நம் உடலில் இயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்..!

how to control the insulin levels in your body in a natural way

இன்சுலின் அளவு என்பது இயற்கையாகவே நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் மிக முக்கியமான ஒன்று. இது நமது உடல் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல் நம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை மாற்றி அமைக்கும் திறன் இன்சுலினுக்கு உள்ளது. எப்போதும் ஆரோக்கியமான நபர்களுக்கு போதுமான இன்சுலின் சுரப்பி இருக்கும். அதுவே நீரிழிவு நோயாளிகள் மற்றும் டயாபடீஸ் நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் இவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை வரும் அளவிற்கு இவர்கள் உடலில் மாற்றம் ஏற்படுகிறது.

ஒருவர் உடலில் இன்சுலின் அளவு அதிகமாக சுரப்பதால் அவர்களுக்கு டயபடீஸ், ரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு மற்றும் இருதய நோய் வருவதற்கும் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற அபாயங்களை தவிர்ப்பதற்காக நாம் இயற்கையாகவே சில உணவுகளை எடுத்துக் கொண்டு நம் இன்சுலின் சுரக்கும் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

மேலும் படிக்க – கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

லவங்கப்பட்டையை

இன்சுலின் அளவை சமநிலையில் வைப்பதற்கு நீங்கள் உங்கள் உணவில் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் சக்தியானது உங்கள் உடம்பில் சுரக்கும் இன்சுலின் அளவை குறைக்கிறது. அதே சமயத்தில் உங்கள் உடம்பில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் சமநிலையில் வைத்து உங்களை அதிகமாக பார்த்துக் கொள்கிறது.

ஆப்பிள் சீடர் வினிகர் 

இது நமது உடம்பில் ஏற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்க்கு தீர்வாக இருக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடம்பில் இருக்கும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கிறது. இந்த ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் உணவு உண்பதற்கு முன்பு ஒரு டம்ளரில் சிறிதளவு கலந்து குடிப்பது நல்லது.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

நார்ச்சத்து

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால், நாம் கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளில் நார்சத்து அதிகமாக உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி கொண்டதாகும். இது மட்டுமில்லாமல் நமது உடலில் இருக்கும் இரத்தத்தின் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் நம் உடலில் சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமில்லாமல் இன்சுலின் அளவை சமநிலையில் வைப்பதற்காக நாம் அவ்வப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெரிதாக உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி அல்லது படிக்கட்டு ஏறி இறங்குவது உங்கள் உடலை இது போன்ற பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன