குழந்தைகளின் சளி, இருமலுக்கு குட் பாய் சொல்லுங்கள்..!

how to cure cold and cough for kids

பெரும்பாலும் பழம் தமிழர்கள் தங்கள் உடலில் நோய்வாய்ப்பட்டால் தனியாக மருந்தினை எடுத்துக் கொள்ளும் வழக்கம் அவர்களிடம் இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் சாப்பிட்ட உணவையே அந்த நோய்க்கான மருந்தாக பயன்படுத்தினார்கள். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு நிச்சயமாக ரசாயன மருந்தை கொடுத்து இருக்க மாட்டார்கள். ஆனால், இன்றோ மருந்தையே உணவை விட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். அதற்கு காரணம் நம் பாரம்பரிய மருத்துவத்தை மறந்தது தான்.

சாதாரண சளி பிடித்தால் கூட மருத்துவமனையை தேடி ஓடுகிறோம். அவ்வாறு செய்யாமல் நம்முடைய பாட்டி வைத்தியத்தை பயன்படுத்தி எவ்வாறு சளி, இருமலை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தும்மலை துரத்தி அடிக்கும் தூதுவளை கசாயம்;

துளசி, தூதுவளை, முசுமுசுக்கை இவற்றைக்கொண்டு நெஞ்சு சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் கசாயம் எப்படி செய்வது என்று பார்க்கலாம், துளசி தூதுவளை இவை இரண்டும் நாம் அறிந்த ஒன்றே !ஆனால் ,முசுமுசுக்கை செடியானது சிலருக்கே தெரியும். அதாவது பார்ப்பதற்கு பூசணிக்காய் செடி சிறிய அளவில் இருந்தால் எப்படி இருக்குமோ? அப்படி இருக்கும் இந்த முசுமுசுக்கை கொடி. இது மிகவும் அற்புதம் மூலிகைச் செடியாகும் .

செய்முறை: முசுமுசுக்கை, துளசி இவை இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, தூதுவளை 10 இலையையும் எடுத்துக்கொண்டு, 3 டம்ளர் நீர் சேர்த்து ஒன்றரை டம்ளர் நீராக மாறும் வரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இனிப்பு சுவைக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் அதன் முழு பயனையும் அடையலாம். அதேபோல் கசாயம் குடித்த அரை மணி நேரத்திற்குப் பின்பு தான் நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க – தலை முடியின் ஆரோக்கியத்திற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்.!

குழந்தைகளின் வரட்டு இருமல் சரியாக ;

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் அவர்களை தூங்க விடாமலும், சாப்பிட விடாமலும் மிகுந்த கஷ்டப்படுத்தும். அதற்கு இந்த மருந்தை தொடர்ந்து கொடுத்தால் இருமல் சரியாகும்.

ஏலக்காயை பொடி செய்து அதனுடன் தேன் கலந்து 5 மாத குழந்தைக்கு ஒரு துளி அளவும் ஒரு வயதுக்கு மேல் அரை ஸ்பூன் கொடுக்கலாம்.

மேலும் உலர் திராட்சை 50 கிராம் தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன், 50 கிராம் பனை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாகும் வரை கிளறவேண்டும். பின்னர் வரட்டு இருமல் ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம்.

வெண்கடுகை வாணலியில் லேசாக வறுத்து அதை பொடி செய்து தேனில் கலந்து சளி பிடித்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் படிக்க – ஆண்கள் முடி வளர பயன்படுத்தும் 10 சிறந்த எண்ணெய்கள்.!

குழந்தைகளின் நெஞ்சு சளி கரைய ;

இப்போதெல்லாம் இரண்டு மாத குழந்தைகளுக்கு கூட சளி இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கு காரணம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்தொற்று தான். இதை சரி செய்ய வெற்றிலையை நல்லெண்ணெய் விளக்கில் சூடு செய்து அதில் தேங்காய் எண்ணெய்யை தடவி குழந்தையின் நெஞ்சுப் பகுதிகளிலும், முதுகுப் பகுதியிலும் இரவு தூங்குவதற்கு முன்பு வைத்துவிடவேண்டும், வெற்றிலையானது குழந்தையின் நெஞ்சிலிருக்கும் சளியை மெல்ல கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.

குழந்தைகளுக்கான தைலம் தயாரிக்கும் முறை;

கடைகளில் வாங்கி பயன்படுத்தும் தைலம் கெமிக்கல் நிறைந்ததாக இருப்பதால், அது குழந்தைகளுக்கு உடலுக்கு நல்லதல்ல, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பச்சைகற்பூரம் கொண்டு நாமே தைலம் தயாரிக்கலாம். பச்சை கற்பூரத்தை வாணலியில் போட்டு லேசாக உருக வைக்க வேண்டும். அதனுடன் கொஞ்சம் நெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். இந்த கலவையை அரை மணி நேரம் ஆறவைத்த பின்னர், நாம் குழந்தைகளுக்கு தைலமாக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – தலைமுடி கொட்டுவதை எப்படி தடுப்பது?

குழந்தைகளின் சுவாசத்தை சீர் செய்யும் மஞ்சள் புகை ;

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது .அதிக சளி இருக்கும் போது குழந்தைகள் இந்த புகையை சுவாசிப்பதால் நுரையீரலில்

உள்ள நோய் தொற்று கிருமிகள் அழிந்து போகின்றன. விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு ,நல்லெண்ணெய் விளக்கில் அதை எரிய வைக்க வேண்டும். பின்னர் நெருப்பை அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மெதுவாக குழந்தைகளின் மூக்கின் அருகில் வாயின் அருகிலும் கொண்டு செல்ல வேண்டும், அந்த மஞ்சள் புகையை குழந்தைகள் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் இல்லாமல், சுவாசிப்பதற்கு உதவியாக இருக்கும். புகை பிடிக்கும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படாமல் மெதுவாகவும் கவனமாகவும் புகைபிடிக்க வேண்டும்.

எந்த ஒரு பிரச்சனையையும் அதன் ஆரம்ப காலத்திலேயே சரி செய்வது எளிதான ஒன்றாகும் முறைகளைப் பின்பற்றி நம் குழந்தைகளை நலமுடன் வாழ செய்வோம்…..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன