கோல்டன் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டில் தயாரிப்பது எப்படி ?

  • by
how to do golden face mask at home

நாம் அழகு நிலையத்திற்கு சென்றால் அங்கே விலை உயர்ந்த பேஸ் மாஸ்காக இருப்பது கோல்டன் ஃபேஸ் மாஸ்க். பலரும் இதில் தங்கத்தை கலக்குவதினால் தான் இதன் விலை அதிகமாக இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். கோல்டன் ஃபேஸ் மாஸ்க் அவ்வளவு விலை உயர்ந்த பொருள் அல்ல, இதை நீங்கள் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் தயாரித்து அதன் பயனை பெறலாம்.

அழகுப் பொருட்கள்

பெண்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது அழகு நிலையத்திற்கு சென்று தங்கள் முக அழகை அதிகரித்து வருகிறார்கள். இதற்கு அவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று பெரிய தொகையை செலவு செய்து தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்கிறார்கள். அதை தவிர்த்து திருமணம் கொண்டாட்டங்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது இதுபோன்ற ஒப்பனைகள் செய்கிறார்கள். எனவே இதற்காக பெரிய தொகைகளை அதிகமாக செலவு செய்யாமல் எளிமையான முறையில் கோல்டன் ஃபேஸ் மாஸ்க் வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – கத்திரிக்காயை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்குங்கள்.!

கோல்டன் ஃபேஸ் மாஸ்க்

கோல்டன் ஃபேஸ் மாஸ்க்கை செய்வதற்கு நமக்கு தேவையான பொருட்கள், மஞ்சள், கடலை மாவு, காய்ச்சாத பால், ரோஸ் வாட்டர் மற்றும் தேன். கடலை மாவுடன் சிறிது மஞ்சளையும் ஒன்றாக சேர்த்து அதில் ரோஸ்வாட்டர், சிறிதளவு தேன் மற்றும் காய்ச்சாத பாலை ஒன்றாக கலந்து நன்கு குழைத்து கொண்டு முகம் முழுக்க தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கோல்ட் பேஸ் மாஸ்க் தரும் அனைத்து அழகையும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட கோல்டு ஃபேஸ் மாஸ்க் தரும்.

சரும பராமரிப்பு

நீங்கள் கோல்டன் ஃபேஸ் மாஸ்க் போடுவதற்கு முன்பாக உங்கள் முகத்தை சோடா பவுடரை கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும். இதன் மூலமாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறும். அதன் பிறகு பஞ்சை கொண்டு ரோஸ் வாட்டர் கொண்டு நன்கு துடைத்து ஃபேஸ் மாஸ்க் போடுவது சிறந்தது. உங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் பல நாட்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது சிறந்த பேஸ் மாஸ்க் ஆகும்.

மேலும் படிக்க – பண்டைய கால மனிதர்கள் வழுக்கைகளை அகற்றும் விசித்திர வழிகள்.!

சாதாரணமாக அழகு நிலையங்களுக்கு சென்று கோல்டன் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்றால் உங்களிடம் ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொள்கிறார்கள். வெறும் நூறு ரூபாயில் கோல்டன் பேஸ் மாஸ்க் உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். இதன் பயனை அறிந்து இயற்கையான முறையில் உங்கள் அழகை அதிகரிக்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன