கோடைகாலங்களில் ஏற்படும் வியர்வையை தடுப்பது எப்படி..!

  • by
how to control sweating during summer season

மனிதர்களின் உடலில் இயற்கையாகவே சுரக்கப்படுவதுதான் வியர்வை, அதிலும் கோடை காலங்களில் இதன் சுரப்பு சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் பல சூழ்நிலையில் இது உங்களுக்கு அசவுகரியத்தையும் மற்றும் உடலில் தொற்று நோயை ஏற்படுத்தும். எனவே நம் உடலில் வியர்வை சுரப்பை கட்டுப்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மெலிர்ந்த ஆடையை பயன்படுத்துங்கள்

கோடை காலங்களில் நம்முடைய உடல் அதிக அளவில் உஷ்ணத்தை உண்டாக்கும். இதன் மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறும். இதைத் தடுப்பதற்கு நாம் மெலிர்ந்த ஆடையை பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள வெப்பம் குறைந்து அதன் சுவாசம் அதிகரிக்கும், வியர்வையின் சுரப்பும் குறையும்.

மேலும் படிக்க – சாப் ஸ்பார்கில் சரும கேசத்திற்கான சாம்பூ பார் வாங்கலாம்!

சரியான உணவுகள்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் கூட உங்கள் வியர்வை சுரப்பை கட்டுப்படுத்தும். அதைப்போல ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதன் மூலமாக உங்கள் வேர்வை சுரப்பை குறைக்கலாம். கோடைக்காலங்களில் காரமான உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் வியர்வை சுரப்பு குறையும். அதே போல் காபி, தேநீர் போன்றவை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை இதை முழுமையாக தவிருங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தை பராமரியுங்கள்

நீங்கள் இருக்கும் அறையை எப்போதும் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் சுற்றுச்சூழல் குலுமையாக இருந்தால் உங்களுக்கு வேர்வை சுரப்பு குறையும். எனவே உங்கள் வீடு அல்லது அலுவலகங்களை எப்போதும் காற்றோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். கதவுகள், ஜன்னல்களை திறந்து காற்று அதிகமாக பரவும் இடங்களில் உங்கள் வேலைகளை செய்யுங்கள்.

மேலும் படிக்க – எடை குறைப்பதற்கான ஆரோக்கியமான உணவு வகைகள்.!

அதேபோல் காய்கறிகள், பழங்கள் என குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்கள் உடல் குளிர்ச்சி அடைந்து கோடை காலங்களில் வியர்வை சுரப்பு குறையும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வியர்வையாக வெளியேறுகிறது. எனவே உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் வேர்வை குறைவாக வெளிவரும் அதை தவிர்த்து எந்த ஒரு துர்நாற்றமும் வீசாமல் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன