கண்களில் லென்ஸ் அணிபவர்கள் மேக்கப் செய்வது எப்படி?

  • by
how to do make up for those who are using contact lens

முன்னொரு காலங்களில் பார்வை கோளாறுகள் அல்லது தலைவலி பிரச்சினை களுக்கு மூக்கு கண்ணாடிகளை அணிந்து வந்தார்கள். ஆனால் இப்போது யாரும் மூக்கு கண்ணாடிகளை அணிவதில்லை அதற்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸ் போன்றவைகளை அணிகிறார்கள். இது நமது கண்களுக்குள் வைக்கப்படும் ரப்பர் போன்ற சிறிய கண்ணாடி. நமது மூக்குக்கண்ணாடி என்னவெல்லாம் செய்யுமோ அதை எல்லாம் இந்த காண்டக்ட் லென்ஸ் செய்யும். எனவே இதை அதிகளவில் பெண்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். அச்சமயங்களில் இவர்கள் மேக்கப் போடும் போது இவர்களின் காண்டக்ட் லென்ஸ் பாதிப்படைகிறது. இதை எப்படி தடுக்கலாம் என்பதை காணலாம்.

சுத்தமாக இருக்க வேண்டும்

கான்டக்ட் லென்ஸ் அணிவதற்கும் மற்றும் அகற்றுவதற்கும் நாம் எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டு உங்கள் கண்கள் பாதிப்படைய செய்யும்.

அதேபோல் கான்டக்ட் லென்ஸ் இரண்டு வகையாக இருக்கின்றன ஒன்று தேவைப்படும் பொழுது அணிந்து தேவை இல்லாத சமயங்களில் கழட்டி வைத்து விடுவார்கள். மற்றொன்று குறுகிய சில நாட்களுக்கு கண்களிலேயே வைத்திருப்பார்கள். எனவே இதில் முதல் வகையை சேர்ந்த லென்ஸ் ஆரோக்கியத்தை தருகிறது, இரண்டாம் வகை லென்ஸ்களினால் நமது கண்களில் பாதிப்படைகிறது.

மேலும் படிக்க – நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்களின் எண்ணைத் தன்மை கண்களுக்குள் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒப்பனை களுக்காக பயன்படுத்தப்படும் ஐ ஷாடோ, ஐ லைனர், காஜல், பவுண்டேஷன், ஐ பென்சில் போன்றவைகளில் எண்ணெய் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் இது உங்கள் கண்களுக்கும் நுழைந்து அசௌகரியத்தை உண்டாக்கி கண்கள் எரிச்சல் அடையும்.

லென்ஸ் அணியுங்கள்

நாம் மேக்கப் போடுவதற்கு முன்பாக முதலில் லென்ஸ் அணிய வேண்டும். இதனால் லென்ஸ் மீது எந்த மேக்கப் பொருட்களும் படாமல் பார்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் மேக்கப் போட்ட பிறகு லென்ஸ் அணிந்தால் ஏதாவது ஒரு வகையில் நம் கண்களுக்குள் கிருமிகள் சென்றுவிடும்.

ஐ லைனர் பயன்படுத்தும் பொழுது

நாம் ஐ லைனரை கண்களுக்கு மிக நெருக்கமாக பயன்படுத்துகிறோம். இதனால் அது லென்ஸ் மீது படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக கண்களை சுற்றி அழகாக ஐ லைனரை போட வேண்டும்.

மேலும் படிக்க – கிளின்சிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..!

மஸ்காரா

நம் கண்களுக்கு மஸ்காரா பயன்படுத்தும்போது முடிந்தவரை அதை லிக்விட் மஸ்காரா வாக இருக்க வேண்டும். ஏனென்றால் அது எளிதில் வறட்சி அடையாமல் உதிராமல் இருக்கும். இல்லையெனில் சில மஸ்காரா அவர்களின் துகள்கள் உங்கள் கண்களுக்குள் சென்றுவிடும்.

எனவே ஒவ்வொரு முறையும் மேக்கப் போடுவதற்கு முன்பாக நாம் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதுவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும். எப்போதும் முடிந்தவரை கைகளை நன்கு அலசிவிடுங்கள் அதேபோல் மேக்கப் போடுவதற்கு முன்பு கண்களில் வைத்து விடுங்கள். மேக்கப் அகற்றுவதற்கு முன்பாகவே லென்சை வெளியே எடுத்து விடுங்கள். இதை சரியாக பயன்படுத்தினால் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன