கடினமான சூழ்நிலையை அமைதியாக எதிர்கொள்வது எப்படி?

  • by
how to deal with tough situations calmly

வாழ்க்கை எப்பொழுதும் நமக்கு இனிமையாக இருக்காது. எல்லோர் வாழ்விலும் ஏற்ற, இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலரின் வாழ்க்கையில் ஏற்றத்தை விட இறக்கங்களே அதிகமாக இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் நாம் மனம் தளராமல் எப்படி நம்முடைய வாழ்க்கையையும் மற்றும் கடினமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்  என்பதை இந்த பதிவில் காணலாம்.

மனப் பதற்றத்தை குறையுங்கள்

நாம் ஏதாவது ஒரு செயலை செய்வதாக இருந்தால் உங்களுக்குள் மனப் பதட்டம் ஏற்படும். ஏனென்றால் அந்த செயலை செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கை பெரிதாக பாதிப்படையலாம், இல்லையெனில் மிகப்பெரிய வெற்றியை அடையலாம். இருந்தாலும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் இந்த செயலை செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணம் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும். எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் நம்முடைய மனப் பதற்றத்தை குறைப்பதற்கு நாம் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடனடியாக அந்த முடிவை எடுக்க வேண்டுமென்றால், அந்த முடிவினாள் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இல்லை அது தவறாக மாறினால் உங்களுக்கு நிகழும் இழப்புகள் என இரண்டையும் ஒப்பிடுங்கள். இதில் இழப்புகள் குறைந்து நன்மைகள் அதிகமாக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு அந்த முடிவை எடுங்கள்.

மேலும் படிக்க – ஆயிரம் வருடம் பழமையான மற்றும் பள்ளிப்படுத்தப்பட்ட ஸ்ரீ இராமானுஜரின் உடல்.!

உங்களிடம் பேசுங்கள்

உங்களை சுற்றி ஏராளமான மன அழுத்தப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக உங்களிடம் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். இந்த சூழ்நிலையை எப்படி கடக்கலாம், இதை எந்த வழியில் கொண்டு செல்லலாம், இதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன, இதை எதிர்கொள்ள நமக்கு என்ன சக்தி தேவை என்பதை அனைத்தையும் உங்களிடம் நீங்களே விவரித்து கொள்ளுங்கள். உடனடி முடிவு எடுப்பதாக இருந்தால் உங்கள் மனதில் முதலில் தோன்றும் என்னத்தை தேர்ந்தெடுங்கள்.

பொறுமையாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்

எதற்கெடுத்தாலும் பொறுமையிழந்து சண்டை போடுவதாக இருந்தால், ஒருநாள் பொறுமையாக இருந்து பாருங்கள். உடனடியாக நம் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அந்த செயலின் தன்மை மற்றும் ஆழத்தை அறிந்து அதற்கான சரியான பதிலை அளியுங்கள். பொறுமை இழந்து கோபப்படுவது மூலமாக உங்களுக்கும் மற்றும் நீங்கள் கோபப்படும் நபருக்கும் எந்த ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே அதை அறிந்து அதைப் பற்றி பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள். பொறுமைதான் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் உதவும். எனவே இதை ஒன்றை கடைப்பிடித்தால் போதும் உங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றியடையும்.

மற்றவர்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிருங்கள்

உங்கள் செயலை நீங்கள் குழுவாக செய்யும்போது உங்கள் குழுவில் இருக்கும் மற்றவர்கள் ஏதேனும் தவறுகளை செய்தால் அதைத் திருத்துவதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் உங்கள் செயலை சரியாக முடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் எந்நேரமும், எல்லாரும் சரியாக இருப்பதில்லை. மனிதர்கள் எப்போதும் இயல்பாக சில தவறுகளை செய்து கொண்டே இருப்பார்கள். அதை நாம் திருத்த முயற்சித்தால் நம்முடைய இயல்பான வாழ்க்கை தான் பாதிப்படையும்.

மேலும் படிக்க – இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை…!

உடனடியாக, சரியான முடிவுகளை எடுப்பதற்கு நமக்கு நிலையான மனநிலை தேவை. அதை பெறுவதற்காக நாம் எப்போதும் நண்பர்களுடன் மற்றும் நமக்கு பிடித்த உறவுகளுடன் மனம் விட்டு பேசுவது, நகைச்சுவையாக நடந்துகொள்வது, எல்லோரையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்ற வழிகளில் உங்கள் தரத்தை உயர்த்தி உங்கள் முடிவுகளை மேம்படுத்தும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன