நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி..!

  • by
how to do yoga to increase immunity power

தமிழகத்தில் பரவி வரும் கரேணா வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு குறைவாக உள்ளதோ அவர்கள் தான் இந்த வைரஸ் முழுமையாக தாக்கி உயிரை பறிக்கும் அளவிற்கு செல்கிறது. எனவே உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உணவின் மூலமாக அதிகரிப்பது மட்டுமல்லாமல், யோகப்பயிற்சி மூலமாக அதிகரித்து நோய்களை எதிர்த்து போராடுங்கள்.

யோகா பயிற்சி

அக்காலம் முதல் இக்காலம் வரை எவரொருவர் யோகப்பயிற்சியை அதிக அளவில் செய்கிறார்களோ, அவர்களுக்கு எந்த ஒரு நோய் பாதிப்புகளும் இல்லாமல் மிக ஆரோக்கியமாக இருக்க முடியும். ஒரு சில யோகா பயிற்சிகளை செய்தாலே உங்கள் ஆரோக்கியம் பலமடங்கு வலுவாக இருக்கும். அதிகாலையில் யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் ஆயுளை அதிகரித்து உங்கள் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. இது அனைத்திற்கும் மேலாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய வழிகளை யோகா பயிற்சியின் மூலம் நாம் செய்யலாம்.

மேலும் படிக்க – இசையின் மூலமாக செய்யப்படும் சிகிச்சையில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

அமர்ந்து சுவாசிப்பது

அமர்ந்து சுவாசிக்கும் யோகா பயிற்சியின் மூலமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதற்கு நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டு பிறகு உங்கள் தலையை மேல் நோக்கி பார்க்க வேண்டும். பின்பு உங்கள் இரண்டு கைகளையும் உங்கள் முதுகுக்குப் பின்னால் தரையில் வைத்து ஊன்றிக்கொண்டு தாடையை மேல்நோக்கி மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இதை 10 நிமிடங்கள் செய்தால் போதும்.

பாதி கடவுள் பாதி மீன்

தரையில் அமர்ந்து கொண்டு உங்களில் இடது காலை மடக்கி உங்கள் வலது காலின் மேல் வைக்க வேண்டும். பிறகு இடது கால் முட்டியில் உங்கள் வலது கை முட்டியை அதன் மேல் வைத்து உள்ளங்கையை விரித்து எதிரே காண்பிக்க வேண்டும். உங்கள் இடது கையை தரையில் ஊன்றி ஐந்து நிமிடம் நன்கு சுவாசித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முன்பக்கம் மடிதல்

நேராக நின்றுக்கொண்டு முன்பக்கமாக உங்கள் இடுப்பு வரை தரையில் மடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் இருக்கைகளில் பின்புறக் கால்களில் வைத்து 5 முதல் 10 முறை மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க – கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிகள்..!

கால்களைச் சுவற்றில் வைத்துக் கொள்ளுங்கள்

தரையில் படுத்துக்கொண்டு உங்களின் இரு கால்களை நேராக 90 டிகிரி அளவில் சுவற்றில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உங்களின் இரு கைகளை நன்கு விரித்து 5 முதல் 10 முறை மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும்.

இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்வதன் மூலமாக உங்கள் உடலில் ஆற்றல் அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன