அன்றாடகுளியல் ஆரோக்கித்தை அதிகரிக்கும்

  • by

வாழ்வில் குளியல் என்பது மிகவும் அவசியமானது ஆகும். குளியலானது முறையாக செய்யும் பொழுது உடலில் அழுக்கை போக்குகின்றது. உடலில் ஆற்றலை அதிகரிக்கின்றது. உடல் சூட்டை தணிப்பதில் குளியல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 
உடல், மனம்ல் ஆதமா ஆகிய மூன்றினையும்  சமநிலையாக இயங்கச் செய்வதில் இது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது, தினமும் இரு வேளை  குளித்தல் அவசியமானது ஆகும். 


குளியலின் மூலம் உடலில் உள்ள நமது ஆன்மாவை இயக்க முடியும்.  குளியலுக்கு நீங்கள் தினமும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள். காலை நேரத்தில் குளிப்பது  ஆயுர்வேத நடைமுறையில்  ஒரு முக்கியமான ஒரு டிரீட்மெண்ட் ஆகும். 


.ஒரு நிதானமான குளியல் உடலினை ஆரோக்கியமான சூழலில் நம்மை உருவாக்கித் தருகின்றது. , பதட்டமான தசைகளை எல்லாம்  இளைப்பாறச் செய்கின்றது. உடலில் மூடி கிடக்கும் துளைகளைத் திறப்பதுடன் ஆழந்த ஒரு சுத்தம் செய்கின்றது. உடலின்  திசுக்களுக்கு ஈரப்பதத்தை மீண்டும் கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. அன்றாட வாழ்வுக்கு தினம் ஒரு சிகிச்சைமுறை பரிமாணத்தை  வழங்குகின்றது. 

குளியலில் அந்த  மூன்று நிமிடத்தில்  அடையும் அதிசயம்:

ஆயுர்வேத மருத்துவத்தில்  தினசரி மசாஜ் செய்வது சிறப்பாகும். அதனை  அப்யங்கா  என்று அழைபோம்.  உங்கள் உடல் மற்றும்  மனதையும் உடலையும் ரீசார்ஜ்  செய்யும் ஒரு இயற்கை நிவாரணி குளியல் ஆகும். குளியலை சிறப்பாக செய்து வந்தால் , ரத்த ஓட்டம் சீராகுகின்றது. உடலில் உள்ள, நச்சுகளை  உடலில் இருந்து எளிதாக வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. 

அன்றாடம் மூன்று நிமிடங்களுக்கு தினமும் தலை, நெற்றி,  கை மற்றும் கால்களை எள் எண்ணெயுடன் மசாஜ் செய்து வருவதனால் கிடைக்கும் நன்மைகள் அறிவோம். 

தினமும் குளிப்பதால்  சருமத்தில் சேர்ந்திருக்கும்  அசுத்தங்கள் எல்லாம் நீங்கும் மற்றும் நச்சுகள் ஆகியவற்றை  தினம் மூன்று நிமிடம் குளிப்பதால் போக்கும். இது ஆற்றலை ஒன்றிணைகிறது.

குளியல் ஆரோக்கியம்

உங்கள் உணர்வுகளை ஊக்கப்படுத்துதல் :

குளிப்பதனால் நமது உணர்வுகள் அனைத்தும் ஒன்றுபடும். 

இது எளிமையானது ஆகும்.  குளியலை முறையாக பூர்த்தி செய்வதன் மூலம் தினந்தோறும் குளியல் பயன்களை அதிகப் படுத்தி  நமது உணர்வுகளை ஊக்கப் படுத்தி செயல்பட வைக்கலாம். . 

அன்றாடம் குளிப்பதன் மூலம்   நமது ஆன்மாவை திறக்கும் குளியலுடன் இதையும் பாலோ பண்ணுங்க,   கண்கள் மூடி அதன்மீது தூய ரோஜாவை நீரில் ஊறவைத்திருக்கும் பட்டைகளை வைக்கவும். அது மன அழுத்தத்தை அகற்றுகின்றன புத்துணர்வு அதிகரிக்கும். 

எண்ணெய் மசாஜ் செய்து ஊற வைத்து , குளிக்கும்போது  ஆழ்ந்த மூச்செடுத்து விடுதல் அவசியம்.

  ஆழ்ந்த சுவாசம் உடலின் சேனல்களை திறந்து, நுரையீரல்கள் மற்றும் உடலுக்கு ஆக்சிஜனை கொடுத்து புத்துணர்வு பெறுகின்றது. குளியலானது   களைப்பை நீக்கி மனத் தெளிவை கட்டமைத்து ஒழுங்குபடுத்துகின்றது.

குளியல் ஆரோக்கியம்

குளியல் ஒரு அரோமா தெரபி:

குளியல்  ஒரு மென்மையான அரோமாதெராபி ஆகும். இதன்  மூலம் குளியல் சிகிச்சையின் மதிப்பு அதிகரித்து ஆற்றல் கிடைக்கச் செய்யும். 

தினமும். குளிக்கும் நீரில்  3-4 சொட்டு அரோமா எண்ணெய் எனப்படும் வாசனை மிகுந்த எண்ணெய்  சேர்க்க வேண்டும். அல்லது குளியல் உப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இதிலுள்ள நறுமணம் விரைவில் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் மனதில் ஒரு சிகிச்சைமுறை செய்தியைப்  பரப்பி புத்துணர்வு உண்டாக்குகின்றது..

பசுமையான நல்ல செழிப்பு மிக்க  தாவரங்களை குளியலறையில் வைத்தல் நல்லது. இதன் மூலம் சுத்திகரிக்கப் பட்ட சுற்றுச்சூழலை இது அழகுப்படுத்துகின்றது.

குளியல்

குளித்து வந்தால் மனம்  மாற்றம் பெறும்:

தினமும் குளித்து வந்தால் உணர்ச்சிகளை சீராக்கும், மேலும் இது மனதிலுள்ள நரம்பு மண்டலத்தை சமப் படுத்துகிறது. உடலின் இரத்த ஓட்டத்தை  சீரான நிலையில் இயங்க வைக்கின்றது. மனதை மென்மையாக்கி அமைதிப் படுத்தி  ஆற்றல் நிலையை உயர்த்துகிறது

இது உடல் பசியைத் தூண்டும் ஜாடராக்கினியை ஊக்குவித்து  செரிமான செயல் பாட்டை முறைப்படுத்துகின்ற்து.

நலா குளித்து வந்தால் உடலில் ஏற்படும் சோர்வு, தூக்கம், களைப்பு எரியும் உணர்வு, தாகம், அரிப்பு மற்றும் வியர்வை ஆகியவற்றை நீக்கச்ச் செய்யும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன