கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதலுக்கு இதை செய்யுங்க பாஸ்

how to deal with your doubtful wife

உறவுக்குள் பிரச்சினையாக இருப்பது ஒருவருக்கு ஒருவரை நம்பாமல் எப்பொழுதும் சந்தேகித்து கொண்டே இருப்பதுதான். இது ஆண்களைவிட பெண்களே அதிகமாக செய்வார்கள், ஆனால் வெளிப்படையாக காண்பிப்பதில் ஆண்கள் தான் அதிகம். ஒரு ஆண் திருமணம் ஆகும்வரை தன் காதலியை சில சமயங்களில் சந்தேகப்படுவார் அதுவே திருமணமான பின் இந்த சந்தேகங்கள் படிப்படியாக குறைந்துவிடும் ஆனால் பெண்கள் விஷயத்தில் இது அப்படியே மாறுபடுகிறது, காதலிக்கும் சமயங்களில் அவர்களை புரிந்து கொள்ளும் பெண்கள் திருமணமான பின் அவர்களை சந்தேகப்பட தொடங்குகிறார்கள். இதற்கான காரணம் அவர்கள் மேல் வைத்திருக்கும் அதிக அளவு காதல் மற்றும் தன் கணவன் தன்னை தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணமும் தான்.

உங்கள் காதலியோ அல்லது மனைவியோ உங்கள் மேல் சந்தேகம் ஏற்படும் சூழ்நிலைகளை தடுப்பது நல்லது. இதற்கு நீங்கள் எப்போதும் உங்கள் துணையை எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பதை சொல்லுங்கள், இதில் எந்தவித பொறாமையும் வேண்டாம். நீங்கள் அவர்கள் மேல் அதிகமான காதல் வைத்துள்ளீர்கள் என்பதை மனதுக்குள் வைத்ததினால் எந்த பிரயோஜனமும் இல்லை எனவே வெளிப்படையாக அவர்களிடம் சொல்லுங்கள்.

மேலும் படிக்க – குடும்பச் சந்திப்பினால் ஏற்படும் நன்மைகள்…!!!

உங்கள் காதலி அல்லது மனைவி மற்ற பெண்களைப் பற்றிப் பேசும்போது நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது அதற்கு நீங்கள் உங்கள் கருத்தை சொன்னீர்கள் என்றால் அது நிச்சயம் சண்டையில் தான் முடியும். இது நாளடைவில் சந்தேகம் ஆகவும் மாறும். எனவே முடிந்தவரை மற்ற பெண்களைப் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் துணையை வேறு ஒரு பெண்ணின் காரணமாக உங்களிடம் சண்டையிட்டால் உடனே அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது ஏனென்றால் இதுபோன்ற சமயங்களில் உங்களை பார்க்கும் போது அவர்களின் கோபம் அதிகரிக்கும். எனவே அவர்கள் கோபம் தணியும் வரை அவர்கள் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பிறகு பொறுமையாக உங்கள் துணையுடன் பேசி சமாதானம் செய்வதே புத்திசாலித்தனம்.

உங்கள் துணையுடன் அதிகமான நேரத்தை செலவழியுங்கள், அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துங்கள், உறவில் எப்போது பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறதோ அப்போது அந்த உறவு பல இன்னல்களுக்கு உள்ளாகின்றன. அதை தவிர்ப்பதற்கு நீங்கள் அவருக்கு துணையாக எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள், இது உங்கள் மேல் அதிக நம்பிக்கையை உண்டாக்கும்.

உங்களுக்கு இருக்கும் பெண் நண்பர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். இதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, உங்கள் மேல் அவர்களின் பார்வை எவ்வாறாக உள்ளது என்பதை உங்கள் துணை புரிந்து கொள்வார். இதனால் உங்களையும் அந்த மூன்றாம் நபரையும் ஒப்பிட்டு நடக்கும் சண்டைகளை முடிந்தவரை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க – காதலர் தினத்தை வேறு வழியில் கொண்டாடுவது எப்படி?

உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேக உணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதை நீங்கள் உணர்ந்தால் முடிந்தவரை அவர்களிடம் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க பழகுங்கள். இது உங்கள் உறவை ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதுகாக்கும். சந்தேகப்படுவது என்பது ஒருவிதமான மனநோய் எனவே உங்கள் துணையை ஒரு நோயாளியை போல் உணர்ந்து அவர்கள்மேல் கோபப்படாமல் உங்கள் வார்த்தைகளை மருந்துகளாக அவர்களுக்கு கொடுங்கள். உண்மையில் அவர்கள் மனமிரங்கி உங்கள் மேல் உள்ள சந்தேகங்களைப் போக்கிக் கொள்வார்கள்.

இது அனைத்தையும் செய்த பிறகும் சந்தேகம் உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனால் அவர்களுக்கு இறுதியான ஒரு வாய்ப்பு அளியுங்கள். நடந்தவை அனைத்தையும் பற்றி பேசி அவர்களுக்கு புரிய வையுங்கள், அதையும் மீறி உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகப்பட்டால் பின்விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் வாழ்க்கை என்பது நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொண்டது அதை இதுபோன்ற நபர்களிடம் வீணாக்காமல் உங்களுக்கான வாழ்க்கை அமைக்க முயற்சி செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன