வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கும் வழிகள்..!

  • by
how to earn money by working from home

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் வீட்டில் அடங்கி உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. அச்சமயங்களில் நாம் அலுவலகத்திற்கு மற்றும் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் அடைந்திருக்கிறோம். ஒருசிலருக்கு இச்சமயத்தில் வருமானம் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு சிலரின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது, எனவே இவர்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

தனிப்பட்ட வேலைகள்

உங்கள் திறமைக்கு ஏற்றபடி எல்லா வேலைகளும் இணையதளத்தில் இருக்கின்றன. உங்களுக்கு டிசைனிங், வெப் டிசைனிங், போட்டோஷாப், கோடிங், கேமின் ஆப் டப்பிங் ரைட்டிங், டைப்பிங், டேட்டா என்ட்ரி இதைத் போல் ஏராளமான வேலைகள் ஒரு சில இணையதளத்தில் இருக்கின்றன. அதில் நம்பிக்கை உடைய மூன்று இணையதளம் எதுவென்றால். பிரீலன்சர்.காம், அப்வொர்க்.காம், ஃபைவர்.காம். இந்த மூன்று இணையதளத்தில் உங்களுக்கு பிடித்தமான வேலைகளை தேர்ந்தெடுத்த செய்யலாம். இதில் உங்கள் வருமானத்தை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் அதனால் முதலில் வேலை செய்பவர்கள் உங்கள் வருமானத்தை குறைந்த அளவு தேர்வு செய்யுங்கள், அதேபோல் அவர்கள் சொல்லும் நாட்களுக்கு முன்பே உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் வேலைகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

பாடம் எடுக்கலாம்

நீங்கள் ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அதை பற்றிய காணொளி பதிவுகளை ஒரு சில இணைய தளத்தில் பதிவிடலாம். உங்கள் காணொளிகளை பணம் கொடுத்து பார்ப்பவர்களினால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். எனவே ஒருமுறை பதிவிட்டால் போதும் அதை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் உங்கள் காணொளியில் தெளிவும் மற்றும் உண்மைத் தன்மையும் இருக்க வேண்டும். இதற்கான இணையதளம் எதுவென்றால், யூடிமீ.காம், ஸ்கில்ஷர்.காம்.

புகைப்படம் எடுப்பவர்கள்

நீங்கள் புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் உங்களிடம் இருக்கும் புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிட்டு வருமானம் ஈட்டலாம். ஆனால் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் தரமாகவும் மற்றும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் ஷட்ட்டரேஸ்டாக்.காம், கெட்டிஇமேஜ்.காம், அளமி.காம் பொன்ற இணைத்தளத்தில் பதிவிடலாம். ஒரேடியாக உங்கள் புகைப்படம் அனைத்தையும் பதிவிடாமல் ஒவ்வொரு வாரமும் பிரித்து பதிவிட வேண்டும். இதன் மூலமாக நீங்கள் எப்போதும் வேலை செய்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள், இதன் மூலம் உங்கள் தரமும் அதிகரிக்கும்.

யூடியூப் மற்றும் டிக் டோக்

யூடியூப் மற்றும் டிக் டோக் வீடியோ பதிவிடுவதன் மூலமாக உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யார் ஒருவருக்கு அதிக அளவிலான சப்ஸ்கிரிபர் மற்றும் பார்வையாளர்களை வைத்து இருகிறார்களோ அவர்களுக்குதான் வருமானம் கிடைக்கிறது. அதிலும் சிறிய மொழிகளைவிட பொதுவான மொழிகளில் பதிவிடுபவர்களுக்கு வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.

மேலும் படிக்க – காதலா வேலையா வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்..!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

இணையத்தளத்தில் ஏராளமான வணிகத் தளங்கள் இருக்கின்றன அதில் முதன்மையாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட், ஸ்ணப்டியல் மற்றும் அலிபாபா போன்ற பக்கங்கள். இதில் நீங்கள் பொருட்களை வாங்கவும் செய்யலாம் மற்றவர்களுக்கு பரிந்துரையும் செய்யலாம். இதன் மூலமாக நீங்கள் பரிந்துரை செய்த பொருட்களை ஏறாவது வாங்கினால் அவர் வாங்கிய தொகையில் இருந்து 10 சதவீதம் உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். அதைப்போல் நீங்கள் ஏதேனும் உடைகள் மற்றும் புத்தகங்களை படைத்தால் அதையும் இந்த தளங்கள் மூலமாக விற்கலாம்.

இது அனைத்திற்கும் மேலாக உங்கள் புத்திக்கூர்மை அதிகமாக இருந்தால் ஓஎல்எக்ஸ் மற்றும் குயிக்கர் போன்ற தலங்களில் பழைய பொருட்களை வாங்கி அதன் விலையை ஏற்றி நீங்கள் மற்றவர்களிடம் விற்கலாம். ஓஎல்எக்ஸ் மற்றும் குவிக்கரை தவிர்த்து மீதி எல்லாத் தளங்களும் நம்பிக்கையானவை மற்றும் பணத்தை சரியாக கொடுப்பவர்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விவரங்களை தெளிவாக பதிவிடுட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன