முன்னோர்களின் வழியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்..!

  • by
how to cure diabetes using ancient method

நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படுகிறது, அதில் அதில் இரண்டாவது வகைதான் உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் 90% தாக்கியுள்ளது. ஆனால் முதல் வகை நீரிழிவு நோய் என்பது மிக மோசமானது, அதாவது நம் உடலுக்கு தேவையான இன்சுலினை முதல் வகை சுத்தமாக சுரக்காவிடாது. அதுவே இரண்டாம் வகையில் குறைந்த அளவிலே நமக்குள் சுரக்க வைக்கிறது. இப்படி நம் அன்றாட வாழ்க்கையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும் இந்த நீரிழிவு பிரச்சனை வயது வரம்பில்லாமல் எல்லோரையும் தாக்கக் கூடியது. இதைக் கட்டுப்படுத்த ஏராளமான மருந்துகள் இருந்தாலும் அது நமக்கு நிரந்தர தீர்வைத் தராது. எனவே நம் முன்னோர்கள் அறிவுறுத்திய நாட்டு மருந்துகளை பயன்படுத்தி நீரிழிவு நோயை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

மஞ்சள்

இயற்கையாக உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீங்கள் தினமும் மஞ்சளை பால் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பு சீராகும்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பஞ்சாமிர்தம்..!

வெந்தயம்

தினமும் 25 கிராம் வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இதில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருப்பதால் நீரிழிவு நோயால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கப்பகிறது. ஆனால் வெந்தயத்தை நாம் அதிகளவில் எடுப்பதன் மூலமாக நமக்கு பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் சிறிதளவு வெந்தயத்தை இரவில் நன்கு ஊற வைத்து அந்த நீரை அடுத்த நாள் காலையில் குடித்துவிட்டு வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.

பாகற்காய்

தினமும் 5 முதல் 6 மில்லி கிராம் பாகற்காய் சாற்றை நீரில் கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை முழுமையாக குறையும். கசப்புத் தன்மை அதிகமுள்ள பாகற்காயை நீங்கள் நீரில் கலந்து குடிப்பதன் மூலமாக அதன் கசப்பு தன்மை குறையும். எனவே இதை சாப்பிட்டு உங்கள் பிரச்சினையை தீர்த்து விடுங்கள்.

வில்வப்பழம்

தினமும் 50 கிராம் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமல்லாமல் நீரிழிவு பிரச்சினையை அழித்து போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யும். வில்வப் பழத்திற்கு இயற்கையாகவே நீரிழிவை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை உட்கொண்டு உங்கள் பிரச்சினையை தவிர்த்திடுங்கள்.

வேப்பிலை

கசப்புத்தன்மை அதிகளவில் கொண்ட வேப்பிலையின் 

சாரை தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை சீராக்கி நீரிழிவு பிரச்சனையை தடுக்கலாம். வேப்பிலையின் தாக்கத்திற்கு ஏற்றால் போல் உடலில் மாற்றங்கள் ஏற்படும். எனவே அதை சரியான அளவு எடுத்து நீரிழிவு பிரச்சினையை தடுங்கள்.

மேலும் படிக்க – இந்தியா ஐஎன்சி சாக்கின் பாதுகாப்பு திட்டங்கள்..!

சிறுகுறிஞ்சான் செடி

கோத்திரம் என்று அழைக்கப்படும் இந்த சிறு குறிஞ்சான் செடியை ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதை பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து பொடியாக்கி அதை தினமும் நீரில் கலந்து குடிப்பதன் மூலமாக நீரிழிவு பிரச்சினை முழுமையாக தீரும். அதே சமயத்தில் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், எனவே இது போன்ற மூலிகை மருந்துகளை ஏடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

பெரி பழங்கள், சப்த ரங்கி, ஜின்ஸெங், ஜிங்கோ பிலோபா, மற்றும் நாவல் இலைகளைக் கொண்டும் நம்மால் நீரிழிவு பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். எனவே ஏற்கனவே மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி இது போன்ற ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன