நாட்டுப் பழங்கள் ஹைப்ரிட் பழங்கள் எவ்வாறு வேறுபாடு  கண்டறிவது???

  • by
how to find difference between natural and hybrid fruits

வெறும் இனிப்பு சுவையை மட்டும் கொடுக்கும் சாக்லெட்டுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை விட பழங்களை வாங்கி கொடுத்தால் அதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், தனிமங்களும் பல்வேறு உயிர்ச்சத்துக்களும் இனிப்புடன் சேர்ந்து குழந்தைகளுக்கு அற்புதமான மருத்துவ திறனை அளிக்கும் என்று நம்பிபழங்களை வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம். 

ஆனால் இப்போது கிடைக்கும் பழங்கள் எல்லாம் ஹைபிரிட் ஆகத்தான் இருக்கிறது. அதிக இனிப்பும், பார்ப்பதற்கு பெரிய பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே கொண்டுள்ள இந்த ஹைபிரிட் வகை பழங்கள் இனிப்பை மட்டும் தான் கொடுக்கின்றன. இதற்கு பதிலாக நம் குழந்தைகளுக்கு கொஞ்சமாக விட்டமின் தெளித்த இனிப்பு பண்டங்கள்  மட்டுமே போதுமே என்ற எண்ணம் தோன்றுகிறது.

நம் பாரம்பரிய பழங்களில் தான் அனைத்து வகையான சத்துக்களும் இருக்கின்றன. அதை எவ்வாறு கண்டறிந்து வாங்கலாம் என்பதை விளக்கும் பதிவுதான் இது.

மாதுளை பழம்

பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மாதுளை பழத்தில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேவையான ஹீமோக்ளோபின் ஐயும் அள்ளித்தரும் சிறப்புப் பண்பு மற்ற கனி வகைகளைவிட மாதுளைக்கு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.

மேலும் படிக்க – மாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மாதுளை என்றதுமே பார்ப்பதற்கு பளபளப்பாக அளவில் பெரியதாக கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் ஆப்கன் மாதுளையை வாங்கி உண்ணாதீர்கள்.

நாட்டு மாதுளை எப்படி இருக்கும்? 

புளிப்பு சுவையுடன் கூடிய புளிப்பு மாதுளை, நாட்டு மாதுளை என்று கேட்டு வாங்குங்கள். தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையில் இனிப்பு நம் நாட்டு பாரம்பரிய மாதுளையை ஓரம் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. மெல்ல மெல்ல உள் செல்லும் இனிப்பு சுவையும், இரும்பு சத்தையும், நார் சத்தையும் அதிகம் பெற்று இதயத்துக்கு பயன் அளிக்கும், புளிப்பு சுவையும் நமக்கு தரும். நம்ம ஊர் மாதுளை பழங்கள் சற்று விலை குறைவாக இருந்தாலும் அவை தான் உடலுக்கு மிக தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது.

திராட்சைப்பழம் 

பன்னீர் திராட்சையை பலருக்கும் பிடிக்காது. காரணம் என்ன தெரியுமா? அதில் கொஞ்சம் துவர்ப்பு சுவை அதிகமாக இருக்கும். அதனுள் இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு சாப்பிடுவதே பெரும்பாலோனோருக்கு சற்று கடினமானதாக இருக்கிறது. ஆனால் மஸ்கட் திராட்சை என விவசாயிகள் அழைக்கப்படும் இந்த பன்னீர் ஆட்சியில் ஆரோக்கியம் நல்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது நமக்கு தெரிவதில்லை.

இதய நோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படும் கிரேப் சீட் ஆயில் 

இந்த பன்னீர் திராட்சையில் உள்ள கொட்டையை நாம் சாப்பிட்டுவிட்டு கீழே எறிந்து விடுகிறோம். ஆனால்   ரிஸ்வெரட்ரால் எனும் சத்து நிறைந்து இருக்கும் கிரேப் சீட் ஆயிலுக்கு கிரேக்க நாட்டில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இது இதய நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த திராட்சை விதை எண்ணெயை தான் கேப்சல் குப்பிகளில் அடைத்து நம்மை சாப்பிட வைக்கிறது இந்த வர்த்தக உலகம்.

கொட்டை இல்லாத கலிபோர்னியாவின் இனிப்பு திராட்சையை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை விட நம்மூர் பன்னீர் திராட்சை எவ்வளவோ மேலானது.

ஆரஞ்சு பழம் 

கொஞ்ச நாட்களாகவே சற்று வெளிறிய பச்சை கொண்ட தோலுடன் தொளதொளவென்று இருக்கும் உரிப்பதற்கும் எளிமையாக இருக்கும் அந்த கமலா ஆரஞ்சு கண்களுக்கு தென்படுவதே அரிதாக இருக்கிறது. கமலா ஆரஞ்சு என்ற பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவையெல்லாம் கமலா ஆரஞ்சு கொடுக்கும் சத்தை நிச்சயமாக கொடுப்பதில்லை.

பார்ப்பதற்கு பெரிது பெரிதாகவும் கண்களை ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத்திலும், அதிகம் இறக்குமதி செய்யப்படும் இவைகள் எந்த வகையிலும் நம் உடலுக்கு நன்மை செய்யாது.

ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள லெசித்தின் சத்து புற்று நோயை தடுக்கும் மருந்துகளில் பயன்படுகிறது. ஆரஞ்சு சுளையை அப்படியே சாப்பிட்டால் கிட்டத்தட்ட 15 கிராம் நார்ச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இவையெல்லாம் பார்ப்பதற்கு பளபளவென அடுக்கி வைத்திருக்கும் மற்றவகை ஆரஞ்சுகளில் நிச்சயமாக கிடைப்பதில்லை அதில் வெறும் இனிப்பும் பழச்சாறு மட்டும் தான் அதிகம் கிடைக்கிறது.

மேலும் படிக்க – சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்..!

ஏற்கனவே சந்தைகளில் விற்கப்படுவது பெரும்பாலான  ஹைப்ரிட் ராகம் தான். இதில் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஹைப்ரிட் வகைகள் பழங்களிலுள்ள இயற்கையாக இருக்கும் அனைத்து பயனையும் காலி செய்து விடுமோ இந்த ஹைபிரிட் பழம் என்று அஞ்ச வைக்கிறது. 

கடைகளில் விற்கும் ஒவ்வொரு பழங்களிலும் ஹைபிரிட் மிதிக்கிறது நம் நாட்டு பழங்களும் இருக்கின்றன நம் பலத்தை நமக்கு பயமுறுத்தும் கிடைக்க வேண்டுமெனில் கடைக்காரர்களிடம் கேட்டு வாங்குங்கள்.  அனைத்து பழங்களிலும் ஹைபிரிட் தான் அதிக எண்ணிக்கையில்  இருக்கிறது. இதை வாங்குவதை தவிர்த்து எண்ணிக்கையில் குறைவாகவும் சத்துக்களை அதிகமாகவும் கொண்ட நம் நாட்டு பாரம்பரிய பழங்களான மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை ,சிவப்பு கொய்யா போன்ற ரகங்களை வாங்கி ஆரோக்கியமாக வாழ்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன