சளி பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய்கள் தீர்வாகும்..!

how to get rid of cold immediately

மழைக்காலமும், குளிர்காலமும், வெயில் காலமோ என எல்லா காலத்திலும் ஜலதோஷம், சளி போன்ற பிரச்சினைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் ஒரு சிலர் குளிர்ச்சியான உணவுகளை உண்பதால் இது ஏற்படுகிறது என்கிறார்கள், மற்றவர்களோ சுவாசத்தில் ஏற்படும் அலர்ஜியினால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது என்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜலதோஷம் மற்றும் சளி பிரச்சினைகள் நமக்கு பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படுகிறது. இதை சரி செய்வது என்பது இயலாத காரியம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அத்தியாவசிய இயற்கை எண்ணெய்களை வைத்து இந்த பிரச்சனையை நாம் நிரந்தரமாக குணப்படுத்தலாம்.

அத்தியாவசிய எண்ணெய் என்பது யூக்கலிப்டஸ், குங்கிலியம் எண்ணெய், புதினா எண்ணெய், கற்புறவல்லி எண்ணெய், இலவங்கப்பட்டை எண்ணெய், தேயிலை மர எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய்.

மேலும் படிக்க – அழகான வெண்மை நிற நகப் பராமரிப்புக்கு

யூக்கலிப்டஸ் எண்ணையை நாம் சரியாகப் பயன்படுத்தினால் நமது சுவாச பிரச்சினையை மிக விரைவில் தீர்த்துவைக்கும். இதை அதிக அளவில் குளிர் பிரதேசங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது எனவே இதன் மூலமாக செய்யப்படும் எண்ணெய்கள் நமது சுவாசம் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது.

புதினா எண்ணெயை கொண்டு நமக்கு ஏற்படும் சைனஸ் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபணமாகி உள்ளது. அத்தகைய வலிமையான புதினா எண்ணெயை பயன்படுத்தி நமக்கு ஏற்பட்டிருக்கும் சளி மற்றும் ஜலதோஷம் பிரச்சனையில் இருந்து தீர்வு காண முடியும்.

குங்கிலியம் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புகளை கொண்டுள்ளது. இதனால் ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை வர விடாமல் தடுப்பதில் இந்த எண்ணெயின் பங்கு இருக்கிறது. எனவே இதை பயன்படுத்தி குளிர் காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்திலிருந்து உங்களை பாதுகாக்க முடியும்.

மேலும் படிக்க – ராஜா போல வாழ்னுமா ராகி சாப்பிடுங்க..!

கற்பூரவள்ளி எண்ணெய்யை கொண்டு நமது சுவாச பிரச்சனை ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக அளிக்கலாம். இதையே பல இயற்கை மருத்துவமனைகளில் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கற்பூரவல்லி இலை மற்றும் பூக்களை கொண்டு எண்ணெய் தயாரித்து பல பிரச்சினைகளை தீர்க்கிறார்.

லவங்கப்பட்டை என்பது மிக ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருள். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை நாம் பயன்படுத்தினால் 90% நமக்குள் ஏற்படும் பாக்டீரியாக்களை இது வரவிடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதை தேநீரிலும் சேர்த்து குடிக்கலாம் இதன் மூலமாக நீங்கள் சளி பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

தேயிலை மர எண்ணெய், எலுமிச்சை எண்ணெய், லாவண்டர் எண்ணெயை போன்றவைகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. எனவே இதை பயன்படுத்தினால் உங்களுக்கு ஜலதோஷம், சளி மற்றும் எந்த ஒரு பாக்டீரியா தொற்றுக்கள் இல்லாமல் எல்லா காலங்களிலும் சந்தோஷமாக இருக்கலாம்.

மேலும் படிக்க – கற்றாழையில் கூந்தல் பாதுகாப்பு குறிப்புகள்.!

இந்த எண்ணெய்களை நாம் சரியாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். இதைக் கொண்டு நாம் வெளிப்புறத்தில் தடவலாம் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பக்குவத்தை கொண்ட எண்ணெய்களை சமையலுக்குப் பயன்படுத்தலாம். மேலும் மருந்தை போல் குடிக்கும் எண்ணெய்களை நேரடியாக உட்கொள்ள லாம். எனவே இதை சரியாக பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன