எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ 10 வழிகள்…!

  • by

எதிர்மறை எண்ணங்கள் உங்கள் பணியிடம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறிக்கோள்களை முற்றிலும் மெதுவாக்கிடும். எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த, பின்வரும் 10 செயல்களை மேற்கொண்டு உங்கள் வாழ்வின் அடுத்த பரிமாணத்திற்குள் செல்லுங்கள்.

முதல் ஐந்து செயல்கள்:

எதிர்மறை சிந்தனையிடம் பேசுங்கள்:
எதிர்மறை எண்ணங்கள் வரும்போது விழிப்புடன் இருப்பது அவசியம். நீங்கள் சோர்வாகவோ, பசியாகவோ, ஏமாற்றமாகவோ, அழுத்தமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு கடுமையான உணர்விற்கு தள்ளப்படுவதால் தவறான முடிவுகள் எட்டுவதற்கு சத்தியம் அதிகம். எதிர்மறை எண்ணங்களை புறக்கணிக்க முயற்சியுங்கள்.

நேர்மறை எண்ணமுள்ள நபர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்:
எப்போதும் உங்களை சுற்றி நேர்மறை எண்ணங்களை வைத்துக் கொள்வது மிக முக்கியமானது நேர்மறை எண்ணம் உள்ள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் கடுமையான செயல்களை எளிதாக எடுத்துக் கொண்டு, வேலை அழுத்தமான நேரங்களில் நல்ல முடிவுகளை தரவல்ல நபர்கள். பிடித்தமான நபர்கள் என்பதைவிட நேர்மறை எண்ணம் கொண்ட நபர்களிடம் இருப்பது தான் முக்கியமானது அப்போது தான் உங்களுக்கு பாதுகாப்பான உணர்வு ஏற்படும் அவர்களிடத்திலிருந்து நீங்கள் அதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க-> யோகாவில் ஓம் ஒலி மற்றும் 108 எனும் புனித எண்ணின் அவசியத்தை அறிந்துகொள்வோம்…!

எல்லாம் சரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்: எல்லாம் சரியானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது உங்களை பலவீனப்படுத்தும் மற்றும் உண்மையான மகிழ்ச்சியை எப்போதும் உங்களுக்கு தராது. வெற்றியை பற்றிய உங்கள் பார்வையை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அடுத்த ஆண்டு பதவி உயர்வு பெற இப்போதே முயலுங்கள், காலம் வரும் என காத்திருக்கவேண்டாம்.

செயல்களில் நேர்மை:
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்மையை கடைப்பிடித்தல் என்பது மிக முக்கியமானது, குறுக்கு வழியில் பெயர் மற்றும் பதவிக்காக நீங்கள் ஆசைப்படுபவராயின் பிற்காலத்தில் பிரச்சினைகளுக்கு நீங்களே அடித்தளம் இடுகிறீர்கள் என்று பொருள். சிறிய வேலை செய்தாலும் அதில் நேர்மையை கடைப்பிடித்தால் நிச்சயம் உழைப்புக்கேற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும்.

நேர்மறையான காலை வழக்கத்தை உருவாக்குங்கள்: புதிய சிந்தனை அதிகாலையில் தொடங்குகிறது. ஒருவருக்கு ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை அவரின் காலை பொழுதுதான் பெரும்பாலும் முடிவு செய்யும், ஆகவே காலை பொழுதில் நல்ல செயல்களை செய்யுங்கள் படுக்கையிலிருந்து எழும்போது நல்ல எண்ணங்களை நேர்மறை சிந்தனைகளை மனதில் கொண்டு செய்ய முற்படுங்கள் எந்த ஒரு செயலையும் தினமும் நேரம் தவறாமல் செய்ய நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியம்.

2-ம் ஐந்து செயல்கள்:

நன்றாக சுவாசியுங்கள்:
எதிர்மறை எண்ணங்களை நிறுத்த, நீங்கள் மூச்சை மெதுவாக சுவாசிக்க வேண்டும், முதலில் மூச்சை கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தினசரி அட்டவணையில் அலாரங்கள், நினைவூட்டல்கள் மற்றும் நேரத் தொகுதிகளை இணைத்து யோகா, தியானம், இயற்க்கை நடைபயணம் என மேற்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க-> நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்: நேர்மறையான அணுகுமுறையை அனுமானிப்பது மிக முக்கியம், ஒரு செயலை புதிதாக செய்யத் துவங்கும்போது அதைப்பற்றிய எண்ணத்தையும் அதன் அணுகுமுறையும் முன் எப்போதும் செய்யாத வகையில் அதை மாற்றிக் கொள்வது உகந்தது. முன்பு செய்த செயல்களால் ஏற்பட்ட தவறுகளை நினைத்து அவற்றை மீண்டும் மீண்டும் செய்யாமல் சரியான அணுகு முறையை கொண்டு வெற்றி பெறுங்கள்.

புதிய இடங்களுக்கு செல்லுங்கள்: புதிய இடங்களுக்கு செல்லும் பொழுது உங்களுக்கு புதிய சிந்தனைகள், எண்ணங்கள் தோன்றும் நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி எண்ணியிருந்தவற்றை முழுவதுமாக மாற்றி அமைக்கும் வல்லமை புதிய இடத்திற்கு போகும் போது உங்களுக்கு கிடைக்கும். ஒரே இடத்தில் அடைந்து கிடந்தால் எண்ண ஓட்டங்களில் விசாலம் இருக்காது, ஆகவே முடிந்த வரை வெளியில் செல்லுங்கள்.புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

வாக்குறுதியில் கவனம் செலுத்துங்கள்:
பள்ளி, கல்லூரி, பணி செய்யும் இடம், வீடு, நண்பர் என அனைவரிடத்திலும் கொடுக்கும் வாக்குறுதிகளை நினைவில் கொள்ளுங்கள்; அதை நிறைவேற்ற எப்பாடுபட்டாவது முயற்சி செய்யுங்கள் உங்கள் வாக்குறுதி தான் உங்களை பிறருக்கு தெளிவாக வெளிச்சம் போட்டு காண்பிக்கும் கண்ணாடி.

பிரச்சனையின் அடி வேருக்கே சென்று தீர்வு காண முற்படுங்கள்:
பிரச்சினை என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று மனிதர்களுக்கு மட்டுமல்ல காட்டில் உள்ள விலங்குகளுக்கும் பிரச்சினை உண்டு, மானுக்கு புலியிடம் பிரச்சனை, சிறு பறவைகளுக்கு கழுகிடம் பிரச்சினை என எங்கும் எதிலும் பிரச்சினைகள் உண்டு அதிலிருந்து சரியாக தீர்வை காண முற்படுங்கள், நீங்கள் எடுக்கும் தீர்வு உங்களின் ஆற்றலை மனவலிமையை பிறர்க்கு காண்பிக்கும்

மேலும் படிக்க-> ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன