அதிக நேரம் செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள்.!

How To Get Out Of Mobile Phone Addiction

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் ஊருக்கு ஓர் தொலைபேசி இருக்கும் ஆனால், இப்போது இருக்கும் காலகட்டங்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட தொலைபேசி என் இருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் எல்லோர் கையிலும் செல்போன் வளர்ந்து விட்டது. ஆனால் இதை அதிக நேரம் பயன்படுத்தும் விளைவினால் நமது உடல் நலம் பாதிப்படைகிறது. இதை சரி செய்வதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களை பார்ப்போம்.

சிமோன் பொலிவார் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் யார் ஒருவர் 4 முதல் 5 மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்களே அவர்களுக்கு உடல் பருமன் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் உங்கள் மூளை இதற்கு அடிமையாகி விடும் எனவே இது உங்கள் கண் பார்வை குறைபாடு ஏற்படுத்தும் மற்றும் உங்கள் கவனத்தைச் சிதறடிக்க செய்யும்.

மேலும் படிக்க – பெண்களையே அதிகம் குறிவைக்கும் உடல்பருமன் காரணங்களும் தீர்வுகளும்..!

இது போன்ற பிரச்சினைகளில் இருந்து நாம் தப்புவதற்காக ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நேரம் செல்போன்களை பயன்படுத்துகிறோம் என்பதை அறிய வேண்டும். அதற்கு நீங்கள் எப்போதெல்லாம் உங்கள் செல்போனை பயன்படுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இறுதியில் எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை கணக்கிட்டு பாருங்கள். அது 4 மணி முதல் 5 மணி நேரம் இருந்தால் நீங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அர்த்தம். இதை சரிசெய்வதற்கு இந்த மூன்று வழிகளை பயன் படுத்துங்கள்.

நாம் செல்போனில் அதிகநேரம் செயலின் உள்ளே நேரத்தை கழிக்கிறோம். இதை தவிர்ப்பதற்காக நாம் அந்த செயலின் அறிவிப்பை துண்டிக்க வேண்டும் அதாவது நோட்டிபிகேஷனய் ஆப் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எந்த செய்தியாக இருந்தாலும் உங்களை அது தொந்தரவு செய்யாது. இதனால் நீங்கள் செல்போனை அடிக்கடி எடுத்து பயன்படுத்தும் நோக்கம் குறையும்.

முக்கியமான செயலிகளை மட்டும் உங்கள் போனில் வைத்துக்கொள்வது நல்லது. சில சமயங்களில் நாம் பொழுதுபோக்கிற்காக ஏகப்பட்ட செயலிகளை வைத்திருப்போம். இது உங்கள் நேரத்தை வீணாக்கி விடும் நாம் ஏதாவது ஒரு செயலியை பயன் படுத்தும் போது நம் கவனம் சிதறி மற்ற எல்லா செயலிகளையும் பயன்படுத்த நேரிடும். இதை தடுப்பதற்காக தேவையான செயலிகளை மட்டும் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க – திரிபாலா ஆரோக்கியத்தின் ஆசானுன்னு சொல்லலாம்.!

ஒருநாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை உங்கள் மொபைல் போனுக்கு ஓய்வு அளியுங்கள். அதாவது குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு உங்கள் மொபைல் போனை அணைத்து வைப்பது நல்லது. உங்களுக்கு ஏதாவது முக்கியமான அழைப்புகள் வரும் எனில் அதை வைப்ரேட் மோடில் போட்டு வைத்து மற்ற ஏதாவது செயலில் கவனத்தை செலுத்துங்கள்.

இவைகள் அனைத்தும் பின் தொடர்ந்தால் நீங்கள் மொபைல்போன் மேல் வைத்திருக்கும் மோகங்கள் குறைந்து உங்களுக்கான வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். எனவே தொழில்நுட்பம் நமக்காக கண்டுபிடிக்கப்பட்டது தவிர அதற்காக நாம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து தேவைக்கேற்ப உங்கள் மொபைல் போனை பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன