பிரச்சனையை இது குறைக்கிறது.

அதே சமயத்தில் நாம் எந்த உணவையும் வேக வைக்கும்போது சிறிதளவு இஞ்சியை அதில் கலந்தால் உங்கள் உணவில் இருக்கும் கெட்ட அமிலங்களை அகற்றி வாயு பிரச்சனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறது.

நீங்கள் உங்கள் கையில் அவ்வப்போது இஞ்சி மிட்டாய், இஞ்சிமரப்பா வைத்துக்கொள்வது நல்லது. அதே சமயத்தில் ஏதாவது மிகப்பெரிய விருந்துக்கு சென்று அதிகமாக உணவை உட்கொண்டு விட்டால் இஞ்சி காபி, இஞ்சி சூரணம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன