குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சனை.!

how to cure stomach problem of children

குழந்தைகள் பிறந்து வளர்வது என்பது கடினமான காரியம். நாம் இந்த நிலையில் தான் அதிக அக்கறையுடன் அவர்களை வளர்க்க வேண்டும். அச்சமயங்களில் அவர்களுக்கு உடல் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை நாம் அறிந்து கொள்வதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. பின்னரே நாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களை குணப்படுத்துகிறோம். இப்படியிருக்கையில் குழந்தைகள் உறுப்புக்கள் பாதிப்படைந்தால் அது நமக்கு தெரியவருவதற்க்குள் குழந்தைகள் வளரத் தொடங்குகிறது, இதனால் அந்த பாதிப்பு பெருமளவு அவர்களை பாதிக்க செய்கிறது. இது போல் தான் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சனையை நாம் அறியாமலேயே இருந்து வருகிறோம் இதை கண்டறிய குழந்தைகளின் சிறுநீரக பகுதிகளில் வீக்கம் ஏதாவது தென்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

இந்த சிறுநீரக நோய், சிறுநீரக குழாய்க்கு மேற்பகுதியில் இருக்கும் பகுதிகளில் அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரக குழாய், சிறுநீரகம் அமைப்பு மற்றும் சிறுநீரை வெளியேற்றுவதில் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்து இது நுரையீரலையும் பாதிக்க செய்கிறது.

மேலும் படிக்க – பன்னீர் சாப்பிடுங்க பலமடைவீர்கள்..!

இந்த நோய் குழந்தைகளுக்கு ஹார்மோன் மூலமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது அல்லது நாம் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலமாகவும் இது 2% வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இது தானாகவே குணமாகிவிடும் ஆனால் இதன் பாதிப்பு அதிகரிக்கும் பொழுது இதை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியும்.

குழந்தைகளின் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் பைக்கு சிறுநீர் செல்வது சீர்குலையும் பொழுது இந்தப் பிரச்சனை அதிகரிக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் இது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க – கருசீரகத்தில் கனிவு நிறைந்த கேர்..!

உங்கள் குழந்தை இந்தப் பிரச்சனையின் பாதிப்படைந்திருந்தால் சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடிக்க முடியும். அது என்னவென்றால், மேகமூட்டமாக அல்லது நுரையுடன் சிறுநீர் கழிக்கும், வலியுடன் சிறுநீர் கழிக்கும், பலவீனமான தன்மை, காய்ச்சல், குளிர் போன்றவைகள் ஏற்படும். இந்த அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தைகள் இந்த சிறுநீர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளதா என்பதை கண்டறியலாம். எனவே உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்துகொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன