லாக் டவுனின் பொழுது காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்துவது..!

  • by
how to clean vegetables during this lockdown

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நம் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் அரசாங்கம் உத்தரவின்படி அதற்கேற்ற நேரத்தில் தான் வாங்கி வர வேண்டும். ஆனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் மூலமாக நீங்கள் வாங்கி வரும் பொருட்களின் மேல் கூட வைரஸ்களின் தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அந்தப் பொருட்களை நாம் பயன்படுத்துவதற்கு முன்பாக எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக காணலாம்.

மேலை நாட்டுப் பழக்கம்

மேலை நாடுகளில் வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே தினமும் காய்கறிகள் மற்றும் வீட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். பின்பு அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அவர்கள் கையில் இருக்கும் பொருட்களை நீண்ட குச்சியின் மூலமாக வாங்கிக்கொண்டு அந்த நபரை முழுமையாக கிருமி நாசினிகள் மற்றும் தண்ணீரை ஊற்றி கழுவுகிறார்கள். இதை தொடர்ந்து அவர் பயணித்து வாகனத்தையும் முழுமையாக சுத்தப் படுத்துகிறார்கள். இதன் மூலமாக அவர் மேல் மற்றும் வாகனத்தின் மேல் உள்ள வைரஸ்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை அழிப்பதற்கு மனவலிமை தேவை..!

வாங்கி வந்த பொருட்கள்

இப்படி அவர்கள் வாங்கி வந்த பொருட்களை நீண்ட குச்சியின் மூலமாக வாங்கி அதை வீட்டிற்கு வெளியே வைத்திருக்கும் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீர் தொட்டியில் போட வேண்டும். இதன் மூலமாக உங்கள் காய்கறிகளின் மேல் ஏதேனும் வைரஸ் தொற்றுகள் இருந்தால் அது உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் உயிர் பிழைக்க முடியாமல் இறந்துவிடும். நாம் வாங்கி வந்த காய்கறிகளை இதுபோன்ற உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் போடலாம், ஆனால் மளிகை பொருட்களை அப்படி செய்ய முடியாது.

பாதுகாப்பாக வாங்குங்கள்

மளிகைப் பொருட்கள் நீங்கள் வாங்கும் போதே மிகப் பாதுகாப்பான முறையில் வாங்கவேண்டும். கடையில் வேலை செய்பவர்களின் கைகள் படாமல் அதை நீங்கள் கொண்டு சென்ற பைகளில் வாங்கிக்கொள்ளுங்கள். பின்பு வீட்டிற்கு வந்தவுடன் அந்த பைகளை கையுரை போட்டுக் கொண்டு திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக வெளியே எடுக்க வேண்டும். ஒருவேளை வைரஸ் தொற்றுக்கள் நீங்கள் வாங்கி வந்த உணவு பொருட்களில் இருந்தாலும் அதை கையாளும் போது நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். எனவே இந்த வேலைகள் அனைத்தையும் முடித்த பிறகு உங்கள் கைகளையும் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – கொரானாவின் ஆய்வுகளில் முடிவு நெருங்குகின்றது

சமைக்கும்போது கவனியுங்கள்

நீங்கள் காய்கறிகளை ஒரு முறைக்கு பலமுறை நன்கு கழுவிக் கொள்ளுங்கள், பின்பு அதை சமைக்கும் பொழுது உண்டாகும் வெப்பத்தினால் கொரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் எந்த ஒரு வைரஸ்களும் உயிர் வாழாது. எனவே சமைத்த உணவுகளை நினைத்து பயப்பட வேண்டாம், ஆனால் சமைத்து பிறகு மீண்டும் ஒருமுறை உங்கள் கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நம் பயன்படுத்தப்படும் பணத்தில் கூட இந்த வைரஸ் தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே முடிந்த வரை நீங்கள் கொண்டு செல்லும் பணத்தை முழுமையாக செலவு செய்யுங்கள், மிச்சப் பணத்தை வாங்குவதை தவிர்த்து அதற்குப் பதிலாக கூடுதலாக ஏதேனும் பொருளை வாங்கிக் கொள்ளுங்கள். இதன் மூலமாக அடுத்து வரும் நாட்களில் கொரோனா வைரஸ் உங்களை தாக்காமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன