இயற்கையான பாடி வாஷ் வீட்டில் எப்படி செய்வது?

how to do a natural body wash at home

குளிப்பதற்கு நாம் அதிக அளவில் சோப்புகளை பயன்படுத்தி வருகிறோம். அதனால் இதை அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் சருமம் வறட்சி அடைய அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பாடி வாஷ் பக்கம் சென்று விட்டார்கள் இது உங்கள் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைத்து உங்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். ஆனால் இதிலும் அதிக அளவிலான ரசாயனங்களை கலப்பதினால் நம் சருமம் நாளடைவில் பாதிப்புகளை சந்திக்கிறது. இதை தடுப்பதற்காக வீட்டிலேயே நாம் எளிமையான முறையில் பாடி வாஷ் தயார் செய்யலாம்.

தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை கொண்டு பாடி வாஷ் தயார் செய்யலாம். இது மூன்றையும் ஒன்றாக கலந்து உங்கள் உடல் மேல் முழுவதுமாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்தாள் உங்கள் சருமம் மிருதுவாகவும், ஈரப்பதத்துடன் பளபளப்பாகவும் இருக்கும். நாட்டுச்சக்கரை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமம் முதிர்ச்சி அடையாமல் இளமையாக வைக்க உதவுகிறது. இதை தவிர்த்து முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கிறது. ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமத்தில் ஏற்படும் அழற்சியை தவிர்க்கிறது. அதேபோல் தேன் உங்கள் சருமத்தை மென்மையாகவும் எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

மேலும் படிக்க – ஏவாளை மிஞ்சும் அழகு பெற எலும்பிச்சை பயன்படுத்துங்க!

கடல் உப்பு மற்றும் ஜோஜோபா எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளலாம். இதற்கு இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து மென்மையாகும் வரை கலந்து உங்கள் உடல் முழுக்க மசாஜ் செய்யவேண்டும். இதை பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் நீங்கள் புத்துணர்ச்சியை உணருவீர்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி குளிக்கலாம்.

காபித் தூள் தேன் மற்றும் பாதாம் எண்ணெய்களை ஒன்றாக சேர்த்து ஒரு பாடி வாஷ் தயார் செய்து கொள்ளுங்கள், அதை உங்கள் சருமத்தில் தடவி குளிக்கவேண்டும். காபித்தூள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கும் நீரோட்டத்தை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. அதே போல் பாதாம் எண்ணெயும் உங்களை இளமையாக பார்த்துக் கொள்கிறது. இவைகளை சரியான அளவில் தேர்ந்தெடுத்து பாடி வாஷ் தயார் செய்து குளித்தால் நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க முடியும்.

சர்க்கரை மற்றும் தேன் இரண்டையும் ஒன்றாக சேர்த்து உடல் முழுக்க தடவினால் உங்கள் சருமத்தில் இருக்கும் வறட்சித் தன்மையைப் போக்கி இறந்த செல்களை அகற்றி உங்களை இளமையாக புத்துணர்ச்சி அளிக்கிறது. ஆனால் இதைஉடல் முழுவதும் தடவும் போது இதன் விலை சற்று கூடுதலாக இருக்கிறது. அதனால் இதை மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி குளித்தால் உங்கள் உடல் முழுக்க ஒரு ஸ்க்ரப்பரை பயன்படுத்திய உணர்வைத் தரும்.

மேலும் படிக்க – வாழ்வை ஒளிர செய்யலாம் துளசியின் மருத்துவம்

தேன், கோகோ பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து உடல் முழுக்க தடவினால் உங்கள் சருமத்தில் ஏற்படும் அழற்சியை அகற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் சருமத்தில் இருக்கும் சிறுசிறு துளைகளை அடைத்து உங்கள் சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது.

இதேபோல் தேங்காய் நீர், ஆலிவ் எண்ணெய், கற்றாழை, ஆரஞ்சு பழச்சாறு, ஓட்ஸ் போன்ற பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் பாடி வாஷ் தயார் செய்யலாம். ஆனால் இதை செய்வதற்கு தேவைப்படும் பொருட்களின் விலைகள் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனால் ஆரோக்கியமான குளியலுக்கு இதை மாதத்திற்கு ஒரு முறை தயார் செய்து குளிப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன