வீட்டிலேயே மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது எப்படி?

  • by
how to do pedicure and manicure at home

பெண்கள் தங்கள் அழகை அதிகரிப்பதற்காக முதல் நாள் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி தங்களை அழகாக வைத்துக் கொள்கிறார்கள் ஆனால் ஒரு சில பெண்கள் முக அழகையும் சரும அழகையும் தவிர்த்து தங்கள் தங்கள் கால்கள் மற்றும் பாதங்களை சரியாக கவனிப்பதில்லை இதனால் நாளடைவில் அவர்களின் நகங்களில் கருமைகள் ஏற்படும் பின்பு பாதங்களில் வெடிப்புகள் உண்டாகி வலிகளை அதிகரிக்கும். இதை எப்படி தடுக்கலாம் என்பதை எளிய முறையில் காணலாம்.

மெனிக்யூர் பெடிக்யூர்

மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கு நமக்கு தேவையான சில பொருள்கள் இதோ, நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன், ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், ஷாம்பூ, கல் உப்பு, நெயில் கட்டர்,  கிரப்பர் மற்றும் ஏதேனும் எண்ணெய்.

மேலும் படிக்க – கண்களில் லென்ஸ் அணிபவர்கள் மேக்கப் செய்வது எப்படி?

செய்முறை

ஆல்கஹால் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவரை கொண்டு உங்கள் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷை அகற்ற வேண்டும்.

ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் கல்லுப்பு, ஷாம்பூ, பாதி எலுமிச்சை சாறு இவைகளை ஒன்றாகக் கலந்து அதனுள் நமது கால்களை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பிறகு நமது பாதங்கள் மற்றும் நகங்களில் ஸ்க்ரப்பர் அல்லது கற்களைக் கொண்டு நன்கு தேய்க்கவேண்டும். இதன் மூலமாக நமது பாதங்களில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

நகங்கள் பராமரிப்பு 

பிறகு நமது கால்கள் விரல்களில் இருக்கும் நகங்களை துண்டித்து அதன் முனை பகுதிகளை மெழுகு போல் நீட்டிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – கத்திரிக்காயை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்குங்கள்.!

கடைசியில் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி நம் பாதங்களில் எண்ணையை தடவி அதன் மேல் காலில் அணியும் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலையில் எழுந்து உங்கள் பாதங்களை பாருங்கள். அது எவ்வளவு புத்துணர்ச்சியாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

எனவே இதை ஒரு முறை செய்து உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பாதங்களையும் அழகு கூட்டுங்கள் அதன் மூலமாக உங்கள் பணம் அதிகமாக மிச்சம் அடையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன